முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நகைச்சுவை நாயகன்!!!

உலகமே சிரிக்க., உயிர் பெற்று செழிக்க., தன் சோகத்தை உரமிட்டு., நகைச்சுவை பூக்களை நட்டு வைத்தவன்!!! ஹிட்லர் ஆட்சியை., கேலிப் பொருளாக்கி., கவனம் ஈர்தவன்!!! மனித நேயம் நிறைந்த., மனசுக்கு சொந்தக்காரன்., மழையில் தன் கண்ணீரை., வாரி இறைத்து., நகைச்சுவை வாசம்  பரப்பி நின்றவன்., பிரியா இடம் நம் மனதில் பிடித்து., உலகம் விட்டு., பிரிந்து சென்ற நாள்., சுவாசத்தின் துளிகள் சேர்த்து., நன்றி சொல்கிறேன்., உன் மனிதத்திற்கு!!!

தேவனின் திருவிளையாடல் :-

பணம் படைத்த அவன்., பாவமும் நிறைய படைத்திருந்தான்!!!! கிறிஸ்துமஸ் கொண்டாட, குடும்பத்தோடு வெளிநாடு சென்றான்!!! பணம் இல்லாத அவள், சொந்தமும் இல்லாமல்., சோகத்தில் இருந்தாள், தள்ளாத வயதும், துவண்ட தேகமும்., சிரமம் தந்தாலும்., ஏக்கம் தான், ஏக குடைச்சல் தந்தது... கிறிஸ்துமஸ் தாத்தா, வருகைக்கு காத்து நின்றான் அவன்.. கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லக் கூட ஆள் இல்லாமல்., வாடி இருந்தாள் அவள்!!! புத்தாடையும் விருந்துமாக, பூத்திருந்தான் அவன்!!! பழைய ஆடையில் உள்ள கிழிசலை தைத்து, அவனுக்கு பாலூட்டிய தன் மார்பில் வழியும் சோகம் மறைத்து., " கிறிஸ்துமஸ் திருநாளில்., தேவன் உன்னை ஆசிர்வதிக்கட்டும் மகனே!!! " மனதுள் முனுமுனுத்தாள்!!! அவளை முதியோர் குடிலில்., சேர்த்த நினைவு கூட இன்றி., கிறிஸ்துமஸ் களிப்பில் இருந்தான் அவன்...

தொடர்கதை ---> பாகம் 6 ---> சிக்ன(க)ல்

(பாகம் ஐந்து படிக்கவில்லையா? இந்த link உபயோகப்படுத்துங்க தொடர்கதை ---> பாகம் 5 ---> சிக்ன(க)ல் படிச்சிட்டு, இங்க வாங்க .) பதற்றத்தோடு அவளின் கண்களின் பிரகாசத்தில் கூசி நின்றான்.. சுவாதி , " என்ன கிருஷ்ணா? என்னவோ பேசணும்னு, எதுவும் சொல்லாம இருக்ற...??? " "அது.. இல்ல, இல்ல... சுவாதி .. நீ தப்பா எடுத்துக்க கூடாது...??? " என்று வார்த்தைகளை தெருவோரம் சவ் மிட்டாய் விற்கும் வியாபாரி போல இழுத்து மென்று விழுங்கிக் கொண்டு இருந்தான்... ஆணையும் இலக்கி., பதற்றம் தந்து., நாண வைக்கும் சக்தி , காதலுக்குத் தான் இருக்கிறது என்று முழுதாய் உணர்ந்து நின்றான்.. இழுத்ததிலேயே... லேசாகப் புரிந்தது போல் உணர்ந்தாள் சுவாதி.. "சொல்லு தப்பா எடுத்துக்க மாட்டேன்..? என்ன கிருஷ்ணா.. லேட் ஆகுது எனக்கு.."  " இரு சுவாதி சொல்லிடறேன் ." கிருஷ்ணா பதறினான். நடுவே புகுந்தாள் busstop சென்றிருந்த சுவாதியின் தோழி.. " ஏ சுவாதி எங்க அப்பா phone பண்றாங்க, சீக்ரமா வீட்டுக்கு நான் போகணும்.. வா.. late ஆகுது எனக்கு.." " சாரி கிருஷ்ணா... நான் கெளம்பனு...

முரண் --- காலணி :

ஏழையிடம்  ---> வறுமைக் கோடு!!! மத்திய வகுப்பிடம்  ---> பாதுகாப்பு!!!  செல்வந்தனிடம்  ---> பகட்டு!!!! கோவிலின் வெளியே., ---> திருட்டு!!!

