முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்னோடு வேண்டும்!

மலையில் பயணமும், மழையில் குளியலும், என்று தொடங்கிய  மழலை நாட்கள்; என் ஆறு மாதத்தில், வசந்தமாய் இருந்து, அழகாய் உன் தோளில், தூங்கிக் கழித்த நாட்கள்; பொம்மை வாங்கிய நாட்கள், பேனா பிடித்து - எழுதப் பழகிய நாட்கள்; எட்டு வைத்த நாட்கள், என்னை நீ  குட்டு வைத்த நாட்கள்; முறுக்கு நொறுக்கியபடியே, நாம் இடியாய் சிரித்த, இன்ப நாட்கள்; கடற்கரை மண்ணில், கடலலையாய், அப்பா - நாம், கட்டி உருண்ட நாட்கள்; என்றோ பெய்த  ஏப்ரல் மாத மழையில், நாம் நனைந்த, ஏகாந்த நாட்கள்; பல் வந்த புதிதில், நான் கடிக்க, வலித்தது போல, நீ நடிக்க, நான் சிரிக்க, அந்த அற்புத நாட்கள்; பள்ளியில் சேர்க்க, பாவமாய் நீ, பனியில் நனைந்த, பாசம் நிறைந்த நாட்கள்; முதல் நாள் அம்மா வேலைக்குச் சென்றதும், பாவம் - தனியாய் என்னை நீ, பார்த்துக் கொண்ட நாட்கள்! இப்படி என் நினைவில், நிறைந்து கிடக்கும், எத்தனை எத்தனையோ, உயிர் நிறைக்கும் நாட்கள்; எப்போதும் வேண்டும், இதே இனிமையோடு, எந்நாளும் வேண்டும்! என் அப்பா - நீ, என்னோடு வேண்டும், இறு

நான் சென்னம்மா!(அப்பாவுக்குத் தெரியாதா #3)

”ஏம்பி, ஏம்பி, கொண்ட போட்டுவிடு...”, இப்படித் தான் அடம்பிடித்துக் கொண்டு இருப்பேன் சிறு வயதில். என் அம்மாவை நான் ஏம்பி, அதாவது, "எலும்பி" என்று தான் அழைப்பேன், காரணம், அவர் மிகவும் ஒல்லியாக இருந்த்தார் (ஆனா, இப்போ இல்ல :) ) கொஞ்சம் கூட மரியாதையாகவே அழைக்கமாட்டேன் என் அம்மாவை அப்போதெல்லாம், இப்பொழுது தான் “அம்மா வாங்க, போங்க..” என்று. வா போ, நீ தான், சிறு வயதில். இப்போதும் சில சமயம்..., இல்லை, பல சமயம் அம்மாவை “குண்டு பேபி”, என்று அழைப்பதுண்டு.  ஆனால், அப்பாவை மட்டும் சிறு வயதில் இருந்தே “வாங்க, போங்க” என்று தான் அழைத்ததாய் ஞாபகம், பிறகு, “அப்பாக்குட்டி” என்று சொல்வேன் என் அப்பாவை ஆசையாய்! cute அப்போது, எனக்கு ஆண் பிள்ளைகளைப் போல, “பாய் கட்” செய்துவிட்டு இருந்தார்கள் என் வீட்டில்! ஐந்து, ஆறு வயது இருக்கும்! ஆனாலும், குளித்து முடித்தவுடம் எனக்கு ஈரத் தலையில் கொண்டை போட வேண்டும். என் அம்மாவிடம் அழுவேன், என் அம்மாவும் துண்டை வைத்து தலையில் கொண்டை போட்டுவிடுவார். அந்தக் கொண்டை போட்டவுடன் எனக்கு வருமே ஒரு ஆனந்தம்! ஓடுவேன், என் அவ்வாவிடம் (பாட்டியை நான் அவ்வா என்று தான் அ

என்னோடே போகட்டும்!

சில நேரம் சொல்ல நினைத்து, sad பல நேரம் மூடி மறைத்த, உண்மைகள் என்னோடே புதைந்து போகட்டும்! வெளியே சொல்லி, வேதனை அடைவதிலும், உள்ளே வைத்து, வாடிவிடுகிறேன், என்னுடைய வேதனை, இப்படியே போகட்டும்! பெருமையாகச் சொல்ல, பெரும் சாதனைகள் அல்ல, பொறுமி அழக்கூடிய, பெரும் வேதனைகள், என் பாவங்கள் எல்லாம், இப்படியே போகட்டும்! இதோ அவள் சொல்கிறாள், இன்று ஒருத்தி சொல்கிறாள், அவள் கதைகள் என்று, எதையோ எதை எதையோ! அந்தக் கதைகள் அத்தனையும், அவள் பார்வையில் இன்பம்! ஆனால், எனக்கோ? ஏடாகூடம்! வேண்டாம் வேண்டாம்! யாரிடமும் சொல்ல வேண்டாம்! என் ரகசியங்கள், எனக்கு மட்டும் தெரிந்த, என் ரகசியங்கள், சில நேரம் சொல்ல நினைத்து, பல நேரம் மூடி மறைத்த, உண்மைகள் என்னோடே புதைந்து போகட்டும்! எனக்குள்ளே தினமும், நானே சொல்லிக் கொள்ளும், இந்த ரணம் நிறைந்த ரகசியங்கள்! என்னோடே போகட்டும்! நம்பிச் சொல்ல, யாருமே இல்லை, எனக்குள்ளே தினமும், நானே சொல்லிக் கொள்ளும், என் மெல்லிய சோகங்கள், சிறு பெரு ஏமாற்றங்கள், என்னோடே புதைந்து போகட்டும்! யா

கடிதம்!

அன்புள்ளவனே! இது உன் அருமைத் தோழி, அழகுத் (கொஞ்சம் ஓவரா இருக்கோ?) தோழி, கண்மணி எழுதும் கடிதம். ” என்னடா இது தெனமும் தான் பேசறமே எதுக்கு இந்த லெட்டெர் ” , இப்படித் தான் நீ யோசிக்கக்கூடும்! ஆனால், எல்லாவற்றிற்கும் ஒரு வரைமுறையும் அழகும் உள்ளதே! அதற்குத் தான் இந்தக் கடிதம். அதுவும் எழுத்து வழக்கில் ஒரு அழகுத் தமிழ்க் கடிதம்! கடிதம் எழுதுவதே பழைய முறையாக மாறி இருக்கலாம்! அதுவும் தமிழில் கடிதம், இன்று மிகவும் அரிது (அரிதுனா அர்த்தம் தெரியுமா உனக்கு? அப்டினா “ rare” னு அர்த்தம்) ” உனக்குத் தமிழ் அதிகம் வாசிக்க வராது ”, என்று எனக்குத் தெரியும், உன் உயிர்த் தோழி அல்லவா நான்? எனக்குத் தெரியாமல் என்ன இருக்கிறது உன்னிடம்? ஒன்றும் இல்லை என்று தான் நேற்று வரை நினைத்திருந்த்தேன், ஆனால் இன்று ” ஒன்று உள்ளது ” , என்று தோன்றுகிறது! என்ன? என்னவென்று சொல்கிறேன், கேள்! (பொறுமையா இரு, எப்பவும் போல, லொட லொடனு எதாவது சொல்லிட்டு தான் மேட்டருக்கு வருவேன்) இந்தக் கடிதம் நம்மைப் பற்றியது! ஆம். இது உனக்கும் எனக்கும் மட்டும் சொந்தமானது! அதுவும் எனக்குப் பிடித்த தமிழில், எனக்குப் பிடித்த உ