முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தீயிலிட்டேன்!!!

அதிகாலையில் சேவல் கூவ, இன்று காலை, என் வீட்டில், கணபதி ஹோமம்!!! அனுமதிக்காமல்!! இரண்டு மணிக்கே துயிலெழுந்து, தீபம் ஏற்றித் துவங்கினோம்!! --- கணபதி ஹோமம்!!! உண்ணும் பண்டம் அனைத்தும்., தீயிலிட்டோம்!! "பொங்கல், புளியோதரை?!!" இதை எல்லாமா யாகத்தில் போடுவர்?!! ஒரு வேளை உண்ண வழியின்றி, ஒரு கோடி பேர் இருக்கும் ஒரு தேசத்தில்., உணவைத் தீயிலிட்டு, வழிபடும் முறை, தேவைதானோ? " தேவை இல்லை!!! " பளீரென மனம் சொன்னாலும், அம்மா அப்பாவின் ஆணை (ஆசை.,) வேறு வழியின்றி, தீயிலிட்டேன்!!! "பொங்கலும் புளியோதரையும்!!!" தீயிலிட்டேன், என் எண்ணங்களையும்., எதிர்ப்பையும்., வாய் பேச இயலா., அப்பாவி இந்தியப் பெண்ணாய்!! :'( :(

காதலில் பதம்!

கருப்பட்டிக்கட்டி போல், கடினமானது தான், என் மனம், முதல் வார்த்தை நீ மொழியாத வரை! கசிந்து உருகியதே, காய்ச்சினாய் காதலால், கள்வா, என்னுள்ளத்தை! முதல் வார்த்தை பேசியதும், கம்பிப்பதம் அடைந்தது, மறுவார்த்தை பேசியதும், முத்துப் பதம் கொண்டது! காதல் நீ சொன்னதும், கரைந்தே போனது, முழுவதுமாய்...! உருக்கி உருக்கி, உன் காதலால், சாக்லேட் சிலையாய், செதுக்குகிறாயே என்னுள்ளத்தை, உனக்காக, உனக்காக, செதுக்குகிறாயே என்னுளத்தை, நீயே உனக்காக! ----------------------- குறிப்பு: கம்பிப் பதம், முத்துப் பதம் ---> சீனி அல்லது கருப்பட்டிப் பாகு தயாரிக்கும் பொழுது, உருகிய திரவத்தின் பக்குவத்தைக் குறிக்க பொதுவாக உபயோகிக்கும் வார்த்தைகள்.

கவிதை எழுதும் நேரம்!

கட்டுப்பாடோடு கூடிய சுதந்திரம் ---> ஊஞ்சல் போலே! உயிரில் கலந்த அன்பு ---> மழையில் ஈரம்! இரக்கம் கொண்ட மனம், ---> இரவில் நிலா! தூக்கம் இல்லா இரவு, --->  தேங்கிய ஆறு!! உவமைகள் தேடித் தேடியே, உருவம் இழக்க நேருமோ எனக்கு? தாவிடும் கடல் அலை போல், தேடலும் சிந்தனையும் ஓயாத எந்தன் மனது தாவுது உவமை விட்டு உவமை --->குரங்கோ என் மனம்?!! சொல்லடி தோழி? ஏனோ என் கருத்துக்கும் உவமைக்கும், பொருத்தம் தேடி புலம்புதடி தோழி, பக்குவம் இல்லா என் குட்டி மனம்!

எனக்காக நான்!!

மழைத்துளி மீண்டும், என்னை நான் பார்க்கிறேன்!!!  மேலே செல்லட்டும்!! பறவைகளெல்லாம்  பூக்களாகட்டும்!!  கடிகார முள்ளில், மீன்கள் முளைக்கட்டும்! இரவில் என் வானம், வண்ணங்கள் காணட்டும்!! மரங்கள் எல்லாம், மலர் தூவி பேசட்டும்!!! இரவே இரவே, விடியல் விதைக்கட்டும்!! வசந்தம் பாலையில், பூரிப்பு சேர்க்கட்டும்!! நான் தொட்டதும் சிலைகள், உயிரோடு பிறக்கட்டும்!! என் ஓசை கேட்க, உலகம் உறையட்டும்!!! என் கால்கள் தீண்ட, நட்சத்திரங்கள் மண்ணில் பதியட்டும்!!

