முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஓவம்மா #5 (தொடர்கதை)

ஓவம்மா! #1  |  #2  |  #3  |  4 அழுதுட்டே இருந்தவ அப்படியே தூங்கிப் போயிட்டேன், காலைல அஞ்சு மணி இருக்கும், அந்தக் கோயிலுக்குப் பூச செய்ற ஐயர் வந்து தான் என்ன எழுப்புனாரு. ஒரே குளிர், பனி, அது எழுந்தப்றம் தான் எனக்கு உணர்ந்துச்சு. "நீ யாரு மா? இங்க இப்டி வந்து படுத்திருக்க?", அந்த ஐயர் கேக்க, என்ன சொல்றதுன்னு தெரியாம முழிச்சேன்! சாலை! அவரு, "போ போ, இங்க எல்லாம் தூங்கக் கூடாது வீட்டுக்குப் போ" னு சொல்லிட்டாரு. எந்திச்சி நடந்தேன், எங்க போறதுன்னு யோசிச்சிட்டே நடந்தேன். ரொம்பக் குளிரா இருந்தது. இந்நேரம் எங்கக்கா வீட்டுக்கு வந்திருக்கும், ஆனா வீட்டுக்கு என்னால போக முடியாது. பசிக்க ஆரம்பிச்சுடுச்சு, என்ன செய்யனு தெரியல, இந்நேரம் வேலைக்குப் போயிருந்தா சாப்டிருப்பேன், பசில நடக்க முடியல, நடந்துக்கிட்டே இருந்தேன் ஆனா நிக்காமா, எங்க எங்கயாச்சும் நின்னா, யாராவது, "யாரு மா நீ"னு கேள்வி கேப்பாங்கலே னு நெனப்பு, அந்த நெனப்பு தான் என்னத் தொரத்தி நடக்க வச்சது! ஒரு கட்டத்துல நான் மதியம் நெருங்க நெருங்க, சக்தி எல்லாம் எழந்து, மயங்கி விழுந்திருந்தேன். முழிச்ச

உடைந்த பொம்மை!

இது என் தோழி சிறுவர்களுக்கு ஏற்றார் போலக் கதை வேண்டும் என்று கேட்டதால் எழுதியது. அதனால நீங்களும் சிறுபிள்ளையாக உங்களை பாவித்துக் கொண்டு வாசிக்க ஆரம்பிங்க. அன்னைக்கு கமலேசோட அப்பா ஊர்ல இருந்து வந்தாங்க. கமலேசுக்கு அவ்வளவு ஆனந்தம். அப்பா வருவாங்க வருவாங்கன்னு வாசல்லயே நின்னுட்டு இருந்தான். அவனோட அப்பா ரொம்ப நாள் கழிச்சி, ஊர்ல இருந்து வந்துட்டு இருந்தாங்க. அதனால ரொம்ப ஆசையா இருந்தான். வந்துட்டாங்க அப்பா. தூரத்துல அப்பா வண்டி வரத பாத்ததுமே, குதிக்க ஆரம்பிச்சுட்டான். அப்பா அவனுக்காக ஒரு பூனை பொம்ம வாங்கிட்டு வந்திருந்தாங்க. அதுல இருந்து, அந்த பொம்ம தான் அவனோடநெருங்கிய தோழன். தூங்குவான் அது கூட தான், வெளயாடுவான், சாப்டுவான், எல்லாம் அந்த பொம்மையோட தான். அது ஒரு பீங்கான் பொம்ம. கீழ போட்டா உடைஞ்சிடும். உண்டியல் மாதிரி காசும் சேத்து வைக்கலாம் அதுல. காசு நெறஞ்சுட்டா அந்த உண்டியல் பொம்மைய ஒடச்சு தான் எடுக்கணும். கமலேசும் சேத்து வச்சான் காசு அதுல. முழு உண்டியலும் ஒரு நாள் நெறஞ்சிடிச்சு. அம்மா சொன்னாங்க ஒடச்சு காச எடுடா, வேற உண்டியல் வாங்கலாம்னு. அந்தக் காசு வருமைல இருக்கிற அவங்க

அழகு!

