இது ஒரு தொடர் பதிவு! முந்தைய பதிவை இங்கே படிக்கலாம் - நானும் நார்த் இந்தியனும்! #1 #2 இரவு சீக்கிரம் தூங்கிப் பழகிய நான், அந்தப் பெண்ணோடு சேர்ந்து நேரம் கழித்து உறங்கப் பழகிக் கொண்டேன். இரவின் அழகை ரசிக்கக் கற்றுக் கொடுத்தாள் எனக்கு அவள் தான். "எத்தனை குளிர்!", என்று இழுத்துப் போர்த்தி உறங்கிவிடுவேன் நான் இரவு பத்து பதினொறு மணிக்கெல்லாம். ஆனால், சில நாட்களிலேயே இரவு பத்து பதினொறு மணி வரை வேலை இருந்தது ஆய்வுக் கூடத்தில், நேரம் கழித்து தான் அறைக்கே வருவேன். சிறிது நேரம் இருவரும் பேசிக் கொண்டு இருப்போம். அப்படிப் பேசிக் கொண்டு இருக்கையில் ஒரு நாள், காதல் பற்றி பேச்சு வந்தது. அவள் சொன்னாள், "இங்கு திருவனந்தபுரத்தில் எல்லாம், நிறைய ஜோடிகளைப் பார்க்கவே முடியவில்லையே, தென் இந்தியாவில் எல்லாம் காதலிக்க மாட்டார்களோ நிறைய பேர்?", என்று. நான் சொன்னேன், "அப்படி எல்லாம் இல்லை, இங்கு தான் அதிகம் அப்படிப் பார்க்க முடியவில்லை, சென்னையில் எல்லாம் நான் பார்த்து இருக்கிறேன் நிறைய" , என்று. அவள் சொன்னாள், "ஆனாலும் எங்கள் ஊரை விட இங்கு குறைவு தான், அங்கு எல்
வானவில்லின் வண்ணம் கொண்டு, நான் வரைந்த வெள்ளைக் கடிதங்கள்!