முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மகனே!

உன் மொழி அறியாத போதும், உணர்வுகளின் வழியாக, வார்த்தைகள் பரிமாறினேன்! எத்தனை ரணம் இருந்த போதும், உன் பூஞ்சிரிப்பில், சுக ராகம் சுவாசித்துக் கொண்டேன்! என் கனவுகள் பலிக்காத போதும், உன் கனவுக்காய், ஒரு வீர சபதம் எடுத்தேன்! உன் தும்மல், விம்மல் அது போதும், என் இதயம், விரிசல் விட்டு உடையக் கண்டேன்! "அப்பா.." அந்த வார்த்தை போதும், அதற்காகத் தான், தவம் செய்து கிடக்கிறேன்! சொல்லிடு சீக்கிரம், "அப்பா... அப்பா காத்துக் கிடக்கிறேன்! (எனது நண்பரின் குழந்தைக்காக எழுதிய கவிதை)

குப்பை - சிறுகதை

அந்த இரண்டு சிறுவர்களும்  விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த தெருவோரக் குப்பைத் தொட்டி தான் அவர்களுக்கு விளையாட்டு மைதானம்! அழுக்கு உடையும், பரட்டைத் தலையும், பழுப்புப் பற்களுமே அவர்களது அடையாளம். குப்பையில் கிடந்த உடைந்த பொருள் ஒன்று அவர்களது கண்ணில் பட்டது, எடுத்துக் கொண்டார்கள் கையில், பளபளவென இருந்தது அது. "டேய், கடைல போட்டா நெறைய காசு கிடைக்கும் டா..", ஒருவன் ஆலோசனை சொல்ல, "ஆமாடா.." இன்னொருவன் ஆமோதித்தான். கடையை நோக்கிப் பயணப்பட்டார்கள். போகும் வழியில் அவர்களுக்குள் ஒப்பந்தம், வருவதில் ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொள்வதென்று. கடையில் சென்று கேட்டார்கள், "ஐயா.. இதுக்கு எவ்வளவு கெடைக்கும்?" கடைக்காரர் அதை வாங்கிக் கொண்டு, உற்றுப் பார்த்தார், பிறகு இவர்களை ஒருமுறை உற்றுப் பார்த்தார். "இது எங்கடா இருந்தது?" "குப்பைல" "நூறு ரூவா கெடைக்கும், பித்தளப் பொருள் தான்." "நூறு ரூவாயாம்டா.." இருவரும் காதுகளுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள். நூறு ரூபாய் அவர்களுக்குப் பெரிய தொகையாக இருந்தது. நூறு ரூபாயைப

கடவுளே...! கடவுளே...!

நீண்ட நாட்களாக, உனக்கு ஒரு கடிதம் எழுத நினைத்திருந்தேன். நேரம் இல்லை, அதனால் தான் எழுத முடியவில்லை என்று நான் சொல்ல மாட்டேன். நிறைய நேரம் இருந்தது, என்ன எழுதுவதென்று தான் தோன்றவில்லை. இதோ, இன்று தோன்றுகிறது. கேட்கத் தோன்றுகிறது. எதை எதையோ, கேட்கத் தோன்றுகிறது. எது கேட்டாலும் நீ கொடுக்கப் போவதில்லை நான் அறிவேன், ஆதலால், நான் கேட்கப் போவதில்லை. கேட்பதற்கு மாறாகக் கொடுப்பது உன் வழக்கம். அதனால், எதுவும் வேண்டாம் அப்பா. சரி, கேட்பதற்காகத் தானே உன்னை நாடிடுவார்கள், கேட்பதற்காக இல்லை என்றால், நான் எதற்காக வந்திருக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டாம். கொடுப்பதற்காகவா? நினைக்காதே, கடவுளுக்கே கொடுக்கும் அளவிற்கு இவளிடம் என்ன உள்ளது என்று. கொடுக்கத் தான் வந்திருக்கிறேன். உனக்கு நான் இன்று கொடுக்கத் தான் வந்திருக்கிறேன். என்ன கொடுக்க? பாவம் உன்னிடம் அது  இல்லை, அதைத் தான் கொடுக்கலாம் என்று வந்திருக்கிறேன். யோசித்துப் பார், உன்னிடம் என்ன இல்லை? கடவுளிடம் இல்லாததும் இருக்க முடியுமா? முடியும், யோசித்துப் பார், உன்னிடம் அது இல்லை, தேடிப் பார், உன்னிடம் அது இல்லை. எது? எது? அது உன்னிடம் இல்லை.

பிரிவு!

