முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா?

என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள்.

இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது!

சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே காசு கேட்பார்கள்.

முதல் பிரிவைச் சேர்ந்தவர்களைப் பெரும்பாலும் எல்லோருக்கும் பிடித்துவிடும் எடுத்தவுடன், ஆனால், அந்தப் பிடிப்பைத் தக்க வைத்துக் கொள்ளப் "பெரும்பாலும்" இவர்கள் தவறிவிடுவார்கள், நன்றாகப் பேசுகிறேன் பேர்வழி என்று, அதிகமாக இடம் எடுத்துக் கொண்டு, தன்  மீது இருக்கும் அபிப்ராயத்தை கெடுத்துக் கொள்வார்கள்.




யாரிடம் பேசுவதாக இருந்தாலும், நன்றாகப் பேசலாம், ஆனால், கொஞ்சம் நடுவில் இடைவெளி இருக்க வேண்டும். அதுவும் குறிப்பாகப் பெண்களிடம் பேசுவதென்றால்...? நிறையவே கவனமாகப் பேசுவது நல்லது! இதோ, சில டிப்ஸ், ஒரு ஆண் பெண்ணிடம் எப்படிப் பேசுவது? என்பதற்கு சில டிப்ஸ். இதைக் கடைபிடித்தால், உங்களுக்கும் (ஆண்களுக்கும்) சேதாரம் இல்லை (சேதாரமா? ஆமா... நம்ம ஊர்ல எல்லாம் ஒரு பொண்ணு, "அப்பா... இந்தப் பையன்..."னு சொல்லிட்டா.. அடி தூள், அப்பறம் பையன் பாவம் இல்ல?), அந்தப் பெண்ணுக்கும் "அய்ய..", என்பது போன்ற உணர்வெல்லாம் வராது!