இது எனது தோழன், Christopher Joseph எடுத்த புகைப் படத்தைப் பார்த்ததும், எனக்குத் தோன்றிய சில வரிகள். உண்மைக் கண்களால், உற்று நோக்கியதில்லை! உன் புகைப்படக் கண்களால், உற்று நோக்கச் செய்து விட்டாய்! வியர்த்து நிற்கும், இந்த உழைப்பாளிகளின், வியர்வை அழகு! குளித்து நிற்கும், இந்தப் பேரழகியின், புன்னகை அழகு! அழுது நிற்கும், இந்த சிறு பிள்ளையின், சிணுங்கல் அழகு! இதோ, உதட்டுச் சாயம் பூசி நிற்கிறாளே, இந்தப் பச்சைச் சீலைக்காரி, இவனது காதலியோ? Nature

கண்மணிகள் வேண்டுகிறோம்!

கண்களுக்கு மை இட்டு, சாயம் பூசி, வசீகரிக்கும் பெண்களே! கண்களுக்கு கண்ணாடி இட்டு, அழகு காட்டி, வண்டியில் பறக்கும் ஆண்களே! நாளை ஒரு நாள், தேடி வரும், அழகு எல்லாம், அழிந்து போகும்! அன்றும் உங்கள், கண்மணிகள், காட்சி காட்டும்! எதுவும் வேண்டாம், நீங்கள் இறந்த பின், நீங்கள் முறிந்த பின், கண்களை தந்திடுங்கள், காட்சியே காணாதவர்க்கு! மண்ணில் விதைத்தால், பூக்கள் பூக்கும், விதை அல்ல நம் கண்மணிகள்! மனிதரில் விதைத்தால், காட்சிகள் பூக்கும், அற்புத விதைகள் நம் கண்மணிகள்! "கண்மணிகள் வேண்டுகிறோம்" விதைத்திடுங்கள்! கண்களுக்கு மையிடும் பெண்களில், நானும் ஒருத்தி! ஆனால், கண்களை மண்ணில் இடுபவர்களில், ஒருத்தி அல்ல! கண் தானம் செய்வீர்!

ஓவம்மா #4 (தொடர்கதை)

முந்தைய பகுதிகள்: ஓவம்மா! #1  |  #2  |  #3 அக்கா அன்னிக்கு ஊருக்குப் போய்ட்டா, ஏதோ கல்யாண வீடுன்னு சொல்லி. சோறு பொங்கச் சொன்னா என்ன. வீட்டப் பாத்துக்கோ, மாமா இருப்பாரு தொ ணை க்குனு சொல்லிட்டு. எனக்கு அவ்வளவு சந்தோஷம் அக்கா ஊருக்குப் போனது. என் விருப்பம் போல அன்னிக்கி பொழுதக் கழிக்கலாம்னு நெனச்சேன். ஆனாலும் அப்படி முடியாது, கண்டிப்பா வேலைக்கு போயே தீரனும். போனேன். ஆனா, வேலைக்கு நடுவுல அக்கா முதுகுல ஓங்கி எத்துவாலேன்ற கவல இல்லாம, நிம்மதியா கத பேசிக்கிட்டே வேல பாத்தேன். சாயந்தரம் வீட்டுக்குப் போனேன், காலேல பொங்குன சோறு தான் இருந்துச்சி, எனக்கு முட்ட சாப்டனும்னு ஆசையா இருக்க, அன்னிக்கி சம்பளக் காசுல, ஒரு முட்ட வாங்கி, பொரிச்சுத் தின்னேன். கொஞ்சம் கருப்பட்டி மிட்டாயும் வாங்கித் தின்னேன். தெரியும் எனக்கு, ஊருக்குப் போன அக்கா வந்தா, "ஏண்டி சம்பளக் காச வாங்கித் தின்ன"னு அடிப்பானு. ஆனாலும், அடி தானனு வாங்கித் தின்னுட்டேன். அடி வாங்கி வாங்கி, பன்னெண்டு வயசுல, எனக்கு மரத்துப் போய் இருந்தது. அடிக்கு பயமே இல்லாமப் போய் இருந்தது. எங்கக்கா பொம்பள தான், ஆனா என்ன அடிக்கிறப்போ,