தொடர்கதை ---> பாகம் 5 ---> சிக்ன(க)ல்

( பாகம் நான்கு படிக்கவில்லையா? இந்த link உபயோகப்படுத்துங்க தொடர்கதை ---> பாகம் 4 ---> சிக்ன(க)ல் படிச்சிட்டு, இங்க வாங்க .) அன்று இரவு ஒன்பதரை மணி இருக்கும்., கிருஷ்ணாவும் சுவாதியும் வழக்கம் போல் சிறிது நேரம் text செய்து பேசிக் கொண்டு இருந்தார்கள். " நான் உன்ன short-ஆ கிருஷ்-ணு கூப்டவா கிருஷ்ணா? " "இதெல்லாமா permission வாங்கிட்டு கூப்டுவ ? கூப்டு உனக்கு புடிச்ச மாத்ரி no probs "  type செய்து அனுப்பிய போது , கிருஷ் என்று சுவாதி வைத்த செல்லப் பெயர் " பாரத ரத்னா விருது " பெற்ற இன்பம் தந்திருந்தது கிருஷ்ணாவிற்கு. "தூக்கம் வருது கிருஷ் , நாளிக்கு exam இருக்கு படிக்கணும் இன்னும் கொஞ்சம் morning எந்திச்சு தான்., good night..."  "ஏ சுவாதி நாளிக்கு என் birthday, உனக்கு treat குடுக்கலாம்னு நெனைக்கிறேன் . evening நம்ம first meet பண்ண சிக்னல் கிட்ட இருக்ற Friend connect pizza hut- கு வரியா?? "  "ம்ம்ம்ம்... ok. கிருஷ்ணா, நான் friend ஒருத்திய கூட கூட்டிட்டு வருவேன் பரவாலியா? " " ஓகே பரவால "  "...

முரண் : கருப்பு - வெள்ளை - வானவில் !!!

வெள்ளைப் பூக்கள்  பூத்து நிற்க , பனி போல படர்ந்திருக்க ., நிலவைப் போல்., சிறு பிழைகளும்  சிதறி இருக்க., அழகிய பூஞ்சோலைகள்!!! கருப்புக் கரி போல , காய்ந்து போன  தேயிலை போல, நீளம் கலந்த நிலக்கரி போல, ஒவ்வொரு தோட்டத்திலும்  ஒவ்வொரு வண்ண வண்டு., தேன் குடித்து நிற்கும். கருப்பு வெள்ளைத் தோட்டம் , கருப்பு வெள்ளை முரண்., வானவில்  காட்டும்  நம் கண்கள்!!!

தொடர்கதை ---> பாகம் 4 ---> சிக்ன(க)ல்

(பாகம் மூன்று படிக்கவில்லையா? இந்த லிங்க் உபயோகப்படுத்துங்க,  தொடர்கதை ---> பாகம் 3 ---> சிக்ன(க)ல் படிச்சிட்டு இங்க வாங்க.) தயங்கி நின்ற சுவாதி பேசத் தொடங்கினாள் , " sorry கிருஷ்ணா, ஊர்ல தப்பா பேசிருவாங்க , எங்க வீட்லயும் விரும்ப மாட்டாங்க, sorry, if you don't mind  bus-கு money மட்டும் குடு ? நான் திருப்பி குடுத்திடறேன் " கிருஷ்ணாவிற்கு என்னவோ போல் ஆயிற்று, "காசு எல்லாம் வேணாம் சுவாதி ", சொல்ல நினைத்தவன் நிறுத்திக் கொண்டான். "திரும்பப் பெரும் பொழுது சந்திக்க வாய்ப்பு கிடைக்குமே" என்ற நினைப்பு!!! பேருந்திற்கு பணம் மட்டும் கொடுத்தான். " மொபைல் நம்பர் கேளுடா " குதூகலித்து நின்றது மனது. அவன் கேட்கும் முன்பே அவளே கொடுத்தாள் நம்பர் , " இது என் mobile number, நீ எப்போ எதுனாலும் டக்குனு call பண்ணிடாத, உன் number தா,  நான் text  பண்றேன், நான் முக்யம்னா call பண்றேன், நீ call  பண்ணாத எங்க வீட்ல திட்டுவாங்க " number-ம் கொடுத்து , வருசயாக உபயோகிக்கும் முறை என்று பட்டியலும் இட்டாள் சுவாதி. தலை அசைத்தவாறே அவள் பே...