உன்னைப் பிரிந்தேன், உனக்காகவோ, எனக்காகவோ அல்ல! நமக்காக! பிரிவின் ரேகை, பெண்ணின் இதயத்தில்! ----------------------- பிரிந்த நேரம் தான், பிரியம் கூடுது! பிரிவின் ரணங்கள், புரிந்தவருக்கு மட்டும்! ----------------------- குரல் கேட்க ஏங்குகிறேன், உயிர் வலிக்கும் நேரமெல்லாம்! உறங்காமல்! ----------------------- என் நீண்ட தூர, ஏக்கப் பயணத்தில், உன்னை மட்டுமே, ஏற்றிச் செல்கிறேன்! ஊசலாடும் கூந்தல் கற்றையில், காற்றோடு உன்னையும், உணர்ந்து கொள்கிறேன்! ----------------------------

ஓவம்மா #8 (தொடர்கதை)

முந்தைய பாகங்கள்: ஓவம்மா! #1  |  #2  |  #3  |  4  |  5  |  6  |  7 நாள் ஓடிக்கிட்டே இருந்தது. அடுத்து ரெண்டு மாசத்துல எனக்கும் கடிநாயிக்கும் கல்யாணம். எனக்கு அவன் எம்மேல எம்புட்டு உசுரா இருக்கான்னு தெரியும், ஆனாலும், ஆச வரல எனக்கு அவன் மேல. என்கிட்டே வந்து அவன் சிரிக்கிறதும், கொஞ்சலாப் பேசுரதுமா இருந்தான். பழையபடி இல்லாம, சண்டை போடாம, ஏன் இவன் இப்புடி மாறுனான்? எனக்கு நெனைக்க நெனைக்க ஆச்சர்யம்! இப்பிடியே போயிட்டு இருந்தது. தெனமும் நான் வேலைக்குப் போயிட்டு வர்றப்போ, எங்கூடவே வருவான். எனக்கு எரிச்சலா இருக்கும். அய்யோ.. இவனப் போய் கட்டிக்க வேண்டியதாப் போச்சேன்னு நெனப்பேன். ஒரு நாள் இதே மாதிரி, வேல முடிஞ்சி வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன். வீட்டுக்குள்ள நொழஞ்சேன், யாரோ வந்திருந்தாங்க, அவுங்க யாருன்னு தெரியாம, முழிச்சிக்கிட்டே உள்ள போயிட்டேன். அவங்க பேசுரதக் கேட்டதுக்கு அப்பறமா தான் புரிஞ்சது எனக்கு, அவங்க என்ன பொண்ணு கேட்டு வந்திருக்காங்கன்னு. அங்க என் கூட வந்த கடிநாய், உண்மையாவே கடிநாயா மாறி, வந்த அந்த ஆளுங்க கூட சண்டை போடா ஆரம்பிச்சி இருந்தான். வந்த ரெண்டு பேருமே, கொஞ்ச வய

ஓவம்மா #7 (தொடர்கதை)

முந்தைய பாகங்கள்: ஓவம்மா! #1  |  #2  |  #3  |  4  |  5  |  6 அன்னைக்கு நான் வேலைல இருந்து வீட்டுக்கு வந்தேன். எங்க வீடே ரொம்பச் சிறுசு, அதுல அத்தன பேர் இருந்தத பாத்தப்போ, அப்பா, எனக்கு உள்ள நாளைய எடமும் இல்ல, மனசும் இல்ல. எதுக்கு இத்தன பேர் இருக்காங்க... புரியாம நின்னுட்டு இருந்த என்ன, பின்னாடி கூடி வந்து அடிச்சு "ஏய்.. ஓவம்மா உன்ன பொண்ணு கேட்டு இந்தக் கடி நாய்ப் பயலோட அம்மா, சொந்தக்காரங்கள எல்லாம் கூட்டிட்டு வந்திருக்குடி.... உங்க அத்த பேசுறதப் பாத்தா, அவனுக்கே உன்னக் கட்டி வச்சிரும் போலடி.. உன் கனவெல்லாம் கனவு தான் இனி, என்னைக்கும் நெசமாகாது..", இப்படிப் பக்கத்து வீட்டுக்காரி சொன்னதும், எனக்கு "அய்யோ"னு ஆகிடுச்சு. வேகமா வந்துச்சு எங்க அத்த, "வாமா ராசாத்தி.. என்னடா மெலிஞ்சு போயிருக்க.. நம்ம வீட்டுக்கு வந்தப்பரம் பாரு, உன்ன எப்படிப் பாத்துக்கறேன்னு. சும்மா கொலு கொலு னு கொண்டு வந்துருவேன் பாரு..", என் கன்னத்தக் கில்லி கொஞ்சித் தள்ளிடுச்சு அந்த அத்த, அதாவது கடிநாயோட அம்மா... அந்தத்த என் கன்னத்த விட்டதும், வீட்ட சுத்தி பாத்தேன், ஒரே கூட்டம

மாற்றங்கள்!