காதல் ரோஜா #4

சிவப்பு ரோஜா, காதல் சொல்லுமாம், ஏனோ, என் காதலை மட்டும், சொல்ல மறுக்கிறது! என்னைப் போலவே, உன்னைப் பார்த்ததும், பேச மறுக்கிறது! காதலில் கண்களின், பாசை புரியுமாம், ஏனோ, உன் கண்கள் மட்டும், புரியா மொழி பேசுது! தமிழைப் போலவே, இனிப்பாய் இருந்தும், புரியாமல் படுத்துது! சாமத்தில் மல்லிகை, பூத்து நிற்குமாம், ஏனோ, என் இதய மல்லி, வாடி வதந்குது! உன்னை எண்ணியே, இரவைப் பார்த்ததும், ஏங்கித் தவிக்குது!

வெள்ளை ரோஜா #3

விதவையாம் அவள்!

காதல் ரோஜா #2

முதல் முறையாக, நான் ரோஜா நீட்டிய போது, நீயும் இப்படித்தான், உறைந்து போனாய்! முதல் முதலாக, உன் இதழ்கள் வருடிய போது, நீயும் இப்படித்தான், சிவந்து போனாய்! சிவப்பு மாறாத, வாடிப் போகாத, ரோஜா, நீயடி, என் முதல் அழகி!

காதல் ரோஜா #1

பதில் சொல்லடி என் காதலி! நான் என்ன உன் கூந்தல் ரோசாவா? வீசி எறிந்ததும், வாடிப் போனேனே! உன் கால கொலுசா? கழற்றி விட்டுவிட்டாய், சிரிக்க மறந்தேனே! பதில் சொல்லடி, இல்லை என்று, என் நாட்கள் நீளட்டும், ஜீவன் வாழட்டும்!

அன்புள்ள அப்பா!

அப்பா, எல்லாருக்குமே உலகத்துல அப்பாவ ரொம்பப் பிடிக்கும், நானும் அதே போல தான். உங்களப் பாத்துப் பேசச் சொன்னா நாள் முழுக்க பேசுவேன். எல்லாருக்கும் கெடச்சிட மாட்டாங்க நல்ல அப்பா, என் அப்பா போல நல்ல அப்பா. என்ன தேவதையா தான் பாத்திங்க, அப்படித் தான் வளத்திங்க. ஒன்னு கேட்டா பத்து வாங்கித் தருவிங்க. ஏன், எனக்குப் பேரு கூட எவ்வளவு அழகா வச்சிருக்கிங்க... சின்ன வயசுல என் காலுக்கு கீழ படுத்து ஒறங்கலனா உங்களுக்குத் தூக்கமே வராது. "இது யாரு செல்லம்... அப்பாச் செல்லம்..." இப்படி நீங்களே சொல்லிச் சொல்லிக் கொஞ்சிப்பீங்க. "நீ யாரு செல்லம் டா?", நீங்க கேக்குறப்போலாம், "அப்பாச் செல்லம்..", இப்படி நான் சொல்லலேனா, எவ்வளவு வாடிப் போவிங்க! சின்ன விசயம் தான், ஆனாலும் அது உங்களுக்கு அவ்வளவு வருத்தமா இருந்ததே, ஏன்பா? அம்மா அப்போ ரொம்ப ஒல்லியா இருப்பாங்க, அம்மா இடுப்புல என்னத் தூக்குனா எலும்பு குத்தும்னு அம்மாகிட்ட நான் போகவே மாட்டேன்.. நீங்க தான் என்னத் தூக்கிச் சொமப்பீங்க. நானும், சொகுசா உங்க கைல உக்காந்துக்கிட்டு, "அப்பா தான் பஞ்சு மாதிரி, அம்மா குத்துறா எலும

ஊருக்காக - சிறுகதை.

