முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குட்டிக் கண்மணியும் சி.இ.நா.வி யும்!

எனக்கு தற்பொழுது இருபது வயதாகிறது! அதனால், நானே என்னைக் குட்டிக் கண்மணி என்று சொல்லிக் கொண்டாலே ஒழிய, யாரும் சொல்லப் போவதில்லை! (பாவம் சொல்லிக்கிறேனே, விட்டுடுங்க, என் ஆசைய ஏன் கெடுப்பானேன்?) குட்டிக் கண்மணி எப்படி எல்லாம் இருந்தாள் என்பதை அறிய ஆவல் இருந்தால், இந்தப் பதிவை நீங்கள் படிக்கலாம். (சுய புராணம் :) ) இப்படி அடிக்கடி எனக்குச் சிறுவயதில் நடந்ததை எல்லாம் யாரிடமாவது சொல்வதென்றால் எனக்கு அத்தனை பிரியம், என்னைச் சுற்றி இருக்கும் தோழிகளிடம் கேட்டால் உங்களுக்குப் புரியும்! நான், “சின்ன வயசுல....”, இப்படி வாயைத் திறந்தாலே ஓட்டம் பிடித்துவிடுவார்கள்! :) அத்தனை முறை சொல்லி இருக்கிறேன் என் வாழ்க்கை வரலாற்றை... :) அதென்னவோ, நான் எப்போதுமே ஆனந்தமாகத் தான் இருந்ததாக நினைவு! இதுவரை பெரிதாய் துன்பம் என்று கண்டதில்லை! அப்படியே துன்பம் என்று தேடிப் பார்த்தால், என் வரலாற்றில் :) :P பள்ளிக் கூடத்திற்கு வீட்டுப் பாடம் எழுத நிறைய இருக்கிறதே என்பதாகத் தான் இருக்கும்! சிறுவயது என்றாலே பள்ளிக்கூடம் தான் நினைவுக்கு வரும் எனக்கு. பள்ளியில் நான் எத்தனை அழகழகான விளையாட்டெல்லாம் ஆடி இருக்கிறேன்