கனவுகள் கருப்பு வெள்ளை,
யார் சொன்னது?
என் கனவுகளுக்கு,
காவியும் தெரியும்,
பச்சையும் புரியும்!
நீ வராமலே இருந்திருந்தால்,
இத்தனை இன்பமும் - தொடர்ந்து,
இத்தனை துன்பமும்,
இல்லாது போய் இருக்கும்!
என் கனவில்,
இனிமை சேர்ந்திருக்கும்!
அழுது கொண்டு இருந்தேன்,
அன்பே நீ வந்ததும் தான்,
என் கருப்பு வெள்ளைக் கனவுகள்,
கலராய் மாறின - ஆனால்,
காரணம் இல்லாமல் - இன்று
சண்டைகள் போடுகையில்,
சாயம் வெளுக்கிறதே,
என் கனவின்,
வண்ணம் கரைகிறதே!
கண்களை மூடிக் கொண்டு,
காதலில் இருக்க,
நீயும் நானும் காதலாய் சிரிக்க,
கனவு காண்கிறேன்,
என்ன செய்ய,
கண் திறக்கையில்,
கனவு கலைந்து,
கண்ணீரே மிச்சம்!
உன் கைகள் பிடித்து,
நீண்ட தூரம் நடக்க,
ஒத்திகை பார்த்து,
ஒத்திகை பார்த்து,
ஓய்ந்து தான் போகிறேன்
தினமும் இரவெல்லாம்,
என்ன செய்ய,
என் நடை பயணக் கனவு,
பலிக்கவே இல்லையடி!
தினமும் இரவில்,
உன் சிரிக்கும் முகம்,
என் கண்களைப் பார்த்து,
கைகளைக் கோர்த்து,
நீ பேசிக் கொண்டே இருக்கும்,
ஆயிரம் வார்த்தைகள்,
விடிந்ததும், அர்த்தம் இழந்து,
ஊமையாகிப் போகின்றன,
என் கனவை,
ஊமையாக்கிப் போகின்றன!
மிக்க நன்றி :)
பதிலளிநீக்கு