அந்தப் பெரிய மனிதர் தான், ஊரில் எல்லாக் காரியத்திற்கும் முன் நிற்பார். கோயில் திருவிழா, சுதந்திர தின விழா, தெருக்கெட்டுப் பொங்கல், இப்படி எல்லாவற்றிர்க்கும் அவர் தான் முன் நிற்பார். ஒவ்வொரு விழாவிலும் அவரது பேச்சு நிச்சயம் இருக்கும், மேடையில் அருமையாகப் பேசுவார். "சாதிகள் இல்லை, நாம் அனைவரும் ஒரு தாய்ப் பிள்ளைகள், ஒற்றுமையாக இருக்க வேண்டும்...", இதுவே அவரது பேச்சின் மையக் கருத்தாக இருக்கும். அன்றும் ஒரு மேடையில் பேசிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தார். அவரது மனைவியும் மகனும் பெருத்த வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அதை அவர் தடுக்கவும் இல்லை, சண்டையில் பங்கெடுக்கவும் இல்லை. மாறாய் புலம்பத் தொடங்கி விட்டார். வெளியே தான் பேசுவார் அந்தப் பெரிய மனிதர், வீட்டிற்குள் நுழைந்ததும் புலம்பல் தான். தன் மகன் தன்னைப் போல பெரும் புகழோடு வரமாட்டான், படிப்பில் அவன் மோசம் என்று புலம்பத் தொடங்கி விடுவார். "படிக்காத முட்டாளா, வியாபாரம் செய்றான் அவன், அவன் மகனெல்லாம் படிக்கிறான் நல்லா.. ஆனா.. என் புள்ள..", இப்படி அடுத்தவனை நினைத்து நினைத்தே புலம்பிக் கொண்டிருப்பார். அவருக்

ஓவம்மா #3 (தொடர்கதை)

முந்தைய பகுதிகள்: ஓவம்மா! #1  |  #2 தினமும் நான் வேல முடிஞ்சதும் வீட்டுக்குப் போவேன், போய் அக்கா கிட்ட காசக் குடுத்துட்டு, அக்கா வேல சொல்லுவா. பாத்திரம் தேச்சு, வீடு கூட்டுவேன். சில நேரம், பக்கத்து வீட்ல புது டி.வி வச்சுப் படம் காட்டுவாங்க, ஒளியும் ஒலியும் - அதப் பாக்க வாங்குன சம்பளத்தோட போய்டுவேன், வீட்டுக்குப் போனா அக்கா மிதிப்பானு தெரியும், ஆனாலும் எல்லாப் பிள்ளைகளும் போறப்போ எனக்கு ஆச வந்து போய்டுவேன், அப்பறம் அன்னிக்கு ராத்திரி நல்லா அடி வாங்குவேன். அப்பறம் அக்காகிட்ட கெஞ்சிக் கூத்தாடி, பக்கத்து வீட்டு பவளக் கொடியோட வெளையாடப் போவேன் தெனமும். பவளத்தோட அப்பா மிட்டாய், முறுக்கு எல்லாம் செஞ்சு விப்பாங்க. பலகாரக் கட வச்சிருந்தாங்க. அவங்க கடைக்குப் போனா எப்பவும் ஏதாவது கொஞ்சம் சாப்பிடக் குடுப்பாங்க, அதுக்காகவே தினமும் அவங்க கடைக்குப் போவேன். இப்போ நெனச்சா எனக்கே என்னவோ மாதிரி இருக்கு அப்படி சாபட்றதுக்கே போனது, ஆனா என்ன செய்ய தெனமும் ஒரு வேல தான் எங்கக்கா சுடு சோறு போடும், அதுவும் கொழம்பு வைக்காது, ஊறுகாய கடிச்சுக்கிட்டு, புளிச்ச தயிர் ஊத்தி சில நாளு, தக்காளி வதக்கி சில நாளு, வ

காதல் எனப்படுவது யாதெனில்!

