முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை ---> பாகம் 11 ---> சிக்ன(க)ல்

   


                                            




( பாகம் 10  படிக்கவில்லையா?  இந்த link உபயோகப்படுத்துங்க 
தொடர்கதை ---> பாகம் 10 ---> சிக்ன(க)ல் படிச்சிட்டு, இங்க வாங்க


இருளில் கரைந்து கொண்டிருந்தது இருவரின் வாழ்க்கையும்...


இரண்டு ஆண்டுகள் முழுவதாய் ஓடி இருந்தது...


ஆயினும்., பேசாமலும்., பார்க்காமலும்., காதல் ஊற்றாக ஊறிக் கொண்டே இருந்தது இருவருக்குள்ளும்...


சுவாதி தான் சொன்னது போலவே பெண் பார்க்க வந்தவர்களிடம் எல்லாம் தன் காதல் கதையை ஒப்பித்து இருந்தாள்!!!


பெண் பார்க்கும் படலத்தின் முற்றுகை ஓய்ந்து இருந்தது அந்த இரண்டு ஆண்டுகளில்...


ஒரு நாள்...


" அப்பா... என்னால கிருஷ்ணாவ மறக்க முடியலப்பா.. please எங்கள சேத்து வைங்கப்பா..."


மெலிந்து வாடிய மலராய் மாறிப் போய் இருந்தாள் சுவாதி...


" முடியாது.... என்னால முடியாது... நம்ம சொந்தத்துல யாரும் இத ஒத்துக்க மாட்டாங்க... என் மானம் ஏற்கனவே பாதி போயிருச்சு., மீதியையும் வாங்காத.,
நீ கல்யாணமே பண்ணாமப் போனாலும் பரவா இல்ல.., நீ கிருஷ்ணாவ கல்யாணம் பண்ணக் கூடாது..." எறும்பு ஊறி ஊறி எறும்பு தான் தேய்ந்தது., கல்லாகவே இருந்தது குமாரசாமியின் மனம் கரையாமல்...!!!!


சுவாதி சுருண்டு போனாள்.,


முப்பது  வருடங்களுக்குப் பின்.,


" ஏ சுவாதி.. நீ இவ்ளோ வருஷம் ஆகியும்., மொத மொதல்ல.. என்கிட்டே எப்டி பாசமா பேச ஆரம்பிச்சியோ அதே மாதிரி பாசமா இருக்கியே.. நான் குடுத்து வச்சவன்ல..??! " , அழுந்த முத்தமிட்டான் சுவாதியின் நெற்றியில் அறுபது வயதைத் தொட்டிருந்த கிருஷ்ணா..... !!!!


" நீயும் அப்டியே தான் இருக்க கிருஷ்ணா ., பாசமும் குறும்பும் மாறாம.." மடியில் சாய்த்துக் கொண்டாள் கிருஷ்ணாவை சுவாதி...!!!!


ஆனந்தமாய் இணைந்து இருந்தார்கள் இருவரும்..


" கிருஷ்ணா ., நம்ம பக்கத்து வீட்டு அம்முவுக்கு சாக்லேட் வேணும்னு கேட்டா.., எனக்கும் கொஞ்சம் கடைக்கு போகணும்... போயிட்டு வருவோமா சாயங்காலம்? " , தள்ளாத வயதிலும்., இளமைக் காதலோடு இருந்தார்கள் கிருஷ்ணாவும் சுவாதியும்...!!!


" சரி.., போயிட்டு வருவோம்.. வேண்டாம்னு சொன்னா விடவா போற..." , கிருஷ்ணா செல்லமாக சலித்துக் கொண்டான்...!!!


மாலையில் கடையில் :


இருவரும் சாக்லேட் வாங்கிக் கொண்டு இருந்தார்கள்.., அப்போது பின்னே இருந்து ஒரு முதியவள் "சுவாதி...!!?! " , சுவாதியைக் கூப்பிட., திரும்பினாள் சுவாதி...


