முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அம்மா சொன்ன கதை - தவளை ராசா !!!

இப்போ உங்க அம்மா கத சொல்ற மாதிரி கற்பனை செஞ்சுக்கோங்க... ஒரு நாளு குட்டி வயசுல., சாப்பிடாம அழுதுகிட்டு இருந்தேன்.. அம்மா கத சொல்ல.. "ஆ,,,"ன்னு கத கேட்டு சாப்பிட்டு முடிச்சேன்... அது என்ன கத சொல்லட்டா..?!! அது தான் தவள ராசா கத... " ஒரு ஊர்ல ஒரு அழகான பொண்ணு இருந்தாளாம்.. அவள கல்யாணம் பண்ண எல்லா நாட்டு ராசாவும் ஆசப்பட்டாங்களாம்..!!! ஆனா அவளுக்கோ யாரையும் புடிக்கலையாம் அவ தோழிங்க எல்லாரும், அழகான ராசாவ கல்யாணம் செஞ்சாங்களாம்.. இவளோ,.. அவள, ஒரு நாள் தண்ணில விழுந்தப்போ, காப்பாத்துன தவளைய தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டாளாம்... வேற வழி இல்லாம., அவ வீட்லயும் கல்யாணம் பண்ணி வச்சிட்டாகளாம்!!!! கல்யாணம் ஆகி அந்த பொண்ணு , அந்த தவள ராசாவ நல்ல பாத்துகிட்டாளாம் கல்யாணம் ஆகி 30 நாள்ல தவள ராசா., அழகான இளவரசனா மாறிட்டாராம்.... அவங்க ரெண்டு பேரும் அடுத்து, சந்தோஷமா இருந்தாங்களாம்." நீதி :- அழகா இருக்கிறது முக்கியம் இல்ல., அன்பா இருக்கணும்., எல்லா உயிரினத்துட்டையும் அன்பு காட்டணும்.. என்ன புரியுதா செல்லம்???

கண் சிமிட்டினாய்!!! ♥

ஏன் இப்படி?!!!!

என் தோழிக்காக ♥

நீ இல்லாமல் போனதும்!!!

கற்பது எதற்காக?

நாம் பள்ளி சென்றோம்., கல்லூரி சென்றோம்., சிலர் தமக்கு விருப்பமானவற்றைக் கற்க., பலர் தமக்கு விருப்பமற்றவையைக் கற்க., அனைவரும் கற்கிறோம்., கல்வி பயில்வதன் பின்னோக்கம்? பணம்.,? புகழ்? வேலை? வேறு ஏதேனும்? இருக்கலாம்., ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கலாம். கல்வியின் நோக்கம் எதுவாக இருப்பினும்., கற்றோர் எதைக் கற்றார்கள் என்பதைப் பொறுத்தே., அதன் வெற்றி. அனைவரும் கல்லூரி சென்றாலும்., நம்மில் எத்துனை பேர் நேயம்., ஒழுக்கம், பற்று இவற்றைப் பெற்றோம்?? கல்வி முறை எப்படி இருப்பினும்., நாம் எப்படி இருக்கிறோம்.,? நம் குணம் என்ன என்பது நம்மைச் சுற்றி உள்ள நட்பிடம் இருந்தும்., பெற்றோர்  உறவினர்களிடம் இருந்தும் தான் கிடைக்கிறது, சாதி, மதம், மொழி, இனம் என சிறுவயது முதலே பெற்றோர் பிள்ளைகளிடம் விதைத்தால்? அதுவே பின்னாளில்  பிரிவினைக்கு வழி வகுக்காதோ? இன்று நான் காணும் பலரும் ஏதேனும் ஒரு வகையில் மற்றொருவர் மீது தாழ்ந்த எண்ணம் கொண்டவராக இருக்கக் காரணம்? பிஞ்சிலேயே நஞ்சு விதைக்கப் பட்டது தானா? தாழ்ந்தவன் உயர்ந்தவன் என்று பிரிவு ஏன்? படித்தவனாக இருப்பினும் தேர்தலில

பாகுபாடின்றி நேசிப்போம் !!!

"ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார் வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போ மென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்" -- பாரதியார்    பெண்களின் நிலை மிகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆயினும் சில இடங்களில் பெண்கள் சில கொடுமைகளை அனுபவித்து தான் வருகிறார்கள். நான் இங்கு பெண்களுக்குச்  சாதகமாய், பெண் உரிமைக்குக் குரல் கொடுக்க முற்படவில்லை.  கிடைத்த  உரிமைகளையும் , சுதந்திரத்தையும் தவறாகக் கையாளும் சில பெண்களைப் பற்றியும்., பெண்களைத் தாழ்வாக என்னும் சில ஆண்களைப் பற்றியுமே  எழுத முற்படுகிறேன்.   பெண்களுக்கு எதிரான செயல்கள், கொடுமைகள் இன்றும் பல இடங்களில் நடந்து வந்தாலும்., சில பெண்களால் ஆண்களுக்கே துன்பம் ஏற்படும் அளவிற்கு, சில இடங்களில் பெண்கள் அதீதமாக முன்னேறி இருக்கிறார்கள். ஏதேனும் வெறுப்பு இருப்பின், கணவரின் மீதே பொய்ப் புகார் கொடுக்கும் பெண்கள் இன்று பெருகி வருவதென்னவோ  உண்மை தான்.    இயற்கையிலேயே, பெண்கள் உடல் அளவில் பலவீனமானவர்களே. ஆண்களின் துணை பல இடங்களில் தேவை தான் எமக்கு. ஆயினும் இதனால் பெண்கள் தாழ்ந்தவர்கள் என்றில்ல

முதுமையிலும் நேசிப்பேன் உன்னை :

சுற்றுப்புறத்தை மாசுபடுத்தாமல் காத்திடுவோம்.!!

பொய் சொல்லும் அழகியே :-

நான் பேசிக்கொண்டே இருந்தாலும்., பதில் ஏதும் பேசாமல்., பார்வையில் வைத்தியம் பார்த்தவளே!!! பின்னால் துரத்தி வந்தாலும்., பார்வை மட்டும் வீசி., பொய்யாய் மிரட்டிய இரு விழியே., இப்படியே பேசாமல் இருந்திருக்கலாம்., ஏனடி பேசினாய்? பொய் மடல் வீசினாய்??!! பொய்கள் தொடுக்கும் உன் வார்த்தைகளை விட., மெய் பேசிய அன்றைய உன் பார்வை ஜாலங்களிலேயே., உருகி உருகியேனும் வாழ்ந்திருப்பேன்., பொய் பேசி , ஏனடி கொன்றாய் என் அழகே? !! பொய்கள் பேசும் என் அழகே..

என் தமிழ்த் தோழர்களுக்காக.

ஒரு மணி நேரம் :-

நிம்மதி அடைகிறேன்., உன் நினைவுகள்., இரவெல்லாம் படுத்தாமல்., ஒரு மணி நேரத்தில்., உறங்க அனுமதி  அளிப்பதால்...

காதல் :-

இமை மூடா இரவுகளில், அடை மழையாய் துடிக்கும் இதயம்..

தற்பெருமை தவறில்லை :-

காலில் குருதி வடிந்தாலும் கண்ணில் ஈரம் கசிந்தாலும்.. துவளாமல் நான் பெற்ற., துணிவு என் வெற்றி! தவம் போல் தியாகம் செய்து.., தினமும் உழைப்பை விதைத்து... சிறிது சிறிதாய் நான் பெற்ற., சீற்றம் என் வெற்றி! உறக்கமும் குறைத்து., உறுதியை விதைத்து., உற்சாகமாய் நான் பெற்ற., உன்னதம் என் வெற்றி! தந்தையின் வேர்வையும்., தாயின் வாஞ்சையும்., கலந்தது என் வீர வெற்றி! என் வெற்றியைக் கண்டு களிக்கும் என் நட்பிடம்., என் உழைப்பை ., என் வெற்றியைப் பகிர்வது ., தற்பெருமை எனில்... தோழா.. தற்பெருமை, தவறில்லை!!!!

அக்மார்க் பத்தினி :-

(கணவனின் கொடுமையை பொறுத்து., பொறுமை காத்த., காவியப் பெண்ணின் குரல்.. இந்தப் பொறுமையே.. வெல்லும் என்றும்.. கெட்டவனும் கள்வனும்.. திருந்தி வருவான்.. தீயோரையும் உருக்கும் அன்பு...) பச்சருசி சாதம் வடிச்சி., பாத்து பாத்து காத்திருந்தேன்., பாவி மனுசன் வந்ததுமே., போட்டு அடிச்சு என்ன நோகடிச்சான்!!! பாவம் மச்சான் அடிச்சாலும்., பாத மாறிப் போனாலும்., நிதமும் பாசமும் பொழிவானே!!! என்ன கோவம் வந்தாலும்., "கொனட்டிப் பேசும் சொல்லழகி ", நீ , கொஞ்சுற வார்த்த போதாதோ.. காத்து நிப்பேன் காலமெல்லா .. உசுரா நெனச்சேன் நான் உன்ன., உசுர உசுரே கொல்லாது., கும்புட்டு நிப்பேன் எஞ்சாமி ., கோவப்பட்டு நீ அடிச்சாலும்...