பார்த்தவுடன் காதல் சொல்லி, நினைத்தவுடன் ஊரைச் சுற்றி, கேட்டவுடன் கைகள் கோர்த்து - ஆசை துளிர்த்தவுடன் கட்டி அணைத்து, தீர்ந்தவுடன் பிரிந்து போக, ஆங்கிலக் காதல் அல்ல இது. அரை வருடம் பார்வையால் பேசி, பின்னொரு அரை வருடம், அலைபேசி தூது அனுப்பி, உன் கைகள் தொடாமல், உன் மூச்சுப் படாமல், தொடுதல் இல்லாமல் - நான் வளர்த்த, தமிழ் காதல் இது. நாணம் - உன்னைக் கண்டால், நான் பூமியை வருடுவேனே, அது நாணம். காதல் - உன்னை நினைத்ததும், கண்கள் படபடக்குமே, அது காதல். உன்னை நேரில் காண்பது அத்திப் பூத்தார் போல, என்றோ ஒரு முறை தான், ஆனால், கனவில் காண்பேனே, தினம் தினம். அந்த சுகம் வருமோ, வேறெதிலும்? "பல்சரில்** ஊர் சுற்றும், காதல் ஜோடிகள் பார்! நீயும் இருக்கிறாயே..", நீ வருந்திக் கொள்வதுண்டு. என் கண்ணா, காதல் ரகசியமானது! கடைத் தெருவெல்லாம், தண்டோராப் போட, ஊர்த் திருவிழா இல்லையடா - இரு உள்ளங்கள் மட்டுமே பேசும், அழகுக் கவிதையடா அது! தேகம் மட்டும் தேடுவது, காதல் அல்ல, நம் போல், பார்வை மட்டும் பேசுவதே, காதல்! **பல்சர் - pulsar - இரு சக்கர வாகனம்.

ஓவம்மா!#2(தொடர்கதை)

முந்தைய பகுதிகள்: ஓவம்மா! #1 “ ஏய் எந்திரி எந்திரி.. எந்திரி ஓவம்மா.. கணக்குப் பிள்ள வந்துட்டாருடி.. எந்திரி க் கியா இல்லையா..? ” , ஓங்கி எத்துவா எங்கக்கா.. எங்கக்கா தான் எழுப்புவா தினமும் காலைல மூனு மணிக்கெல்லாம் கணக்குப்பிள்ள வந்து கூப்ட உடனே. தினமும் வேலைக்கு எல்லாரையும் எழுப்ப அங்க பக்கத்திலயே இருந்த கணக்குப்பிள்ள வருவாரு. எனக்கு ஒரு பத்து வயசு கிட்ட இருக்கும் அப்போ. எங்கக்காக்கு இருவது வயசு, கல்யாணமாகி ரெண்டு பொம்பளப் பிள்ளை வச்சிருந்தா. அவ பிள்ளைங்க ரெண்டும் பள்ளிக்கூடம் போவும், நான் எங்க ஊருக்கே ரொம்ப பிரபலமான, தீப்பெட்டி ஆபீசுக்கு (தொழிற்சாலை) வேலைக்குப் போவேன். வேலைக்குப் போகத்தான் எங்கக்கா எழுப்புவா மூனு மணிக்கெல்லாம். மூனு மணிக்கி எந்திச்சி வீட்டுப் பக்கத்துல ஒரு அடி கொழாய் இருக்கும், அதுல தண்ணி அடிச்சு, அங்கனயே குளிப்பேன். குளிக்கிறது ரொம்ப நேரம் குளிச்சா, பின்னாடி கூடி வந்து எங்கக்கா நடு முதுகுல ஓங்கி எத்துவா. அதுக்கு பயந்துக்கிட்டே ரெண்டு நிமிஷம் தான் குளிப்பேன். அவசரமாக் குளிச்சு, ஆபீசுக்குப் போவேன். கட்ட அடுக்குவேன் நான் நல்லா. காலைல போனதும் என்ன தான

தாய்மைக் காலங்கள்!