" நீங்க... எங்கயோ பாத்தா மாதிரி இருக்கே...!!!! ஆனா சரியா தெரில.. " , யோசிக்க முயன்றாள் சுவாதி..


" ஏ... நான் தான்டி உன் friend  கவிதா ??., college - ல ஒண்ணா படிச்சோமே.. ., நீ கிருஷ்ணாவ ரொம்ப கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டனு கேள்விப்பட்டேன்டி.. ஆனா பாக்க தான் வர முடியல.. நேத்து தான் foreign-ல
இருந்து வந்தேன் என் பையன் , பையன் பிள்ளைங்களோட..." பேசிக்கொண்டே போன கவிதாவின் பேச்சைக் கேட்டு , கண்கள் கலங்கிப்போனாள் சுவாதி..!!!


" என்ன சுவாதி என்னாச்சு ? ஏன் ஒரு மாதிரி கண் கலங்குற??? " , கவிதா கேட்க...


சுவாதி மௌனமாய் ஏக்கத்துடன் கிருஷ்ணாவின் முகம் பார்க்க...


" ஒண்ணும்ல கவிதா உன்ன ரொம்ப நாள் அப்புறம் பாக்கிறதால சந்தோஷத்துல கலங்கி நிக்கிறா., எங்களுக்கு late ஆய்டுச்சு., கண்டிப்பா நாளைக்கு  வீட்டுக்கு வரணும் ., வரும்போது மறக்காம உன் பேரப் பிள்ளைகள 
கூட்டிட்டு வா கவிதா..." கிருஷ்ணாவும் சற்று வருத்தம் கலந்த குரலில் பேசினான்.. , வேகமாக விடை பெற்று வீடு சென்றனர் இருவரும் ...


வீட்டில்....


" கிருஷ்ணா... நமக்கும் கொழந்த இருந்துருந்தா.. இப்போ பேரன் பேத்தி இருந்துருப்பாங்க இல்ல? " ஏக்கத்தோடு கிருஷ்ணா மடியில் சாய்ந்திருந்த சுவாதி கேட்க...


" ஆமா இருந்திருப்பாங்க... " ., உடைந்து அழத் தொடங்கினான் கிருஷ்ணா...!!!!


பதறிப்  போன சுவாதி ., " ஏன் இப்டி அழுகுற கிருஷ்ணா... நீயே உடைஞ்சு போனா... எனக்கு யாரு ஆறுதல் சொல்லுவா... கொழந்த இல்லனா என்ன கிருஷ்ணா... நமக்கு என்ன கொறச்சல்.., நீ என்னையும்.. நான் உன்னையும் பாசமா பாத்துக்றோமே..." கிருஷ்ணாவின் கண்ணீர் துடைத்து அவளும் அழத் தொடங்கினாள் சுவாதி...


அவள் கண்ணீரை அவன் துடைக்க., அவன் கண்ணீரை அவள் துடைக்க., ஒருவரை ஒருவர் தட்டிக் கொடுத்தவாறு உறங்கிப் போனார்கள் அந்த இரவு...


                                                               ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥


எப்படிச் சேர்ந்தார்கள்???


குழந்தை இல்லாமல் போனது ஏன்....???


அடுத்த பாகத்தில் தொடரும்...!!!

கருத்துகள்

  1. thanx for the wonderful ending.. i loved it..

    காதலன் அன்னை ஆகும் நேரம்
    காதலி தெய்வமாகும் தருணம்...

    தள்ளாத வயதிலும்
    இலகுவான இருதயத்தில்
    தாளாமல் பொழியும்
    பொலிந்து நிறையும்
    நிறைந்து வழியும்
    அற்புத ஊற்றே காதல் ...

    பதிலளிநீக்கு
  2. எறும்பு ஊறி ஊறி எறும்பு தான் தேய்ந்தது... nyc..:-)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்