முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

யார் சொன்னது? (அழகின் ரகசியம்)

Beauty வேறு யாராகவும் நான் இருக்கமாட்டேன்! நொறுங்கிப் போகச் செய்தாய், நன்றாக இல்லை என்றாய், ஆனால், யார் நீ கணிப்பதற்கு, நீயே குறைகளோடு இருக்கையில்? உன்னிடம் நிறைய இருக்கிறது, நீ மாற்றிக் கொள்ள வேண்டியது! ஆனால், நான் என வருகையில், வேறு யாராகவும் நான் இருக்கமாட்டேன்! நான் அழகு தேவதை அல்ல, ஆனால் நான் அழகி தான்! உனக்கு உரிமை உண்டு, அழகான வாழ்க்கை வாழ! யார் சொன்னது? யார் சொன்னது, நீ முழுமை இல்லை என்று? யார் சொன்னது, நீ லாயக்கில்லை என்று? யார் சொன்னது, நீ மட்டும் தான் காயப்படுத்துகிறாய் என்று? நம்பிடு என்னை, அழகின் விலை அதுவே, யார் சொன்னது நீ ஒயிலாக இல்லை என்று? யார் சொன்னது நீ அழகாக இல்லை என்று? யார் சொன்னது? இது சற்று வேடிக்கை தான், வேறு எதுவும் வேடிக்கையாக இல்லை, நீ மட்டும் வேடிக்கையோ? நீ புரியவை உன்னை அவர்களுக்கு! அவர்கள் உண்மையை மறைப்பார்கள், அது வெளிச்சத்தைக் காணாத, ஒரு கலை போன்றது! உன்னை விண்மீன்களுக்கு கீழே வைத்து, வானத்தைத் தொட, விடவேமாட்டார்கள்! நான் அழகு தேவதை அல்ல, ஆனால் நான் அழகி தான்! உனக்கு உரிமை உண்டு, அழகான வாழ்க்கை வாழ! ய...

அப்பாக்குட்டிக்குப் பிறந்த நாள்!

அப்பாக்குட்டியும் நானும்! என்னுடைய பதிவுகளை தொடர்ந்து வாசிப்பவர்களுக்குப் புரிந்திருக்கும், இது எதைப் பற்றிய பதிவு என்று. ஆம், இன்று அப்பாக் குட்டியின் பிறந்த நாள். அப்பாக் குட்டி? அது யார்? தெரியாதா உங்களுக்கு? அட, அது என்னுடைய அப்பா! சிறுவயதில் என்னை அவர் அப்படித் தான் அழைப்பார். இப்போது நான் பெரியவள் ஆனதும் அப்படி அழைப்பதில்லை! :( அதனால் என்ன? இப்போது நான் அவரை பதிலுக்கு அப்பாக் குட்டி என்று அழைக்கிறேனே! இன்று என் அப்பாக் குட்டிக்கு பிறந்தநாள், அதே போல, என்னுடைய இரண்டு வகுப்புத் தோழிகளுக்கும் பிறந்த நாள்! :) ஒரு மிட்டாய் கிடைத்தாலே ஆனந்தம், இதில் இன்று "கண்ணா, இன்னொரு லட்டு தின்ன ஆசையா?", என்பது போல, நிறைய மிட்டாய் கிடைக்கப் போகிறது! :) மேலும் இன்று என் கல்லூரியில் ஆண்டு விழா வேறு! கேட்கவா வேண்டும், அப்பா அம்மா தம்பி எல்லோரும் வருகிறார்கள், ஒரே ஆனந்தம் தான் இன்று! இத்தனை நாட்களாக, புத்தகம், சோறு, உறக்கம், இது மட்டுமே செய்து கொண்டிருந்த எனக்கு மாற்றாக, கொஞ்சம் கலை நிகழ்ச்சி, அற்புதமான ஆண்டு விழா உணவு, அப்பா, அம்மா, தம்பியோடு சேர்ந்து இருப்பது என்று நல்ல நல்ல நிக...

நேரமே இல்லையே!