"நான் தான் அம்மா..." Toy play! விளையாடி இருக்கிறேன் - என் வெள்ளை நிற பொம்மையுடன். அவளுக்கு, தாலாட்டி, சோறூட்டி, தலை வாரி, பூச்சூடி, அன்பாக பார்த்துக்கொண்டேன், அன்னையாய் என்னை நானே அன்றே கற்பனை செய்து! "நான் தான் அக்கா.." கொஞ்சி இருக்கிறேன் - என் கருப்பு நிற பதுமையுடன். அம்மா அடித்து அழுதபோது, அந்தப் பதுமைகளுடன், அயர்ந்து உறங்கியதுண்டு! யாருமே இல்லாத நேரம், அவர்களோடு நான், அன்பாகப் பேசியதுண்டு! அம்மாவிற்கு வைத்த முத்தத்தை விட, அவளுக்குத் தான், அதிகம் வைத்திருப்பேன்! பிறந்தது முதலே, "தாய்மை" பெண்மையிடம் உண்டு, நினைத்துப் பார்த்ததில், புரிந்து போனது! உண்மைக் காதலுக்கு இன்று ஒத்திகை காண்பதும் - இந்த பொம்மைக் காதலோடு தான்!

ஓவம்மா! #1(தொடர்கதை)

எனது முதல் இரண்டு தொடர்கதைகள் சிக்ன(க)ல் ,  காதலி காதலி! வாசித்திருப்பீர்கள்! இது எனது அடுத்த கதை. தங்களது ஆதரவு கிட்டும் என்ற நம்பிக்கையில் தொடங்குகிறேன். எனது கதையை பகிர்ந்து, தொடர்ந்து ஊக்கம் தந்த, தமிழ் விழி வானலைக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள். இது என் மண்ணின் கதை, இன்றும் ஏதோ ஒரு மூலையில் அழுது கொண்டிருக்கும் ஏழைப் பெண்ணின் கதை. தீக்குச்சியாய் இருக்கும் பெண்மையின் கதை. ஆயிரம் விளக்குகளை ஒளி ஏற்றிவிட்டு, அமைதியாய் அணைந்து போகும், பெண்மைக்கு இது சமர்ப்பணம். --------------------------------------------------------------------------------------- எனக்கு அப்போ மூனு வயசு இருக்கும், எங்கம்மா எறந்து போய்ட்டாங்களாம். நான் பெருசானதும் சொன்னாங்க என்ன வளத்தவங்க எல்லாரும். வெவெரம் தெரியாத வயசுல எங்கப்பா தான் என்னப் பாத்துக்கிட்டாங்க. எனக்கு இன்னும் எங்க அம்மா மொகம் தெரியாது. எங்கம்மாவ நான் பாத்ததே கெடையாது. சின்ன வயசு, சோகம் எதுவுமே பெரிசாத் தெரியாதுன்னு சொல்லுவாங்க. அப்படி தான் இருந்தேன். எனக்கு சோகமே தெரிஞ்சதில்ல. பள்ளிக்கூடம் போனேன் நானும் எல்லாரையும் போல. காக்கிளாசு (L.K.

கனவுக் கணவன்!

நீயும் நானும்! நான், நாள் முழுக்க நடந்ததை, இரவெல்லாம் கதையாய்ச் சொன்னால், "ஏன் இப்டி படுத்துற?" செல்லமா மிஞ்சி, காதலோட கேக்கணும்! நான் எழுதிய கவிதையெல்லாம், வாசிச்சு வாசிச்சுக் காட்டினா, சலிப்புப் பார்வை பாக்றது போல, தேவதையாப் பாக்கணும்! வேலைக்குப் போயிட்டு வீடு வந்தா, என்னோட கண்ணாமூச்சி ஆடனும், கண்டுபுடிச்சதும் சீண்டணும், அள்ளி உப்பு மூட்ட தூக்கணும்! தப்புத் தப்பா செஞ்சு நின்னா, தட்டி நாலு போடணும், சண்டைபோட்டுத் திட்டணும், என்ன அழ வைக்கணும்! அழுது ஒரு நாள் முழுக்க, சோகமா நானிருக்கணும், நாள் முடிவுல நீ வரக்குடாது, நான் தான் மனிப்புக் கேட்கணும்! உன் மேல தப்புன்னு, நான் சண்ட போட்டா, நீ, "என் தப்பு தான்டா.." செல்லமா மன்னிப்புக் கேக்கணும்! எனக்குக் காய்ச்சல்னா, உனக்குப் பாதி தருவேன், உனக்குக் காய்ச்சல்னா, எனக்கு நீ பாதி தரணும்! என்னையே சுத்துற, நாய்க்குட்டி போல இருக்கக் கூடாது, கோபத்தைக் கொட்டுற, எரிமலையா இருக்கக் கூடாது! உள்ளே பாசம் இருக்கணும், வெளியே காட்டாம நடிக்கணும், நடிக்றத

வாசம் இல்லாத ரோசா!

