முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அன்னையர் தினம்

ஆயிரம் பெண்களை பார்த்தாலும் ரசித்தாலும், அழகில் ஒருத்தியும், என் அன்னைக்கு ஈடு இல்லை.... என்றும் தாய்மையின் பெருமை போற்றுவோம்.... என் அன்பு அன்னையின் ஆசை முத்தங்களுக்கு.. ஆண்டவனும் ஈடில்லை... ஆரத் தழுவடி, ஆனந்தமாய் உறங்கிடுவேன்... அடுத்த நொடியே......

இனிய இதழ்கள்

அழகான பூக்கள் ஆனந்த நாட்கள் மீண்டும் மீண்டும் நினைத்தால்.. மலரும் இரண்டுமே..... 

சிறு கதை

                                                                குளிர்ந்த காற்று..... அந்தப் பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த அவளின் கண்களின் ஓரம் வெள்ளமாய் கண்ணீர் பெருகி வந்தது. நடந்ததை மீண்டும் நினைத்துப் பார்த்தாள். தான் அவசரப்பட்டுவிட்டோமோ என்று தோன்றியது. வீட்டை விட்டு வெளியேறியது தவறு என்று தோன்ற, அவள் தேம்பி அழ ஆரம்பித்தாள். இருப்பினும், தன் தந்தையின் மீது அவளுக்கு கோபம் அதிகமாகவே வந்தது. குளிர்ந்த காற்று அவள் கோபம் தணிக்க முயன்றது. ஆனால் காற்றுக்கும் தோல்வியே! நடந்ததை நினைத்து பார்த்தாள்...... "எவ்வளவு கம்மியா mark வாங்கியிருக்க? 1130! இந்த மார்க்குக்கு உனக்கு எவன் medical seat தருவான்? .... என் கனவுல மண்ண போடுட்டியே." "அப்பா.. என்னால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணேன், இவ்வளவு தன்பா முடிஞ்சுது என்னால please... புரிஞ்சுக்கோங்கப்பா..."(இது பொண்ணு) "என்னமோ போ! இனி உனக்கு படிக்க என்னால செலவு பண்ண முடியாது, உ...

கவிதை - நண்பன்

என் மடியில் தவழும் உரிமையும், என் மார்பில் தங்கும் இனிமையும், என் கைகள் தீண்டும் வாய்ப்பும், என்றும் உனக்குத் தந்தேன் ..... உனக்காக ஒன்றும் செய்யாவிடினும், உன்னிடம் ஒட்டு மொத்தமாய் பெற்றேன்.... உன்னைப் புரிந்து கொள்வது, பெரும்பாடாக இருப்பினும் புரியத்தான் வேண்டும்.... பழகத்தான் வேண்டும்... உன்னிடம் அனைத்தையும் அறிய , புரிய, காலம் நேரமில்லாமல் கண் உறங்காமல், நாட்கள் நகர்கின்றன.... உன்னைத் தவிர வேறு எதையும் உச்சரிக்கவோ, உணரவோ உள் மனம் அனுமதி தரவில்லை .... அறிவுப் பெட்டகமே..... இனிமையான என் நண்பன் நீ ---- என் கணக்குப் புத்தகம்.....