முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அப்பா - அம்மா - மகளின் பார்வையில்! #3

"நல்ல மனைவியாக இருப்பது எப்படி?" இந்தத் தலைப்பில் தான் இந்தத் தொடர் பதிவை எழுதத் தொடங்கினேன். ஆனால், அது பொருத்தமாக எனக்குத் தோன்றவில்லை இப்போது, அதனால், தலைப்பை மாற்றிக் கொள்கிறேன், " அப்பா -அம்மா -  மகளின் பார்வையில்!" என்று. உங்களுக்கு எதுவும் வருத்தம் இல்லை தானே, இந்தத் தலைப்பு மாற்றத்தில்? முந்தைய பதிவுகள்: அப்பா - அம்மா - மகளின் பார்வையில்! #1   #2 இது வரை ஐம்பது முத்துக்களில் ஐந்தே ஐந்து முத்துகளைத் தான் உங்களுக்குக் காட்டினேன். இதோ இன்று அடுத்த ஐந்து முத்துக்களைப் பார்க்கலாம்!  முத்து ஆறு: ஒரு காரியத்தைக் கணவன் சாதித்து முடித்தவுடன் மனைவி அதைப் பாராட்டும் கையோடு அடுத்த காரியத்தையும் சுட்டிக் காட்ட வேண்டும். அதனை அடையத் தட்டிக் கொடுக்க வேண்டும். அது நிறைவேறியதும் அடுத்தது. அதன் பிறகு இன்னொன்று. இப்படியே அவனை ஆற்றுப் படுத்த வேண்டும். உண்மை அப்பாவின் வெற்றியில் சாதனையில் அம்மாவின் பெரும்பங்கு இது தான். முன்பு நான் குறிப்பிட்டது போலவே இங்கும் நாம் அம்மாவும் வேலைக்குப் போகும் சூழல், அல்லது கைத்தொழில் செய்யும் சூழல் போன்றவற்ற

பாவமடி நான்!

உண்மையில் எனக்குத் தெரியாது! புத்தகம் படிக்கத் தெரிந்த அளவு, பிறரது புத்தியைப் படிக்க! கடினம் தான் எனக்கு, கணிதம் போடுவதோடு சேர்த்து, கொஞ்சம் ஞாபகம் கொள்வதும்! எல்லோரும் கேலி செய்தீர்கள், கேலி என்ன கேலி? கோபமே கொண்டீர்கள்! உண்மை தான், பாடப் புத்தகத்தில் வரும், வைரஸ்கிருமியின் பெயர்களை நினைவில் பதிய வைத்துக் கொண்டேன்! ஏனோ, மனிதரின் பெயர்கள், மனதில் பதியவே மறுக்கிறது, அடிக்கடி மறக்கிறது! பெயர் தான் மறந்ததே தவிர, பாசம் மறப்பதில்லை! பிரிவும் பிடிப்பதில்லை! அதோ, அன்றொரு நாள், எனக்கு தேநீர் வாங்கித் தந்தாயே, நீயும் நானும் ஒரே சாலையில், நடந்து போனோமே? பனிக்கூழ் வாங்கக் கூடாது, பாட வேண்டும் நான், மறுவாரம், பாட்டுப் போட்டி எனக்கு, பாசமாய் சொல்வாயே, பனிக்கூழ் சாப்பிடாதே என்று! "படம் வரஞ்சு தா பிரியா" நான் கேட்க, எனக்காக படம், அழகான படம்  வரைந்து நீ தர,  அதை வாங்கி, அழகாய் பையில்  போட்டுக் கொண்டேனே?

அனுபவக் கல்வி!

கல்லூரியில், கல்விக் கூடங்களில், கற்றது கல்வியல்ல! கனவுகளோடு கொஞ்சம், கண்ணீரும் வியர்வையும், கச்சிதமாய்க் கலந்து, காலையும் மாலையும், குடும்பத்தைப் பிரிந்து, எங்கோ உயரத்தில் இருக்கும், "எட்டுமோ, எட்டாதோ?" எப்போதும் கண்ணாமூச்சி காட்டும், எளிதாய் எப்போதும் கிடைக்காத, அந்த மூன்று எழுத்தை அடைய, இப்போது நாம் செய்யும், இந்தப் பயணத்தின் இறுதியில், இறுதியாய் கிடைக்கும், அந்தப் புன்னகை,  அதை அடைய நாம் வகுத்த, அந்த அழகான நுணுக்கங்கள், அதுவே, கல்வி, நாமாய் க(பெ)ற்றெடுத்த, அனுபவக் கல்வி!