இதோ நமது எதிர்காலம்! பிறந்த தினமே - செயற்கையைப் போர்த்திக் கொண்டு, பால்மணம் மாறிப் போகும், பிஞ்சுப் பூக்கள்! வாசலில் இறங்கியதும் - என்றும் வேகமாய் ஓடுது, இருசக்கர வாகனம் நோக்கி, நமது கால்கள்! நடப்பது குறைந்து - பகட்டாய் நடிப்பது தொடங்கிய, நேற்றைய தினம் தொட்டு, உடலில் நோய்கள்! மருந்தாய் இங்கே - இயற்கை மூலிகைகள் ஆயிரம், இருந்தும் மனம் நாடுது, வெளிநாட்டு வில்லைகள்! எதிலும் செயற்கை - ரோசா வாசம் மறந்திடும், வாசனைத் திரவியம் மட்டுமே நமக்குத் தெரிந்திடும்! வாகனப் புகை - இங்கு மேகமாய்ப் பரவி, வாசனை நுகரும் திறனை வேகமாய் அழித்திடும்! வாசமே தெரியாது - மூக்கு இருந்தும் இல்லாததே, மூக்கிருக்கும் சூற்பனகைகளாகி உலகம் செயற்கையாய் சுவாசித்திடும்!

கறை படிந்த கைகள்!

கண்களால் ஆசையாய் நீ, காதல் வலை வீசும் பொழுதுகளில், கனல் வீசுகிறது எனக்கு- இதயம் கொதிக்கிறது, இமைகள் மறுக்கிறது! கால்களைப் பிடித்து நீ, கதகதப்பூட்டிய நேரங்களில், பயத்தில் வியர்க்கிறது எனக்கு - உள்ளே வலிக்கிறது, வெளியே எரிகிறது! காதலோடு காமம் கலந்து நீ, கட்டி அணைக்கும் இரவுகளில், குற்றம் உறுத்துகிறது எனக்கு - நெஞ்சம் மறுக்கிறது உடலோ நடிக்கிறது! என்னோடு வா என்று நீ, கைகள் நீட்டும் பயணங்களில், கரம் நீள மறுக்கிறது எனக்கு - கறையை மறைக்கிறது அவனை நினைக்கிறது! காரணம் தெரியாத என் கணவன் நீ, குழம்பி நிற்கும் நொடிகளில், பழைய காதலைப் பிரிந்த எனக்கு - கூசிப் போகிறது, சுயமே வெறுக்கிறது! பண்டிகை நாட்களில் நீ, பிறந்த வீடு கூட்டிப்போகும் தருணங்களில், வெறுப்பாய் இருக்கிறது எனக்கு - கோபம் வருகிறது, கட்டாயக் கல்யாணத்தை நினைக்கிறது!

தமிழ் வாழும் நிச்சயமாக! ஆனால் தமிழர் கலாச்சாரம்?

