முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒத்துழைப்போருக்காக !!!

சுய முன்னேற்றம், சுய உதவி., மக்களாட்சி !!! சுயமெல்லாம் ஒன்றாகி., கூட்டுப் பொறுப்புணர்வு கூச்சலாக வெளிவரட்டும்!!! ஆணோ பெண்ணோ., சாதி., மத பேதம் இல்லாமல்., ஒன்றாய் உழைத்திடுவோம்..!!! உனக்கும் எனக்கும் தேவையாகிப் போன ஊரில் உள்ள அனைத்தையும்., ஒற்றுமையோடு பகிர்ந்து பெறுவோம்..!!! ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல்., ஊர் வம்பு பேசி வீணாக்காமல்., கற்றுக் கொடுப்போம்., கற்றுக்கொள்வோம்... தொடர் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவோம்..!!! சிறு சிறு துளிகளாக., சேர்ப்போம் முதலீட்டை., ஒற்றுமையாக..!!! மின்மினிப் பூச்சிகளின் மினுக்கங்கள் மின்னலாகட்டும்...!!!

தொடர்கதை ---> பாகம் 12 ---> சிக்ன(க)ல்

                                                                                                      (பாகம் 11 படிக்கவில்லையா ? இந்த link உபயோகப்படுத்துங்க தொடர்கதை ---> பாகம் 11 ---> சிக்ன(க)ல்    படிச்சிட்டு, இங்க வாங்க) இரவு வெகு நேரம் அழுது இருந்ததால் ; சற்று கண்கள் வீங்கி இருந்தது சுவாதிக்கு; இருப்பினும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் விழித்திருந்தாள் ; குழந்தை போலவே தோன்றினான் அருகில் உறங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணா; கண் இமைக்காமல் பார்த்திருந்தாள் அவனை.. அன்று தான் முதன் முதலில் பார்ப்பது போல; நினைவுகள் பின் நோக்கி நகர்ந்தது அவளுக்கு.... முப்பத்தி ஐந்து வயதில் சுவாதி... வீட்டில் அடைபட்டு இருந்த பொழுது... அன்று காலை., வழக்கம் போல எழுந்து அம்மாவின் அறைக்கு டீ எடுத்துச் சென்றாள் சுவாதி; " அம்மா ., டீ எடுத்துட்டு வந்த்ருக்கேன் மா... எடுத்துகோங்க... " கைகளால் அம்மாவை தட்டி எழுப்பினாள்; அசைவே இன்றி குளிர்ந்து இருந்தது அம்மாவின் உடல்... அதிர்ந்து போன சுவாதி... Hall - ல் படுத்திருந்த அப்பாவிடம் ஓடினாள் ... " அப்பா அப்பா .... அம்மா அசையாம

கோச்சுக்கிட்டேன் போ!!!!

                                                  தலையணைக்கு அழுகை வந்து திணறிப் போனது  உன்னால் தான்!!! கொஞ்ச நேரம் பேசாமல் ஒளிந்து கொண்டு  ஓரமாய் ஒதுங்கினேன்!!! ஐந்து நிமிடம்  தேடிய பின்பு., அய்யோ பாவம் என், அம்முகுட்டியின்  ஆசை முகம்  வாடிப் போனது!!! ஓரத்தில் இருந்து எட்டிப்  பார்த்தேன்...!!! படபடத்து ஓடி வந்து., செல்லமாய் அடித்தாய் என் பின்னால் முதுகிலே..!!! பதிலுக்கு ஓடிச் சென்று கட்டிலில் நான்  என் தலையணையைக்  கட்டி அழுக., கோபம் வந்து  உன் தலையணையால் என் மீது மீண்டும் உரிமையோடு நீ அடிக்க!!! தலையணை அழுகுது  உன்னாலே.. என் தலைக்கனம்  குறையுது  தன்னாலே!!! தித்திப்பாய் மீண்டும் மீண்டும்  வேண்டும் என்று., நீயும் நானும் சிறுவயதில் போட்ட தலையணைக்  கூச்சல்கள்., தீராமல் தொடர வேண்டும்.., என்றும் என்றென்றும்.., தீயாக பரவும்  உன் எண்ணம்  எங்கும் எங்கெங்கும்!!!

நட்போடு ஒரு பயணம்!!!

