முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாழ நினைத்தால் வாழலாம்!

இது தான் என்னுடைய இறுதிப் பதிவு, எனக்கு வாழவே பிடிக்கல, இந்த உலகமே என்ன எதிரியாப் பாக்குது, எனக்கு வாழ வழியே இல்ல! நான் அதனால தீக்குளிக்கப் போறேன்!!! "அட என்னடா இது, தீக்குளிக்கப் போறாளா இந்தப் பொண்ணு??"னு நெனைக்கறீங்களா? அட சும்மா சொன்னேன்! ஆனா இத சொல்றப்போ எனக்கு அவ்வளவு வருத்தம் தெரியுமா? :(  :( அரசாங்கம் செய்ற ஒரு விஷயம் பிடிக்கலையா? இல்ல, உங்க தலைவருக்கு எதிரா ஏதும் நடக்குதா? அட, தீக்குளிச்சு எதிர்ப்பு தெரிவியுங்கப்பா!!! :( :( ஏன்? ஏன் இப்படி தீக்குளிக்கணும்? நம்முடைய எதிர்ப்பைத் தெரிவிக்க எத்தனையோ வழிகள் இருக்கு, அதுக்காக ஏன் நம்மள நாமே வருத்திக்கணும்? புகைப்படம்: google images உதாரணத்துக்கு, பரிட்சையில் தோல்வி, காதல் தோல்வி வியாபாரத்தில நட்டம் கடன் தொல்லை குடும்பப் பிரச்சனை வேளையில் பிரச்சனை!  உடனே  தற்கொலை! தற்கொலை ! :( இப்படி நிறைய சொல்லலாம். ஏன்? இருக்கும், இப்படி தோல்வியை சந்திக்கும் பொழுதெல்லாம் வேதனையாக இருக்கத்தான் செய்யும். அதற்காக தற்கொலை செய்து கொண்டா? நம்மைச் சார்ந்து இருக்கும் எத்தனை பேர் வேதனை அடைவாங்க? இதையெல்லாம் நாம நினைப்பதே இ

சக்தி தரும் உடைகள்!

என்னது? சக்தி தரும் உடைகளா? ஆமா, சக்தி தரும் உடைகள்! உடனே இந்த உடைகளை அணிந்து கொண்டாள், "சூப்பர் மேன்", "ஸ்பைடர் மேன் ",  போல சக்தி கிடைக்குமான்னு கேக்காதிங்க! இது "வேற" மாதிரியான சக்தி :) :) அதென்ன வேற மாதிரி? சொல்றேன் கேளுங்க :) இப்போ நாம எல்லாரும் எந்த மாதிரி உடை அணிய விரும்பறோம்? அட, கண்டிப்பா அழகா தான்! இதிலென்ன சந்தேகம்? சரி, இப்பொழுது நாம் உடை சார்ந்து சில விசயங்களை இங்கே பேசப் போகிறோம், பேசலாம்.  தொழில் சார்ந்த ஒரு சந்திப்பிர்க்குச் செல்லும் பொழுது எப்படிச் செல்வீர்கள் ? நல்ல "கோட் - சூட்" போட்டு? ( இது நம் கலாச்சாரம் இல்லை தான், ஆனாலும் இன்று பெரும்பாலானோர் இதை தான் பின்பற்றுகிறார்கள்) அப்படித் தான் செல்வோம். ஆனால் அதே உடையை நாம் வெளியே குடும்பத்தோடு கோவிலுக்குச் செல்லும் போது அணிந்து செல்வதில்லை. சரிதானே? சரி அதென்ன சக்தி தரும் உடை? என்று தானே கேட்கிறீர்கள். இதோ சொல்கிறேன். இது ஒன்றும் விசேசமான உடை அல்ல! நாம் தினமும் அணியும் உடை தான். அதை எப்படி அணிகிறோம் என்பதைப் பொறுத்து தான் அது நமக்கு சக்தி அளிக்கும்! சில உடை அணியும் விதம் பற்றிப்

ஓவம்மா#10 (தொடர்கதை)