நிழல் தேடி :-

நித்தம் ஒரு வண்ணம் காட்டி., நிதம் ஒரு வார்த்தை பேசி., நீயா ஏமாற்றினாய்...???!! அன்பின் இரு விழி ஊடே.., அன்பே,... இரும்பு ஊசி ஏற்றி., அறுத்து நீயா விளையாடினாய்???!! குருதி வழிய., கதறி அழுத என்னை., கள்வனே., நீயா நெஞ்சில் உமிழ்ந்தாய்??!! எரியும் உடலில்., எஞ்சி இருப்பது., என் உயிர் மட்டுமே., அதை பிரிய விடமாட்டேன்.. சீக்கிரம் நிழல் தேடி., சுவாசம் பெறுவேன்., காரணம்., என் ரணம் களைந்த பின்னால்., உன்  கண் பார்க்க நேர்ந்தால்., பரிசளிக்க., வேண்டும் அதை உனக்கு. நிழலைத் தேடி... நித்திரையை விரிக்கிறேன்... நீ விலகி வழிவிடு ..!!!

கண்ணாடி உறவுகள் :

அழகாய் உருவம் பார்த்து நின்றேன்., ஆயுதமாகப் புயல் வீசி உடைத்தாய்., இம்சித்துக் கொள்ளேன் என்னை., மீண்டும் ஒன்று சேர்த்து.. உருவம் பார்த்து.. உடைத்தது உடைத்தாய்... உருகாதே மீண்டும் வந்து., கரம் கோர்க்க மாட்டேன்.. உறுதியாக...

நானும் தான் ...

தாமரைக் குளம் :

தண்ணீராய் நீ இருந்த நேரம்., தினம் நீந்தி ஆனந்தம் கொண்டேன்.. வெயிலின் கொடுமையோ., மழையின் வறுமையோ.. மாதங்கள் கடந்ததில்.. மழையும் பொய்த்ததில்., நம் உறவும் பொய்த்ததே வாடினேன்.. நீ வற்றியதும்., பறக்கும் பொய்யான உறவு நானல்ல... வாடிய வறண்ட உன்னை., என்றும் பிரியேன்.. வண்ணம் உன்னிடம்., வரும்வரை.,வாடியேனும் உன்னுடன் ., உறங்கிடுவேன்... அனுமதி வேண்டி ., உன் தாமரை..

பனியிலும் எரிகிறேன் :

நிஜம் என்ற பெயரில்., நான் கூறிய பொய்கள்., பொய்களை புன்னகையோடு, பேசினேன்.., நம்பினாய்.. பொய்கள் சொன்னது., உன் நன்மைக்கோ., என் நன்மைக்கோ.. அறியேன்.. ஆனால் நன்மைக்கு ., ஆயிரம் காயம், உனக்கு நான் தருவது., நன்மைக்கே.. புரிதலை புன்னகையாக்கி பூவாக பரிசளித்தாய்., பேசாமல் புண்ணாக்கினேன், நான்.. நான் சொன்ன பொய்களை ., எண்ணி பனியிலும் எரிகிறேன்., என்னை.. விட்டுச்செல் ., உன் எண்ணங்களை மறந்தாவது ., குளிர் காய்கிறேன் இனியாவது... உன் ரணத்திற்கும் மருந்தாகட்டும்., என் பிரிவு..

கதை பேசிய காலங்கள் :

♥ கண்ணோடு கண் பார்த்து., காலம் கடப்பது அறியாமல்., நீயும் நானும்., நீண்ட நேரம் பேசிய கதை எல்லாம்., கனவாகிப் போனதால்., கலங்கவில்லை நான்., ♥ கை கோர்த்த நீ., கரம் உதற., கதறவில்லை நான்., ♥ இன்றும்., கதை பேசுகிறேன்., உன் நினைவுகளோடு., நிலவுடன்... பிரியா உறவு., நிலவு....