நேற்றுப் பார்த்த ஆலமரம், காணாமல் போய், கட்டிடங்கள் நிற்கின்றன இன்றெல்லாம்! வீட்டுத் தோட்டம், சாந்து பூசி, சொகுசுந்து நிற்கிறது சுகமாக, இன்றெல்லாம்! அப்பாவின் வியர்வை வாசம் மாறி, வாசனைத் திரவியம் என் நாசி ஏறிடுது  இன்றெல்லாம்! அம்மாவின் சேலை வாசம் கூட, ரசாயனம் பூசி, ஏங்க வைக்கிறது, இன்றெல்லாம்! காலம் மாறி, காதல் திருமணங்கள், பெருகிவிட்டன இன்றெல்லாம்! எல்லாம் மாறினாலும், தொட்டதெற்கெல்லாம் சிணுங்கும், நான் மட்டும் மாறவில்லை, மாறிடுவேனா? பார்க்கலாம்!

சோசியம்

அவனும் அவளும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தார்கள். அவர்களே நினைத்துப் பார்க்கவில்லை, பெற்றோரிடம் சொன்னதும் உடனடியாக சம்மதம் கிடைக்கும் என்று. ஆனால், தங்களைத் தாங்களே கிள்ளிக் கொண்டு, நம்பினார்கள். ஆனந்தமாக உணர்ந்தார்கள். தாங்கள் திருமணத்தில் என்னென்ன பதார்த்தங்கள் பரிமாறுவது, என்ன உடை அணிவது, உடையின் நிறம், இப்படி எல்லாவற்றையும் கலந்து பேசத் தொடங்கி இருந்தார்கள். அவர்களது வீட்டிலும், இரு குடும்பத்தாரும் கலந்து பேசி, ஜோதிடம் பார்க்க முடிவு செய்தார்கள்.  "பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பொருத்தம் அம்சமா இருக்கு. ஜாதகம் நல்லாப் பொருந்துது, ஆனா ஒரே ஒரு சிக்கல்", என்று இழுத்தார் அந்தப் பெரிய பட்டை அடித்திருந்த ஜோசியர். "என்ன சாமி? என்ன?", பதறி விட்டிருந்தனர் ஜோசியம் கேக்கச் சென்றிருந்த அந்தப் பையனின் பெற்றோர். "உங்க பையனுக்கு இப்போ நேரம் சரி இல்லம்மா, கல்யாணம்னு பேச்சு இப்போ எடுத்தாலே தடங்கல் வரும், அவருக்கு விபத்து ஏற்படக்கூட வாய்ப்பு இருக்கு. அப்புறம் அந்தப் பொண்ணுக்கு தோஷம் இருக்கு, ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சா , மாப்ள உயிருக்கு ஆபத்து. ம

ஓவம்மா #6 (தொடர்கதை)

ஓவம்மா! #1  |  #2  |  #3  |  4  |  5 சேகருக்கும் எனக்கும் எப்பவும் சண்ட வரும், எல்லாரும் "அடிக்கிற கை தான் அணைக்கும்" மு எங்கள ஏத்தி விடுவாங்க. என்ன செய்ய, அப்போல இருந்து இப்போ வரைக்கும் இந்த கூட இருக்கவிங்க தான் இப்டி உசுப்பேத்தியே ஒன்னும் இல்லாதத, காதலா மாத்திடறாங்க. ஆனா, என் விசயத்துல அப்டி நடக்கல, நான் நடக்க விடல. எனக்கு வேற மாதிரி கனவுகள் இருந்தது. இந்த தேவைதைக் கதைல எல்லாம் வர்ற மாதிரி, என்னத் தேடி ஒரு ராச குமாரன் வர மாட்டானா.. இப்படி ஏங்கிக்கிட்டு இருந்தேன். இது தெரிஞ்ச என்னோட கூட இருந்த பிள்ளைங்க எல்லாம், ஆமா அதெல்லாம் கதைல தாண்டி நடக்கும், உனக்கு நம்ம கடி நாய் தான், இப்படிக் கேலி பேசும்க, ஆனா, எனக்கு மட்டும் என்னவோ, உள்ளுக்குள்ள தோனிக்கிட்டே இருந்தது, ஒரு ராச குமாரன் வருவான்னு. காத்திருந்தேன். ஆனா, கடி நாய்க்கும் எனக்கும் இருந்த சண்டை மட்டும் தொடர்ந்துக்கிட்டே இருந்தது. என்னோட வாழ்க்கைல, இந்தக் கட்டத்துல, எனக்கு நெறைய சோகம் இல்ல, காசு இல்லனாலும், அத்தையோட பாசம் என்ன சந்தோசமா தான் பாத்துக்குச்சு. எனக்கு வயசு பதினெட்டு, பாக்க ரொம்ப நல்லா இருக்க மாட்