நமது தமிழ் சூரியன் போல. புயல் அடிப்பதால் சூரியன் அணைவதில்லை பாருங்கள். "உணவுப் பழக்கம், உடை உடுத்துவது, விருந்தோம்பல், தமிழ் பெண்களுக்கே உரிய நாணம்?" இப்படி ஒவ்வொன்றிலும் தனித்துவம் வாய்ந்தவர்கள் நாம்! ஆனால் இன்று? நமது தனித்துவம் மறைந்து வருவது கண்கூடாகத் தெரியுதே? எல்லாவற்றிலும் கலப்பு! உடுப்பு, படிப்பு, இப்படி எல்லாவற்றிலும் ஆங்கில வாசனை நுகர்ந்தே சுகம் கண்டு பழகிவிட்டோம்! கூட்டுக் குடும்பங்கள் கரைந்து போய் விட்டன; பாட்டிக் கதைகள் முதியோர் இல்லம் அடைந்தன! விருந்தோம்பல் பசியால் மெலிந்து போயிற்று! பெண்மையின் நாணம் கூட நாணி நாணி மறைந்து போய்விடும் போல! எறும்புகள் பசியாற முற்றத்தில் கோலமிட்ட நம் ஈகை உள்ளம் இன்று சுருங்கிப் போனதேனோ? அர்த்தம் நிறைந்தவை நமது முன்னோர்களின் பழக்கங்கள் எல்லாம். அர்த்தமற்றவையாய் மாற்றிவிட்டோமே? எழுதும் எழுத்தில், கவிதையோ கதையோ, ஆங்கிலம் கலந்தால் தான் இணையத்தில் விருப்பங்கள் அதிகம் கிடைக்கிறது! ஆங்கிலமும் ஆங்கிலேயரும் நமக்கு எதிரிகள் அல்ல! ஆனால், நம் மொழியையும், கலாச்சாரத்தையும் நமக்கு எதிரி போல எண்ணுவது, தவறல்லவோ? "காலத்திற்கே

கேட்டுப்பார்!

பார்க்காமல் பார்க்கும், என் கண்களைக் கேட்டுப்பார்! உன் அழகைச் சொல்லும்! உன்னைப் பார்த்ததும் நான் கடிக்கும், என் நகங்களைக் கேட்டுப்பார், என் நாணத்தை அது சொல்லும்! என் தனிமையை அறிந்த, சுவர்களைக் கேட்டுப்பார், உன் பெயர் மட்டுமே சொல்லும்! என்றும் நான் எழுதும், என் கவிதைகளைக் கேட்டுப்பார்! என் காதலைச் சொல்லும்! இதை நீ வாசித்ததும் முதலில் வரும், புன்னகையைக் கேட்டுப்பார், நம் காதலின் ஆழம் அது சொல்லும்!

என்னவோ போல இருக்கு!

பைத்தியம் தான் பிடிக்கிறதோ? இல்லை, பேசாமல் வலிக்கிறதோ? "ஒரு அஞ்சு நிமிசம் பேசேன்..?" கெஞ்சி நான் கேட்டுப் பார்த்தேன்! என் வார்த்தைகள் தான் கேட்கலையோ? இல்லை, கேட்டும் அலட்சியமோ? "வேல இருக்குனு சொல்றேன்ல..!" கோபத்தால் கொன்று போட்டாய்! "நீயாப் பேசுற வர பேச மாட்டேன் நானும்" ரகசியச் சபதம் இதயத்திற்குள் ஓரிரு முறை, "பேசாம இருக்க முடியாது" பகிரங்கமாய்ச் சபதம் கலைவது ஆயிரம் முறை! தினமும் ஒருமுறையாவது உன், தீயான கோபக் குரல் கேட்காவிடின், ஏக்கத்திலும், சோகத்திலும், என்னவோ போல இருக்குதேடா! தினமும் ஒருமுறையாவது உன், தேன் சொட்டும் கெஞ்சல் கேட்காவிடின், என் இரவின் உறக்கத்தின் நடுநடுவே, என் இதயம் பதறி வாடுதேடா! தினமும் ஒருமுறையாவது உன், திகட்டா கொஞ்சல் கேட்காவிடின், என் காதணி கூட காதோரம், ஏனோ சிணுங்கிக் கொல்லுதேடா! உன் கோபம் கொஞ்ச நேரம் தான், உன் வேசம் கெஞ்ச வைக்கத்தான், எனக்குத் தெரியும், "என்னவோ போல இருக்குடா" என் வார்த்தைகள் கேட்காமல், உன் உள்ளம் கசக்கும், என்னை நினைக்கும், என்னவோ போல இருக்கும் உனக்கும்!