                                    பல ஆயிரங்கள் கொடுத்து பகட்டாக பயணிக்கும் கூட்டத்திற்கு  புரிய வாய்ப்பில்லை!!! காசு அதிகம் இல்லாமல் கூட்டம் சேர்த்து  கூட்டிச் செல்லும்; நண்பர்கள் கூட்டம் இடித்துக் கொண்டு; என் மடியில் நீயும் உன் மடியில் நானும் நசுக்கிக் கொண்டு; ஐம்பது ரூபாய் கட்டணத்தை ஐந்தாக பகிர்ந்து கொண்டு; போகிற போக்கில்  புதிது புதிதாக பாட்டி, தாத்தா,  பெருசு சிறுசு என , புதுப் புது மனிதர்களை  ஏற்றிக்கொண்டு, கைப்பேசியில், கடலையை கச்சிதமாக  வறுத்துக் கொண்டு, பின்னாடி ஓடி வரும், பந்தயம் கட்டிய., காலை மாட்டு வண்டிகளை ரசித்துக் கொண்டு, நான் இருக்க., போய்க் கொண்டே இருந்த அந்த "ஷேர் ஆட்டோ" திடீரென  நின்றது, " மாமா... வாங்க.. மாப்ள வண்டி வச்ருக்கப்போ., நடந்து போலாமா..நீங்க.." பாசத்தோடு ஓட்டுநர் குரல் எழுப்ப., ஓடி வந்து  ஒய்யாரமாய் அமர்ந்தார் ஒரு குச்சி மனிதர்..!!! இத்தனை கூத்தும்., இன்பமாய் நடந்து முடிய.. இறங்கும் இடம் வந்து விட., இறங்குவதே பெரும்பாடாகி, அதற்கு ஒ

தொடர்கதை ---> பாகம் 11 ---> சிக்ன(க)ல்

                                                 ( பாகம் 10  படிக்கவில்லையா?   இந்த link உபயோகப்படுத்துங்க  தொடர்கதை ---> பாகம் 10 ---> சிக்ன(க)ல்   படிச்சிட்டு, இங்க வாங்க இருளில் கரைந்து கொண்டிருந்தது இருவரின் வாழ்க்கையும்... இரண்டு ஆண்டுகள் முழுவதாய் ஓடி இருந்தது... ஆயினும்., பேசாமலும்., பார்க்காமலும்., காதல் ஊற்றாக ஊறிக் கொண்டே இருந்தது இருவருக்குள்ளும்... சுவாதி தான் சொன்னது போலவே பெண் பார்க்க வந்தவர்களிடம் எல்லாம் தன் காதல் கதையை ஒப்பித்து இருந்தாள்!!! பெண் பார்க்கும் படலத்தின் முற்றுகை ஓய்ந்து இருந்தது அந்த இரண்டு ஆண்டுகளில்... ஒரு நாள்... " அப்பா... என்னால கிருஷ்ணாவ மறக்க முடியலப்பா.. please எங்கள சேத்து வைங்கப்பா..." மெலிந்து வாடிய மலராய் மாறிப் போய் இருந்தாள் சுவாதி... " முடியாது.... என்னால முடியாது... நம்ம சொந்தத்துல யாரும் இத ஒத்துக்க மாட்டாங்க... என் மானம் ஏற்கனவே பாதி போயிருச்சு., மீதியையும் வாங்காத., நீ கல்யாணமே பண்ணாமப் போனாலும் பரவா இல்ல.., நீ கிருஷ்ணாவ கல்யாணம் பண்ணக் கூடாது..." எறும்பு ஊறி ஊறி எறும்பு தான் தேய்ந்தத

ஒத்தப்பட்டியை நோக்கி....!!!!

சுள்ளி கொளுத்தி, சுற்றி அமர்ந்து , சுகமாய் விளையாடும் சிறுவர்கள்!!! கிண்டிக் கிளறி ., கொக்கரித்து ஓடும்., பெட்டைக் கோழிகள்!!! குச்சிகளை நட்டி., குறைந்த செலவில்., " ஸ்டெம்ப் " செய்து விளையாடும்., கிரிக்கெட் சிறுசுகள்!!! கிழிந்த அழுக்குக் கைலி கட்டி., "ஹெட் போனில்" பாட்டுக் கேட்கும்., இளசுகள்!!! சாக்கடை மேட்டில் ., சுத்தம் அடையும்., பத்துப் பாத்திரமும்., பாமர அம்மாக்கள்!!! பக்கத்தில் அமர்ந்து., "பீடி" ஊதிக் கொல்லும்., ஐயப்ப பக்தர்கள்!!! " மொபைல் போன் " டவரில் , " ம்யூஸிக் " வாசிக்கும்., மைனாக்கள்., குருவிகள்!!! மயான பூமியில்., கழுகுக்கு பதிலாய்., வெள்ளைக் கொக்குகள்!!! கோவில் கண்ணாடியில்., விபூதி அழகு பார்க்கும்., பள்ளிச் சிறுவர்கள்!!! போட்டி போட்டு., பந்தயம் ஓடும்., மாட்டு வண்டிகள்!!! பாட்டியே வடை சுட்டு விற்கும்., பெட்டிக் கடைகள்!!! ஓடி வரும்., கழிவு நீருடன் , காட்டு ஆறுகள்!!! பச்சையாய் பூமி., மாறிக் கிடக்கும்., வயக்காடுகள்!!!!