முந்தைய பாகங்கள்: ஓவம்மா! #1  |  #2  |  #3  |  4  |  5  |  6  |  7  |  8  |  9 பொங்கல் வச்சு முடிஞ்சது, அன்னிக்கு சாயந்தரமா நான் வெளில வாசல்ல உக்காந்து இருந்தேன். என்னவோ தெரியல அந்நேரம்னு பாத்து எனக்கு அண்ணாச்சிப் பழம் சாப்டனும் போல இருந்தது. எப்பவும் எங்க பக்கத்துத் தெரு கடையில அண்ணாச்சிப் பழம் இருக்கும். அந்தக் கடைக்குப் போனேன். எந்நேரம், அங்க அந்தக் கடிநாயும் இருந்தான். என்னப் பாத்ததும் சிரிச்சான். எனக்கு கோவமா வந்தது. ஒரு மொற மொறச்சுட்டு திரும்பி, கடைக்காரர் கிட்ட கேட்டேன், "அண்ணே,  அண்ணாச்சிப் பழம் ரெண்டு கீத்து தாங்க!" "அட.. இப்போதாம்மா வித்து முடிஞ்சுது, நாளைக்கு வா..", கடைக்காரர் சொன்னது தான் தாமதம், "என்ன ஓவு.. (ஓவம்மாவ செல்லமாக் கூப்பிட்றானாம்)  அண்ணாச்சிப் பழம் தான, நான் வாங்கியாறேன், நீ வீட்டுக்குப் போ, நான் கொண்டு வாறேன்..", பாசமாத் தான் சொன்னான். "அதெல்லாம் ஒன்னும் வேணாம், நான் நாளைக்கு வந்து வாங்கிப்பேன்..", சொல்லிட்டு வேகமா நடையக் கட்டினேன். வீட்டுக்குப் போய் நெனச்சேன், "எப்படியும் இவன்  அண்ணாச்சிப் பழம் கூட கூடையா

தொழில் தர்மம்!

உங்களுக்குத் தெரியுமா "தொழில் தர்மம்" ???? தெரிந்திருக்க வேண்டும் கண்டிப்பாக.  நீங்கள் எந்தத் துறையைச் சார்ந்தவராக இருப்பினும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் தொழில் தர்மம். சரி, இந்தத் தொழில் தர்மம் என்றால் என்ன? ஏதோ, எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன் கேளுங்கள் :) நாம்  வேலை செய்யும் இடத்தில் மற்றவருடன் அன்பாக நடந்து கொள்ளுதல்  நமது  வேலையில் நேரம் தவறாமை நாம்  செய்யும் வேலையில் ஈடுபாடோடு இருத்தல் ஒரு நிறுவனம் வைத்து நடத்துகிறோம் என்றால், "போலியாக" விளம்பரம் செய்யாது இருத்தல். உண்மை, நேர்மை, ஒழுக்கம் இது போன்று அனைத்தையும் கடைபிடித்தல். இப்படி பெரிய பட்டியல் சொல்லிக் கொண்டே போகலாம்... இதெல்லாம் அடிப்படையாக ஒரு நல்லவரிடம் இருக்க வேண்டிய குணங்கள் தானே? உங்களிடம் இவை அனைத்தும் இருக்கும் என்று நம்புகிறேன். சரி, நான் இன்னும் விசயத்துக்கே வரவில்லை. நான் ஒரு பொறியியல் கல்லூரி மாணவி, எனக்கு, "ப்ரோபஸ்னல் எதிக்ஸ் அண்ட் ஹ்யூமன் வேல்யூஸ்" ("Professional Ethics & Human Values")  என்று ஒரு பாடம் உள்ளது. அதற்கென்ன என்று கேட்கிறீர்களா? 

1 லட்சம் வெல்ல வேண்டுமா???

உங்களுக்கு ஒரு லட்சம் பரிசு வெல்ல வேண்டுமா? அப்போ இது உங்களுக்கான பதிவு தான். வாசியுங்கள் தொடர்ந்து. ஒரு லட்சம் வெல்ல நீங்கள் செய்ய வேண்டியவை : உங்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும்  தமிழில் தன்னம்பிக்கை தொழில் சார்ந்த கட்டுரைகள் எழுதத் தெரிய வேண்டும். மூன்று தொழிர்களத்தில் நீங்கள் இணைய வேண்டும்! தொழிர்களத்தில் தங்களது பதிவுகளை இட வேண்டும். பிறகு, தொழிற் களம் நடத்தும் பதிவர் சந்திப்பில் பங்கு பெற வேண்டும். நீங்கள் எழுதும் பதிவு, சிறப்பானதாக இருப்பின், உங்களைத் தேர்வு செய்து ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருவார்கள்! என்ன தயாராகி விட்டீர்களா? ஒரு நிமிடம். இதை உங்களது நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். :) நீங்களும் பங்கு பெறுங்கள் :) "தொழிற்களம்" - இவர்கள் தமிழில் எழுதுபவர்களை ஊக்குவிப்பதற்காக இந்தத் தளத்தில் தமிழ் பதிவர்களைத் தேர்ந்தெடுத்து பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் எழுத வாய்ப்புத் தருகிறார்கள். தமிழை வளர்க்க இவர்கள் செய்யும் முயற்சியில் நீங்களும் பங்கு பெறுங்களேன்??? சரி,  வருகிற 26 ஆம் தேதி சென்னையில் சந்திக்கலாம் :) :) 

லட்சியம் வேண்டாம்! லட்சியம் வேண்டாம்!