யாராவது என்னைத் தேடினீர்களா? இல்லையா? :( ஆமாவா? :) சரி, தேடினீர்கள் என்றால் உங்களுக்கு ஏன் இந்த வாரம் எதுவும் எழுதவில்லை என்று ஒரு செய்தி. நிறைய படிக்க வேண்டி இருக்கிறது! இரண்டு வாரம் விடுமுறை விட்டார்கள் அல்லவா கல்லூரிக்கு, ஏன் என்று தான் உங்களுக்குத் தெரியுமே. இப்போது, எல்லாம் சேர்த்து நிறைய படிக்க வேண்டி உள்ளது. ஆக, இன்னும் ஒரு பத்து நாட்களுக்கு மேல், நான் பதிவு போட வர இயலாது. புரிகிறது, "நீ எல்லாம் எழுதலனு யாருமா கேட்டா", இப்படி நீங்கள் சொல்வது எனக்குக் இங்கே வரை கேட்கிறது. இருந்தாலும், எழுதுவது என்று வந்துவிட்டால், எழுதிவிடவேண்டும் தானே???!!! (தலை சுத்துதோ?) சரி, இதனால், கம்பெனி சொல்ல வருவது என்ன என்றால், இன்னும் சிறிது நாட்களுக்கு பதிவுகள் இட நேரம் இருக்காது என்று நினைக்கிறேன். அவ்வளவே. சரி போய் நீங்க பழைய பதிவ எல்லாம் சமத்தா படிங்க பாப்போம். :)

அப்பா - அம்மா - மகளின் பார்வையில் #4

புதிதாக வாசிபவர்களுக்கு, இது ஒரு தொடர் பதிவு ஆதலால், கீழே இருக்கும் இணைப்பைப் பயன்படுத்தி முந்தைய பதிவுகளை படித்துவிட்டு, இங்கே வாருங்கள்! முந்தைய பதிவுகள்: அப்பா - அம்மா - மகளின் பார்வையில்! #1   #2   #3 இதுவரை நாம் பத்து முத்துகளை பார்த்துவிட்டோம், இப்போது தொடர்ந்து அடுத்து கொஞ்சம் முத்துக்களை நம் மாலையில் கோர்க்கலாம், வாங்க! முத்து பதினொன்று: அவன் எப்போது வருவான் என்று காத்திருந்து, வந்ததும் வராததுமாக உங்கள் உறுத்தல் மூட்டைகளை அவன் முன் அவிழ்த்துக் கொட்டாதீர்கள்! இது, அப்பா அம்மாவிற்குச் சொல்வது போல இருக்கிறது. சரி இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்று பார்க்கலாம். அம்மா தனக்கு இருக்கும் வருத்தங்களை, இன்பங்களை, அப்பாவிடம் தானே பகிர்ந்து கொள்ள முடியும்? உண்மை தான் அப்பாவிடம் தான் சொல்ல முடியும். ஆனால், இங்கே வாதம், அப்பா வீட்டிற்கு வந்தவுடன் சொல்லக் கூடாது என்பது தான்.  எந்த அம்மாவும், அப்பா வந்தவுடன் ஏதாவது அழுது பொலம்பி அவரை எரிச்சல் படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, வேண்டும் என்று செய்வதில்லை. என் வீட்டில் கூட இந்த பிரச்சனை ...