ஆனந்த கீதம்!!!

அந்தப் பேருந்துப்  பயணத்தில்., சிறு தூறல்  தருணத்தில்!!! நெஞ்சம் கலைந்ததே... காதல் கனிந்ததே... எந்தன் நெஞ்சத்தின் ஓரத்தில்., இசைவெள்ளம் ஓடத்தில்., நீயும் மிதக்கவே... கண்கள் சிரிக்கவே...!!! பார்த்த பார்வை., பேசிய வார்த்தை ., காதல் என்று சொன்னாயே!!!

தொடர்கதை ---> பாகம் 10 ---> சிக்ன(க)ல்

(பாகம் 9 படிக்கவில்லையா? இந்த link உபயோகப்படுத்துங்க தொடர்கதை ---> பாகம் 9 ---> சிக்ன(க)ல் படிச்சிட்டு, இங்க வாங்க) "" sir.. நாங்க மித்த lovers மாதிரி ஊர் சுத்தல sir ., உங்களுக்காகவும் என்னோட parents காகவும் தான் கட்டுப்பாடோட காத்துட்டு இருந்தோம்... இப்போ கூட உங்க சம்மதம் இருந்தா மட்டும் தான் கல்யாணம் நடக்கும்.. யோசிங்க.. இதுக்கு மேல உங்க விருப்பம்.. நான் அடுத்த வாரம் திரும்ப வரேன் sir.. அதுக்குள்ள நீங்க யோசிச்சு பாருங்க... கூட கடைசி வர இருக்க போறது.. அவளும் நானும் தான்.. எங்களுக்கு புடிச்ருக்கு sir.. யோசிங்க.. நான் வரேன் .. sir.. ., போயிட்டு வரேன் சுவாதி., போயிட்டு வரேன் மா..", தன பக்க நியாயம் சொல்லி., சுவாதியின் தாயிடமும் அவளிடமும் இருந்து விடை பெற்றான்..!!! " நீ எப்போ வந்தாலும் என் முடிவு இது தான் தம்பி.. மாறாது... நீயே கொஞ்ச நாள் போனா மறந்திருவ என் பொண்ண.. அவளும் மறந்திடுவா.. " குமார சாமி கொதித்துப் பேசினார்.. " மறக்க மாட்டோம் sir.. நாங்க மறக்க மாட்டோம்... நான் வரேன்.. நீங்க மனசு மாறுற வரைக்கும் நாங்க காத்திருப்போம்.."

தொடர்கதை ---> பாகம் 9 ---> சிக்ன(க)ல்

(பாகம் 8 படிக்கவில்லையா?இந்த link உபயோகப்படுத்துங்க     தொடர்கதை ---> பாகம் 8 ---> சிக்ன(க)ல் படிச்சிட்டு, இங்க வாங்க .) சுவாதியும் கிருஷ்ணாவும் ஊர் சுற்றாமல் ., நட்பாக கட்டுப்பாடுகளோடே பழகி வந்தனர்.. கல்லூரி இறுதி ஆண்டு..  campus interview வில் இருவரும் ஒரே கம்பெனியில் வேலைக்கு முயற்சி செய்து., தேர்வும் ஆகினர்.. ஆனால்., வெவ்வேறு கிளைகளில் வேலை அமைந்தது... கிருஷ்ணா ஹைதராபாதிலும்.. சுவாதி சென்னையிலும் கை நிறைய சம்பளத்தோடு வேளையில் அமர்ந்தனர்.. சுவாதி வீட்டில் திருமணப் பேச்சுகள் தொடங்கின... " கிருஷ் .. எனக்கு வீட்ல மாப்ள பாக்குறாங்க.. நீ வந்து எங்க வீட்ல.. பேசு.. எனக்கு எங்க அப்பாகிட்ட பேசுற அளவு தைரியம் இல்ல,,, " கிருஷ்ணாவிற்கு phone பேசி புலம்பினாள் சுவாதி.. " சுவாதி.. நீ உங்க வீட்ல நான் வரேன்னு மட்டும் சொல்லி வை.. நான் வந்து பேசிக்றேன் " கிருஷ்ணா சொல்ல.. " ம்ம்ம்.. அதுக்கு கூட எனக்கு தைரியம் இல்ல கிருஷ்ணா.. ரொம்ப பயமா இருக்கு.. ப்ளீஸ்.. சீக்ரம் நீ சென்னை வா.." சுவாதி அழுகாத குறையாக பேசிக்கொண்டு இ

