முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

July, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கண்ணாடி வளையல்கள்...

கையில் உறவாடும்,
கற்பனை கனவு...
காதல் ஓசை எழுப்பும்,
சங்கீத உறவு...

கழற்றினேன்...
மழையில் நீ சிரித்தது..
மாலையில் நீ பார்த்தது...
மழலையாய் நீ பேசியது....
மனதுள் நீ நுழைத்தது...
ஞாபகம்...

கழற்றினேன்...
உயிர் உள்ளே நின்ற நீ...
உடையாமல் வெளி வந்த,
தவிப்பு...

கழற்றினேன்...
எனை விட்டு நீ பிரியும்...
உணர்வு...

கழற்றினேன்...
உனை நினைத்து,
நினைத்து.....

மழைக் கால நினைவுகள்...

மழையில் நனைந்த நேரம் ,
மனதின் ஜன்னல் ஓரம் ,
மலரே உன் முகம் தோன்ற,
மறந்தேன் ஒரு நொடி சிரிக்க,
முயன்றேன் மறு நொடி அழுதிட,
மழைக் கால நினைவாய்....,
மனதில் என்றும் நீயே நிற்பாய்.....

உறவுகள் தொடர்கதை :-

பல நெஞ்சங்களை நேசித்த பாசம் உண்டு,  பல நெஞ்சங்களை நோகடித்த பாவமும் உண்டு,
பல முறை சிரித்த சிலிர்ப்பு  உண்டு, பூகம்பம் போல வெடித்த  கோபமும் உண்டு,
பல சமயம் பகல் எல்லாம் சிரித்து, இரவில் மழை பொழிந்த, கண்களும் என்னிடம் உண்டு... பல வேளை பாசத்தை உதறி, பரிகாசம் செய்த அனுபவம் உண்டு, :(
பல அனுபவம் இருந்தாலும், சில சமயம் சாமர்த்தியம் போதாத, சிரமமும்  உண்டு....
புது, அனுபவமாய் நீ வந்து, அனுசரணையாய் கை கோர்த்து... வழி நடத்திச் செல்ல, வாசலில் காத்து நிற்கும்... உன் கண்கள் நான்.....
உறக்கம் தொலைத்து, மூழ்கி விட்டேன், உன்னை கற்பனை செய்து...., உறவுகள் தொடர்கதை, அதில், உன் வரவு மட்டும் மலர் மழை...