முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

முகவரி தேடி!!!

ஓடும் பேருந்தோடு சேர்ந்து, முகவரி இல்லாக்  கடிதம் --> சுமை! பந்தயம் ஓடும், சாலையோர சருகுகள்!! எதையோ வெறித்துப் பார்க்கும், மரத்தடி முனிவர்கள்!! புனிதமான பூக்களுள், பூரித்துக் கிடக்கும், பன்னீர் வாசம்!! உணவைத் தேடி எங்கிருந்தேனும், ஊர்ந்து வரும், எறும்புக் கூட்டம்!! அவன் முகம், பார்க்கும் போது, சிவந்த பௌர்ணமியாய் மாறும் என் முகச் சிவப்பு! கோடி மையில்கள், தேடித் போனாலும், முகவரி அறியாமல், நான் தவிக்கும் சில இன்பக் கடிதங்கள்!

பூ முதல் பெண் வரை!

தினம் தினம் , My sweet love flowers just for you! உன்னைத் தேடித் தேடி, கண்கள் சோர்ந்து போக! ஏக்கத்தோடு நான், பார்க்கும் பெண்கள் கூட, உன் போல் தோன்ற! நிஜமாய் கண்ணா, நீ நிஜமாய், நேரில் தோன்ற! "சிச்சி பிரம்மை...", விலகி நடந்தேன், விசித்திரமாக! என் கூந்தல் சுவாசிக்கும் பூவெல்லாம் உனக்காக, உன் கண்கள் சுவாசிக்க, சூடினேனடா! உன்னைக் காணாமல், நான் வாடியது போல, கூந்தல் மட்டுமே சுவாசித்து, நீ சுவாசிக்காமல், வாடுது என் தலை ஏறிய, காதல் பூக்கள்! பூ முதல் பெண் வரை, பார்க்கும் அனைத்திலும், உன் காதல் முகம்! நினைவுகள் முழுவதும், நீங்கா இடம்!

கொண்டேன்......

உன்னோடு நான் நாணிய நொடிகள், சிவந்தேன்...! "எனக்கே கேட்காமல், எனக்கே புரியாமல், என்னால் பேச இயலும்" உன்னோடு மெதுவாய் மெதுவாய், பேசிப் பேசியே, அறிந்து கொண்டேன்! உலகில் உள்ள சிவப்பெல்லாம், ஊற்றினார் போல, அழகாய் என் கன்னம் நாணத்தில் சிவக்கும், தோழி உன் பெயர் மொழிந்த நொடியில், நாணம் கொண்டேன் ! செல்லக் கோபங்களால், சண்டைகள் கூட இனிக்கும், கொஞ்சிக் கொஞ்சி, இனிப்பாய் என்றும், நீ திட்டும் திட்டில், உணர்ந்து கொண்டேன்! "உன் கனவுல இன்னிக்கு வந்தேனா?" உறங்கி எழுந்த மறுநொடி, நான் உன் கண்ணுக்குள், உற்று உற்று, உண்மை கேட்கும் நொடியில், என்னுள் உள்ள சிறுமி, புரிந்து கொண்டேன்! நீ என் சோகத் தெப்பத்தில், முழுவதும் நனைந்து, ஈரமாகி ஈரமாகி, என் சோகம் வற்றிப்போவதால், "அழுவதும் சுகம் தான்" நேசம் கொண்டேன்!

காதலின் நிறம்!

நான் உன் இதயம் தொட்டு, நீ என் கண்கள் பார்த்து, பேசிக்கொள்ளும் புரியா பௌர்ணமியின் வண்ணம்! பூக்கள் பரிமாறி, வாசம் களவாடும், ஈர ரேகையின் வண்ணம்! கீழ் வானம் பார்த்து, கை கோர்த்து நடக்கும், சாலையின் வண்ணம்! ஒன்றாய் சேர்ந்து, ஏழையின் கை தொட்டு, கண்ணீர் துடைத்து, நாம் உதவிடும் நேரம், உண்மை உயர்வின் வண்ணம்! காதலின் வண்ணம் , நம் இருவரோடு நிற்காமல், கண்ணீர் கலைக்கும், புன்னகை விதைக்கும், புண்ணியத்தின் வண்ணமாய் பூவுலகம் சூழும், இறைவனின் வண்ணம்!

புயல்!!!

தூரத்தில் தொடங்கி, என் வீட்டு முற்றம் சேர்ந்து, ஏனோ சொல்லாமல் சொல்லுது, புயல்!!! பேசாமல் பேசுது, சீற்றமாய் சில நேரம், சுகமாய் சில நேரம்!!! கனவில் தொலைந்த, பொக்கிஷம் கொஞ்சம், பாவங்கள் கொஞ்சம், அடித்து வருது, ஆறுதல் பேசுது, அடிமனம் வதைக்குது!!! ஈரமாய் பேசி, என் இதயம் நனைக்குது, சோகத்தில் வரண்டேன், தாகம் தீர்த்தது, சந்தோஷம் அடைந்தேன், சுனாமி ஆனது !!! இனிப்பான  நரகம், இந்தக் காதல் புயல்!!!

தீயிலிட்டேன்!!!

அதிகாலையில் சேவல் கூவ, இன்று காலை, என் வீட்டில், கணபதி ஹோமம்!!! அனுமதிக்காமல்!! இரண்டு மணிக்கே துயிலெழுந்து, தீபம் ஏற்றித் துவங்கினோம்!! --- கணபதி ஹோமம்!!! உண்ணும் பண்டம் அனைத்தும்., தீயிலிட்டோம்!! "பொங்கல், புளியோதரை?!!" இதை எல்லாமா யாகத்தில் போடுவர்?!! ஒரு வேளை உண்ண வழியின்றி, ஒரு கோடி பேர் இருக்கும் ஒரு தேசத்தில்., உணவைத் தீயிலிட்டு, வழிபடும் முறை, தேவைதானோ? " தேவை இல்லை!!! " பளீரென மனம் சொன்னாலும், அம்மா அப்பாவின் ஆணை (ஆசை.,) வேறு வழியின்றி, தீயிலிட்டேன்!!! "பொங்கலும் புளியோதரையும்!!!" தீயிலிட்டேன், என் எண்ணங்களையும்., எதிர்ப்பையும்., வாய் பேச இயலா., அப்பாவி இந்தியப் பெண்ணாய்!! :'( :(

காதலில் பதம்!

கருப்பட்டிக்கட்டி போல், கடினமானது தான், என் மனம், முதல் வார்த்தை நீ மொழியாத வரை! கசிந்து உருகியதே, காய்ச்சினாய் காதலால், கள்வா, என்னுள்ளத்தை! முதல் வார்த்தை பேசியதும், கம்பிப்பதம் அடைந்தது, மறுவார்த்தை பேசியதும், முத்துப் பதம் கொண்டது! காதல் நீ சொன்னதும், கரைந்தே போனது, முழுவதுமாய்...! உருக்கி உருக்கி, உன் காதலால், சாக்லேட் சிலையாய், செதுக்குகிறாயே என்னுள்ளத்தை, உனக்காக, உனக்காக, செதுக்குகிறாயே என்னுளத்தை, நீயே உனக்காக! ----------------------- குறிப்பு: கம்பிப் பதம், முத்துப் பதம் ---> சீனி அல்லது கருப்பட்டிப் பாகு தயாரிக்கும் பொழுது, உருகிய திரவத்தின் பக்குவத்தைக் குறிக்க பொதுவாக உபயோகிக்கும் வார்த்தைகள்.