முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதை எழுதப் போகிறேன்!

கவிதை எழுதுவது பலருக்கும் இப்போதெல்லாம் கை வந்த கலை! நானும் ஒரு காலத்தில் கவிதை எழுதுவது பெரிய வித்தை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது நான் கவிதை எழுதப் போகிறேன், எனக்குப் பிடித்த கவிதை. இது உண்மையில் இதுவரை நான் முயற்சி செய்யாத ஒரு வகைக் கவிதை. சரி, கவிதை எழுதப் போகிறேன், என்ன கவிதை? கவிதையின் கருப்பொருள் என்னவாய் இருக்கும்? இப்படி எல்லாம் யோசிக்கிறீர்களா? சொல்கிறேன், இப்போது நான் எழுத இருக்கும் இந்தக் கவிதை, மிகவும் இனிமையானது. எனக்குப் பிடித்த என் தோழியைப் பற்றியது. ஆம், என் தோழிக்காக நான் எழுதும் கவிதை இது. அவளுக்கு எப்போதும் விளையாட்டு தான். சிரித்துக் கொண்டே இருப்பாள். இதோ இப்போது நினைத்தாலும் அவளது புன்னகை கண் முன்னே தெரிகிறது. “ சாப்டுவோம், கலக்கீட்டிங்க, நீயெல்லாம் நல்லா வருவா, ஆப்டியா? கிடு கிடூனு எழுதணும் இப்போ..., கிடு கிடுன்னு படிக்கணும்... ” , இப்படி அவள் பேசும் மொழிகளில் மயங்கி, ரசித்து ரசித்து என் மொழியும் அப்படி மாறிப்போனது! “ வேகமா எழுதணும்... ” , இப்படி சொல்லிக் கொண்டிருந்த நான், இவளோடு பேசிப் பேசி, “ கிடு கிடுனு எழுதணும் ” , இப்பட

டாலர் நகரம்!

இன்று உலகில் எல்லோருக்கும் ஒரு புது மோகம் உருவாகி வருகிறது, என்ன அது? தங்களது சம்பளத்தை "டாலரில்" சொல்ல வேண்டும் என்பதே அது. சரி டாலர் நகரம் என்றால் எது? அமேரிக்காவா? இப்படி தான் பெரும்பாலானோர் கேட்பார்கள்.   அருகில் இருப்பதன் அருமை எப்போதுமே தெரியாது என்பார்களே? அது உண்மையா? உண்மை தான். இங்கு தமிழகத்தில் ஏற்றுமதியில் பெரிதும் சிறந்து விளங்கும் திருப்பூரைத் தான் நான் டாலர் நகரம் என்று சொல்கிறேன். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், நான் இங்கு திருப்பூரைப் பற்றி பேசப் போவதில்லை! எனக்கு வாழ்வில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட, தமிழ் ஆர்வம் ஏற்படக் காரணம் என்ன என்றால், திருப்பூரில் நான் படித்த பள்ளியில் இருந்த எனது தமிழ் ஆசிரியர் என்பேன். அப்போ, இந்தப் பதிவு அந்த ஆசிரியர் பற்றியதா? இல்லை! டாலர் நகரம்! இது, ஒரு புத்தகம்! என்னை பெரிதும் ஊக்குவித்து வரும் ஒரு உயர்ந்த மனிதரின் புத்தகம்! திருப்பூரில் இன்று நூறு கோடி வருவாய் ஈட்டும் ஒரு பெரும் நிறுவனத்தில் மேலாளராக இவர் இருக்கிறார். இந்த நிலையை அடைய அவர் சிந்திய வியர்வைத் துளிகள், அந்தத் துளிகளை அவர் சேமித்து வ

பண்டிகைகள் இருந்து என்ன பயன்???

இதோ பொங்கல் வருகிறது, பொங்கல் கொண்டாடவே விருப்பம் கொஞ்சம் குறைந்து விட்டது, கொஞ்சம் என்ன கொஞ்சம்? நிறையவே குறைந்துவிட்டது! புத்தாடை அணிந்து, அம்மா வைத்த பொங்கலை ஒரு கிண்ணத்தில் போட்டு, ஆசையாய் எடுத்துப் போனாலும், அதை வாங்கப் போவதில்லை, பக்கத்து வீட்டு அக்கா! காரணம் அவர் வேறு மதமாம்! எதிர் வீட்டு அக்கா வாங்கிக் கொள்வார், காரணம் அவர் என் சாதி தானாம்! ஆனால், பக்கத்து வீட்டு அண்ணா வாங்குவார், சாப்பிடமாட்டார், என்னிடம் வாங்கி, அவர் வீட்டின் பின்பக்கம் இருக்கும் குப்பைத் தொட்டிக்கும், நாய்க் குட்டிக்கும் பங்கு வைத்துக் கொடுப்பார்! அவர் வேறு வகுப்பாம்! வீட்டில் தான் இந்தக் கொடுமை, கல்லூரியில் எல்லோரும் என் நட்பு தானே? கொண்டாடுவோம் என்றால், அதுவும் நடக்காது. கல்லூரி விடுதியில் வைத்த பொங்கலை எல்லோரும் உண்டார்கள், உண்டோம், ஒரு சிலரைத் தவிர, ஒரு சில தோழிகளைத் தவிர! ஏன் உண்ணவில்லை அவர்கள்? வேறு மதமாம் அவர்கள்! சாத்தான் பிடிக்குமோ அன்பாய் ஒருவர் கொடுக்கும் உணவை உண்டால்? அன்பு! அன்பு என்று பேசுபவர்கள் தான் இவர்களும், ஆனாலும், நான் கொடுக்கும், என் அன்பு நிறைந்த பொங்கல், அதைத் தீண்டவும் ம