குழம்பிவிட்டீர்களா? லட்சியம் வேண்டாமா? ஆம். லட்சியமே வேண்டாம் உங்களுக்கு. மிகப்  பெரிய அறிஞர்கள், சாதனையாளர்கள் சொல்வதுண்டு  லட்சியம் கொள்ளுங்கள், அதை நோக்கிப் பயணியுங்கள் என்று. நீங்கள் மாணவரா? வியாபாரியா? தொழிலதிபரா? விளையாட்டு வீரரா? பாடகரா? இதில் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், லட்சியம் வேண்டாம் உங்களுக்கு! லட்சியம் கொள்ள வேண்டும். எதற்காக? லட்சியம் இருப்பின் அதை நோக்கி உழைப்பீர்கள், அதை அடைய முயற்சி செய்வீர்கள். ஆனால், அது வேண்டாம் உங்களுக்கு. முதலில் எதற்காக லட்சியம் வேண்டாம் என்பதை யோசிப்பதற்கு முன்பாக, லட்சியம் இல்லாமல், வேறு என்ன செய்வது? இதோ சொல்கிறேன். உங்களது துறையில் முன்னேற! நான் உயரத்தை அடைய வேண்டும், என்று நினைக்காதீர்கள்! வெற்றி, புகழ், பெருமை கிடைக்க வேண்டும் என்று, எண்ணாதீர்கள்! பணம் ஈட்ட வேண்டும் நிறைய, துளியும் யோசிக்காதீர்கள்! "என்னாடா இது, இது எதுவுமே இல்லாமல், எப்படி முன்னேறுவது?", நினைக்கிறீர்களா? வழி இருக்கிறது. வெற்றி நிச்சயம்! பணம் தேடி அழியாதே தோழா., பயணித்திடு விருப்பத்தோடு! பெருமை விரும்பாதே தோழா,

நான் சாகும் நாள்!

அப்படி ஒரு ஓலம்! அந்தக் குரலில் சோகம்! நடந்து நடந்து தேய்ந்த கால்களுக்கும், தேடித் தேடி சிவந்த கண்களுக்கும், ஒன்றும் புலப்படவில்லை அந்தத்  தகிக்கும் பாலையில்! காதுகளில் அந்தக் குரல் மட்டும், மீண்டும் மீண்டும், கேட்டுக்கொண்டிருக்க, அரண்டு தான் போய் இருந்தேன்! உள் நாக்கு மீண்டும், "தண்ணீர் தண்ணீர்" போராட்டம் தொடங்க, செத்துக் கொண்டு நான் இருந்தேன்! நடக்கத் திறனில்லை, பார்க்க ஒளியில்லை, சரிந்து கிடந்தேன்! அந்த சோகத்தின் சத்தம், அதுவே, நான் உயிரோடிருப்பதன் அர்த்தம்! அந்த ஓலம், காதோரம் என் சாவை ஓதிக்கொண்டிருக்க, விழுந்தாள் அவள் என் மீது, நனைத்தாள் என் நாவு! மழையாய்..! மரண ஓலம் அடங்கி, விழித்த என் கண்ணோரம், புன்னகையோடு நின்றவள், உயிர் காத்து நின்றவள், "அம்மா!" பாலையோ சோலையா, எனைக் காக்கும், மழையவள் அம்மா!

ஓவம்மா#9 (தொடர்கதை)

முந்தைய பாகங்கள்: ஓவம்மா! #1  |  #2  |  #3  |  4  |  5  |  6  |  7  |  8 சொல்லுமா.. ரெண்டு பேருல யாரப் புடிச்சிருக்கு? எனக்கு எல்லாரும் கேக்கக் கேக்க, என்ன சொல்லனே தெரியல.. என்னால எதுவும் முடிவு பண்ண முடியல. ரெண்டு பேர் மேலயும் எந்த அபிப்ராயமும் இல்ல எனக்கு... இல்ல.. எனக்கு பிடிக்கல.. அழுக ஆரம்பிச்சு இருந்தேன் நான். எல்லாரும் என்ன சொல்றதுன்னு தெரியாம, "சரிப்பா.., அந்தப் புள்ளையையும் இப்படிப் படுத்துனா பாவம், என்ன சொல்லும்.. கொஞ்ச நாள் போகட்டும், முடிவு செஞ்சுக்கலாம்..", கொஞ்ச நாளைக்கு அந்தப் பேச்ச ஒத்தி வச்சாங்க.. எனக்கு அன்னைல இருந்து, ரெண்டு பேர் தொல்ல. ரெண்டு பேருக்கும் நடுவுல நான் மாட்டிக்கிட்டு முழிச்சேன். ஒரு நாள் ரெண்டு பேரும் சண்ட போடா ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு அப்போ ரெண்டு பேர் மேலயும் வெறுப்பா இருந்தது. கோவமா வந்தது.. "இங்க பாருங்க, எனக்கு உங்க ரெண்டு பேர் மேலயும் வெறுப்பா இருக்குன்னு" கத்தணும் போல இருந்தது. கோவமா வந்தது. ஒரு நிமிசம் கூட தனியா விடாம, என்ன தொல்ல செஞ்சுகிட்டே இருந்தா அப்படி தான இருக்கும்? கோவமா வந்தது. ஆனா என்கூட இருந்த பிள்ளைங