அப்பாவுக்குத் தெரியாதா? # 1

daddy's girl “ அப்பாவுக்கு எல்லாமே தெரியும் , அப்பா தான் உலகத்திலேயே பெரிய ஆள். அப்பாவுக்கு நாம் மட்டும் தான் செல்லமாக இருக்க வேண்டும். வேறு யாரும் ஊடே வரக்கூடாது …” இப்படி எல்லாம் தான் நினைத்துக் கொண்டு இருந்தேன் சிறுவயதில். பிறகு என்ன ஆனதோ , ஏது ஆனதோ தெரியவில்லை. கொஞ்சம் பெரியவள் ஆனதும் , ஒரு பனிரெண்டு , பதினான்கு வயது இருக்கும் போதெல்லாம் அப்பா மீது ஏனோ கோவம் கொஞ்சம். பள்ளியில் ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததெல்லாம் சரி என்று நம்ப முடிந்த எனக்கு , அப்பாவின் கருத்தை எல்லாம் ஒப்புக்கொள்ள முடியவில்லை. “ அப்பாவுக்கு கொஞ்சம் தெரியல , நமக்கு கூட தெரியுது அதெல்லாம்... ” இப்படி யோசிக்கத் தொடங்கி இருந்தேன். ஆனால் என்ன தான் நினைத்திருந்தாலும் , நடந்திருந்தாலும் , இப்போது நினைத்துப் பார்க்கையில் "அப்பாவுக்கு எல்லாம் சரியா தெரிஞ்சிருக்கே" , என்றே தோன்றுகிறது. அது எப்படி? அப்பாவுக்கு எல்லாம் எப்படித் தெரிகிறது? சொல்கிறேன் கேளுங்கள்! சிறுவயதில் இருந்தே , எல்லா விஷயத்திலும் நான் அப்பாவின் பெண் தான் , அதாவது என்ன ஆனாலும் சரி , அப்பா என்ன சொல்கிறாரோ அது தான்...

ஒன்று மட்டும் சொல்கிறேன்!

அருகே வரவும் ஆசை இல்லை, விலகி நிற்கவும் தோன்றவில்லை! ஆனால், ஒன்று மட்டும் சொல்கிறேன், காலை வானில் வெளிச்சம் இல்லை! நான் உன்னை நேசிக்கிறேனடி! விட்டுக் கொடுக்க வருத்தமில்லை, வாரி அணைக்க வாய்ப்பு இல்லை, ஆனால், ஒன்று மட்டும் சொல்கிறேன், நான் உன்னை நேசிக்கிறேனடி! மாலை பொழுதில் ஈரம் இல்லை, காலை வானில் வெளிச்சம் இல்லை, ஆனால், ஒன்று மட்டும் சொல்கிறேன், நான் உன்னை நேசிக்கிறேனடி! உந்தன் வாழ்க்கையில் நானும் முல்லை, எனக்கு நீ மட்டுமே முதல் பிள்ளை, நான் அறிவேனடி, நீயும் என்னை நேசிக்கிறாய் என்று!

நான் கோழை தான்!

புலி என்னை யாரும் எதிர்பார்க்க வேண்டாம்! அதோ, அங்கே போராடுகிறீர்களே, நீங்கள் யாரும் என்னை அழைக்க வேண்டாம்! "எழுவோம், போராடுவோம்...", என்றெல்லாம், என்னை உங்களோடு சேர்க்க முயல வேண்டாம்! கல்யாணம் செய்து வைப்பேனென்று, ஒரு தங்கையும், "பள்ளிக் கட்டணம் கட்டுவான் அண்ணன்" இப்படி நினைத்தபடி ஒரு தம்பியும், மருந்து வாங்க காசு வேண்டும், இருந்தும் கேட்டால், "எங்கே பையன் சிரமப்படுவானோ" - வருந்தும் தாய் தந்தையும் உண்டு! வீதியில் இறங்க விருப்பமுண்டு, உங்களோடு இணைந்து கொள்ள வேகமுண்டு, ஆனால் மன்னியுங்கள் என்னை, சுயநலக்காரன் நான்! இரண்டு நாள் காய்ச்சல் இப்படிச் சொல்லி விடுப்புப் போட, இயலாது என் அலுவலகத்தில், மீறிப் போட்டால், வேலை இருக்காது இன்றில் இருந்து! வீரமாய் வந்து, புலிகளுக்கு கை கொடுக்க,  இதோ என் உடம்பில் வீரமுண்டு, ஆனால், மன்னியுங்கள் என்னை, கோழை தான் நான்! என் தலையில் அடிக்கும் வரையில், என் தங்கையை யாரும் தீண்டும் வரை, என் தாய் தந்தை பாதிக்கப்படும்  வரை, என் தம்பி தாக்கப்படும் வரை, மன்னியுங்கள் என்னை, கோழை தான் நான்! என்னை ...