தொடர்கதை ---> பாகம் 8 ---> சிக்ன(க)ல்

(பாகம் 7 படிக்கவில்லையா? இந்த link உபயோகப்படுத்துங்க    தொடர்கதை ---> பாகம் 7 ---> சிக்ன(க)ல் படிச்சிட்டு, இங்க வாங்க .) கிருஷ்ணாவிடம் " புடிச்சது " என்று சொல்லி இருந்தாலும்., நிறையவே பயமாக இருந்தது சுவாதிக்கு. " பின்னாளில்., கடைசி வரை இந்தக் காதல் நிலைக்குமா..??... குடும்பத்தில் குழப்பம் வருமா..??? அப்பா ஒதுக்கலனா..???." எண்ணம் வதைத்தது... கிருஷ்ணாவுக்கோ துளியும் பயம் இல்லை., மனதெல்லாம் ஆனந்தம் தான் நிறைந்து இருந்தது. " சுவாதி புடிக்குதுன்னு சொன்னா... ஆனா.. என் gift தான புடிக்குதுன்னு  சொன்னா... எதுக்கும் வெளிப்படையா சொல்லிடுவோம்.." நினைத்த கிருஷ்ணா அடுத்த text type செய்யத் தொடங்கினான்.. " சுவாதி.. I love you  சுவாதி., I need you near me till my life end... Love you so much.. ", கிருஷ்ணா type செய்து அனுப்ப... " ம்ம் " , அதற்கும் இரு எழுத்தில் பதில் அனுப்பினாள்!!!! சற்று அதிர்ந்தான் கிருஷ்ணா.., " சந்தோஷமே இல்லாத மாத்ரி ரெண்டு எழுத்துல reply பண்றாளே... :( "  " சுவாதி

தொடர்கதை ---> பாகம் 7 ---> சிக்ன(க)ல்

(பாகம் 6 படிக்கவில்லையா? இந்த link உபயோகப்படுத்துங்க  தொடர்கதை ---> பாகம் 6 ---> சிக்ன(க)ல்   படிச்சிட்டு, இங்க வாங்க .) கிருஷ்ணாவின் பரிசைப் பார்த்து யோசனையில் இருந்த சுவாதியின் நினைவை , கை பேசியின் ஓசை கலைத்தது.  " 1 new message" கிருஷ்ணாவின் text... வாசிக்கத் தொடங்கினாள் சுவாதி. " hey swathi.,  I loved your gift . happy to feel your care., will read it for you.... "  சுவாதிக்கு குழப்பமாக இருந்தது.. கிருஷ்ணா தந்த பரிசை எண்ணி அந்த நொடி வரை துளியும் கோபம் இல்லை அவளுக்கு. " நானும் கிருஷ்ணாவ love பண்றனா.... no.. அப்டி ஏதும் வேணாம்.... இது love பண்ற வயசா எனக்கு... அப்பாக்கு தெரிஞ்சா என்ன ஆகும்... இல்ல... கிருஷ்ணாவ நான் love பண்ணல... வேண்டாம்.." மனதுள்ளே போர் நடத்திக் கொண்டு இருந்தாள்.  அது வரை சலனமில்லாமல் இருந்த சுவாதியின் மனம்., சற்றுத் தடுமாறிப் போனது. அவள் நினைவு சுழன்றது., " கிருஷ்ணாவின் சேட்டைகள்., அவளை உருகிப் பார்த்த பார்வை., பேசும் விதம் ., பாசமாக விசாரிக்கும் வார்த்தைகள்.." என எல்லாமே அ