காதலனே...! காதல் வேண்டாம்!!!?

உயர்ந்த மரத்தின், உச்சிக் கொம்பில்., அமர்ந்து கூவுது, என் மனம்!!! ஓடும் நதியின், தண்ணீர் துளியில், சிக்கிச் சுழலுது, என் மனம்!! மேகத்தின் ஊடே, ஒழுகி வழியுது, கண்ணீராய் மாறிய, என் மனம்!! காதல் வேண்டாம், காமம் வேண்டாம், காகிதத்தில் கிறுக்குது, என் மனம்!!  கைகள் கோர்க்க, நின் கரம் வேண்டாம், நெருக்கம் வெறுக்குது, என் மனம்!! தினம் வைத்து, தடுக்க வேண்டாம், வாழட்டும் என்றும், " நம் மனம் "!!!

பருப்பு (nuts) !!!

நேற்று , "ARUN UNLIMITED" குளிர் களி ( ஐஸ் கிரீம்) கடைக்குச் சென்றோம். அங்கு நடந்த உரையாடல் : அப்பா : நாலு கப்(cup) வெண்ணிலா ஐஸ் கிரீம் தாங்க! அத்தை : பருப்புப் (nuts )போடாம வேணும் எனக்கு! கடைக்காரர் விசித்திரமாகப் பார்த்தார் அத்தையை! (Nuts என்று சொல்லாமல் பருப்பு என்று சொன்னார்களாம்!!!) ஒரு நொடி நானே கூட, ஏன் அத்தை " nuts என்று சொல்லி இருக்கலாமே" என்றே எண்ணினேன்!! :( வாங்கி விட்டு, வீட்டை நோக்கி பயணித்த போது தான் உணர்ந்தேன்! தமிழில் பேச வேண்டும் என்று நினைக்கும் எனக்கே அந்த இடத்தில் ஏன் அப்படி எண்ணும் சூழ்நிலை ஏற்பட்டது??? அத்தை "பருப்பு" என்று தமிழில் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது??? அதை வித்யாசமாக கடைக்காரரும் மற்றவர்களும் நினைத்தது போல, நானும் கூட எண்ணிவிட்டேனே!!??? வருத்தமாக இருந்தது எனக்கு! நானும் கூட அவ்வாறு எண்ணியதற்குக் காரணம் என்ன???? காரணங்கள் : 1) பணம் படைத்தவர்களுக்கு மத்தியில், ஆங்கிலம் பேசுவதே மதிப்பு என்று எண்ணுவோருக்கு மத்தியில், ஆங்கிலம் பேசுவதே சிறப்பு!! ---> இப்படியே, நாம் தெரிந்தோ தெரியாமலோ வளர்க்கப்படுகிறோ

கை கோர்க்க ஆசை!

குருவிகள் குஞ்சுகளை  கொஞ்சிடும் குளிர் காலம்; காலையில் நான் எழும்போது, சாளரத்தின் ஓரம் கீச்சுது கிளிகள்! தினமும் காலையில், தேனாய் எழுப்பும் குரல்!  காணாமல் போனதே இன்று, காலம் கரைத்ததே தின்று! என்னை தூக்கிச் சென்ற கரங்கள், தீண்டல் கூட தவிர்கிரதே இன்று! கைகோர்த்து நடந்து வரும், ஐந்து வயது சிறுமியை  கண் விழி காட்சியாக்கும் போதெல்லாம், கொழுந்து விட்டு எரிகிறது, என் ஏக்கமும், நினைவுகளும்! மீண்டும் சிறுபிள்ளையாகி, மெதுவாய் உங்களது மார்பில் உதைக்க, ஆசை! கை கோர்த்து, மிட்டாய் வாங்க ஆசை! பெண் பிள்ளை கை தீண்ட, தயக்கம் தந்தைக்கு ஏனோ? :( :( :( 

கடவுளின் காலடியில்!!!

நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில், எறும்புக் கூட்டம் போல, தேனிக்கள் கூட்டம் போல! ஊர்ந்து ஊர்ந்து தான், உள்ளே செல்ல இயலும், சில்லறை இல்லாத பலரால்!! நொடியில் நீந்தி, காலடியில் சேர, சில "பெரியோர்களால்" சுலபமாய் இயலும்! "உன் காலடியிலும், கருணையும் பக்தியும், கருகி எரியுதோ இறைவா..!   கற்பூரமாகவும் தீபமாகவும்?" "ஏழையின் கண்ணீர் தானோ, இறைவா!!! பன்னீரும் பால் அபிஷேகமும்?!"

பெண்மை!!!

எப்படியேனும் முகம் சுளிக்காமல்., மனிதர்களை ஏய்க்காமல் , நட்போடு வாழும் ஆசையோடு தான், என் நாள் ஒவ்வொன்றையும் தொடங்குகிறேன்!  இருட்டு அறையில் கூட முளை விடும் செடியாய், முட்டி மோதி வெளிவர நினைக்கிறேன்! வளரும் விருட்சமாய், வளர்ந்த சில விருட்சங்களைக் கண்டு வியக்கிறேன்! வளர்ந்தும் மதி இன்றி , மனதளவில் மக்கிப் போய்க் கிடக்கும், சில விருட்சங்களை வேதனையோடு காண்கிறேன்! "ஏக்கங்கள், ஏமாற்றங்கள், துன்பங்கள், இப்படித் தீயவையும் தகாதவையும் தேடி வரும், தேடாத நேரங்களில்" , என்ற உண்மையை சிறிது சிறிதாய் அறியத் தொடங்கி இருக்கிறேன்! எங்கும் எதிலும், பாகுபாடுகள்! பெண் பிள்ளை என்றும் ஆண் பிள்ளை என்றும், ஒரு வித பாகுபாடும், சலுகைகளும் இருக்கத் தான் செய்கிறது! " சாம்பல் நிறமொரு குட்டி, கருஞ் சாந்து நிறமொரு குட்டி", நிறங்கள் "ஆண் பெண்" என வரும் பொழுது, அன்னையும் சில நேரம் பாகுபாடு காட்டத்தான் செய்கிறாள்! முளைவிடும் பொழுதே, "பெண் பிள்ளையடி நீ, பொறுத்துக் கொண்டு தான் போக வேண்டும்", சொல்லி சொல்லியே வளர்த்தெடுத்தார்கள் என்னையும் கூட! பொறுமை, நாணம், விட்டுக்

சுகமான உறக்கம் !!

#தூக்கம் கண்களை அணைக்க., தலையணை அணைத்து, இன்பமாய் உறங்கச் செல்லும்., இரவுகளில்., சாலை ஓரங்களில்., சிலிர்க்கும் குளிரில், சுருண்டு கிடக்கும்., சிலரை நினைத்துப் பார்க்க., நேரம் இல்லை நமக்கு!!! #விடியற் காலையில்., "அலாரம்" அடித்தும்., உறங்குகிறோம்., குளிரில் உறைந்து வாடும்., சாலை ஓரப் பிஞ்சுகளை., நினைத்துப் பார்க்க., நேரம் இல்லை நமக்கு!!! #இது போல் சிலரை., நினைத்துப் பார்த்தால்., சுகமான உறக்கம், கண்கள் வருட., நேரம் இருக்காது நமக்கு!!! #சுகமான உறக்கம் !! நம்மைப் போல் சிலருக்கு., சுவாசம்!! பலருக்கு., அது நெஞ்சுருக்கும் சோகம்!!!

அகமுடையோனே!!!

காதோரம் கேட்கும், காற்றின் மொழி., உனதென்று, தானாய் சிரித்தேன், சில நேரம்!!! படித்த புத்கத்தில், பெயரெல்லாம் உனதாய் மாறுது., சில நேரம்!!! சாலையின் ஓரம் நடக்கையிலே உன் நினைவு சாரல் தூவுது சில நேரம்!!! உன்னை தேடித் தேடி அலைபாயவே., கண்கள் விழிக்கிறேன் சில நேரம்!!! காற்றின் தீண்டல் நீ என்று!!! சிலிர்த்துப் போகிறேன் சில நேரம்!!! இத்தனை இருந்தும், பயன் என்ன ??? உன்னிடம் காதல் மறைக்கிறேன் பல நேரம்!!!