  1. பெரும்பாலும், பெண்களுக்கு நிறையப் பேசப் பிடிக்கும், யாரிடம் என்றாலும், நன்றாகப் பேசுவார்கள், ஆனால், இது தான் சிக்கலே! "டேய், அவ என்கிட்டே பேசுறாடா..", என்று ஊரெல்லாம் சென்று டமாரம் அடித்து, கடைசியில் அந்தப் பெண் சாதாரணமாகப் பேசியதை, காதல் என்கிற அளவுக்கு ஊரில் கிளப்பிவிட்டுவிடுவது! அதனால், முதலில், ஒரு பெண் பேசினாலே அதைக் காதல் என்றெல்லாம் நினைக்கக் கூடாது! அதைப் போய் ஏதோ ஒரு பெரிய சாதனை போல, ஊரெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது! அப்படியே நீங்கள் அந்தப் பெண்ணைக் காதலித்தாலும் கூட, அந்தப் பெண் பேசுவதை, இப்படிக் கதை போல, காதலாக்கிப் பேச வேண்டாம்! அது எப்படியேனும் அந்தப் பெண்ணிற்குத் தெரியவந்துவிடும், கடைசியில் உங்கள் மீது நல்ல அபிப்ராயம் இருந்தாலும், தூள் தூள் ஆகிவிடும்! 
  2. பிறகு சிலர் இருப்பார்கள், முதல் முறை பேசும்போதே, நேரே வந்து, "ஹலோ பேபி.. ஹாய் பாபி.." என்பது போலப் பேச ஆரம்பித்துவிடுவார்கள்! இப்படி எல்லாம் பேசினால், வேலைக்கே ஆகாது! அதுவும் குறிப்பாக நம்ம ஊர்ப் பெண்களிடம்!
  3. உங்களுடன் வேலை பார்க்கும் பெண்ணா? படிக்கும் பெண்ணா? பேச்சு, படிப்பு தொடர்பாகவோ, அல்லது, வேலை தொடர்பாகவே இருக்கட்டும் பெரும்பாலும், நட்பாகப் பேசலாம், ஆனால், அதுவும் முன்பே நான் சொன்னது போல, ஒரு இடைவெளி இருப்பது நல்லது. "என்னங்க? நாங்க எல்லாம் நட்புனா எவ்வளவு நல்லா பேசுவோம், கலாய்ப்போம்.." என்று கேட்கிறீர்களா? சரி தான், நண்பர்கள் என்றால், எப்படி வேண்டுமானாலும் கிண்டல் செய்து, பேசலாம், ஆனால், பெண்களிடம் நட்பாக இருப்பது என்பது சற்று வித்யாசமானது! மேலும் அது ஒவ்வொரு பெண்ணையும் பொருத்தது, சில பெண்களுக்கு கிண்டல் செய்து பேசினாலும் பெரிதாகக் கோபம் எல்லாம் வராது, சிலருக்கு சுத்தமாகப் பிடிக்காது.. அதனால், முதலில் பேச ஆரம்பிக்கும் போது எப்போதுமே, ஒரு இடைவெளி விட்டுப் பேசுவதே சிறப்பு. நாட்கள் செல்லச் செல்ல நல்ல நண்பர்களாகிவிட்டால், அதன் பிறகு கிண்டல் செய்வதை அந்தப் பெண் பெரிதாக எடுக்கவில்லை என்றால், சரி!
  4. முடிந்த அளவு, "வாங்க, போங்க", என்று பேசுவதே சிறப்பு. அப்படி அந்தப் பெண் கொஞ்சம் நன்றாகப் பேசும் பெண் என்றால், இப்படிப் பேசுவது அவளுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளே சொல்லிவிடுவாள், "ஏன் இப்படி வாங்க போங்கனு சொல்றிங்க.." என்று. உங்களைவிட வயது குறைந்த பெண் என்றாலும், அதிகம் இருக்கும் பெண் என்றாலும், வாங்க போங்க என்றே பேசுங்கள். ஆனால், பெரும்பாலும் பள்ளியில் கல்லூரியில், உடன் படிக்கும் பெண்ணிடம் "வாங்க போங்க..", என்று பேசினால், சற்று வித்தியாசமாகத் தான் இருக்கும். ஆனாலும், அப்படிப் பேசுவது நல்லது! உங்கள் மீது அந்தப் பெண்ணுக்கும் நல்ல மரியாதை ஏற்பட வாய்ப்பு உள்ளது! உடன் படிக்கும் பெண்ணிடம், "வாங்க போங்க", என்று பேசவில்லை என்றாலும், யாரென்றே தெரியாத ஒரு புதிய பெண்ணிடம் பேசும்போது, "வாங்க போங்க," என்று "ங்க" போடுவதே நல்லது!
  5. பிறகு பொதுவாகவே யாரைப் பார்த்துப் பேசுவது என்றாலும், நேரே கண்களைப் பார்த்துப் பேச வேண்டும் என்பார்களே, அதை ஒரு போதும் மறக்கவே வேண்டாம்! நேரே பார்ப்பதோடு, ஒரு சிறிய புன்னகையோடு பேசுங்கள், அதற்காக, "ராஜா ராணி ஆர்யா" போல, "இஈஈஈ" என்று சிரிக்க வேண்டாம்! 
  6.  சிலர் இருப்பார்கள், ஒரு பெண்ணைப் பிடித்திருக்கிறது என்றால், பின்னாடியே செல்வார்கள், எரிச்சல் வரும் அளவுக்குத் தொந்தரவு தருவார்கள்! பேசு பேசு என்று பின்னாடியே வருவார்கள்! இன்னும் சிலர், "are you single?" , "do you have a boy friend?", இப்படி எடுத்தவுடன் கேள்விகளாக அடுக்குவார்கள்! இதிலேயே தெரிந்துவிடும், "single" என்று சொன்னால் இவர்கள் முயற்சி செய்யலாம் என்று நினைக்கிறார்கள் என்று! இப்படி எல்லாம் தயவு செய்து கேட்டு ஒரு பெண்ணைக் கஷ்டப்படுத்தாதீர்கள். இப்படிக் கேட்டீர்கள் என்றால், பெரும்பாலும் உங்கள் மீது நல்ல அபிப்ராயமே வராது!
  7. சிலர் இருப்பார்கள், உடன் வேலை பார்க்கும் பெண்ணோ, படிக்கும் பெண்ணோ, மொபைல் நம்பர் கொடுத்திருந்தால், எந்த நேரத்தில் அழைப்பது என்று ஒரு வரைமுறையே இல்லாமல், இவர்களுக்குத் தோன்றினால், இரவு பத்து பதினொரு மணிக்கெல்லாம் அழைப்பது! சரி தலை போகிற அவசரம் முக்கியமான விஷயம் என்றால், பரவாயில்லை எனலாம், தேவையே இல்லாமல், ஏதாவது ஒரு சின்னக் காரணத்திற்காக அழைப்பார்கள். இதெல்லாம் தவிர்ப்பது உத்தமம்!
  8. பிறகு சிலர் இருப்பார்கள், திருமணம் எல்லாம் முடிந்திருக்கும், "மனைவியிடம் சண்டை, வீட்டில் பிரச்சனை எனக்கு வாழ்க்கையே வெறுப்பாக இருக்கிறது", என்று மனைவியிடம் இருக்கும் குறை, அவரோடு போட்ட  சண்டை என்று எல்லாவற்றையும் பெண் தோழியிடம் சொல்லிப் புலம்புவது! இது நன்றாகவா இருக்கிறது?? இப்படி உடன் வேலை செய்பவர்களிடம் மனைவியைப் பற்றி எல்லாம் புகார் போடுவது நல்ல ஆணுக்கு அழகில்லை தானே? 
  9. "வாடி, போடி..", மறந்தும் வேண்டாம்! மரியாதை முக்கியம். ஒத்த வயது, அல்லது உங்களைவிட சிறிய வயது என்றாலும், "நீ வா", போதும்!
  10. காரணமே இல்லாமல் பேச வேண்டாம். ஏதாவது காரணம் இருந்தால் பேசுங்கள். தேவையே இல்லாமல் சும்மாப் பேச வேண்டும் என்றால், மிகவும் நல்ல தோழியாக இருந்தால் மட்டும் பேசுங்கள், முதன் முதலில் பேசும்போது, அதிகம் ஒருவரைப் பற்றித் தெரியாத போதும், காரணமே இல்லாது பேச வேண்டாம்!
பெரும்பாலும் மேலே சொன்னவை எல்லாம் எல்லாப் பெண்களுக்குமே பொருந்தும். ஆனால், சில நேரம், நீங்கள் பேசும் பெண்ணிற்கு உங்களை ஏற்கனவே அதிகம் பிடித்து இருந்தாலோ, அல்லது  உங்கள் மீது அதிக மரியாதை இருந்தாலோ, எடுத்த எடுப்பில் நீங்கள் எப்படிப் பேசினாலும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், போகப் போக நீங்கள் அதிகம் தொல்லையாகவோ, அதிகம் "advantage" எடுத்துக் கொண்டாலோ சிரமம் தான்.

 கொஞ்சம் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு பெண்ணிடம், போதிய அளவு இடைவெளி விட்டுப் பேசுங்கள்!

 "இடைவெளி என்றால், ஒரு அஞ்சு அடி, ஆறு அடி விட்டுப் பேசலாமா???", இப்படி ஒரு சந்தேகம் வந்திருக்க வேண்டுமே சிலருக்கு???? அப்படி வந்து இருந்தால், "சத்தியமா சொல்றேன், என்னால உங்களுக்கு விளக்கம் தர முடியாது!" :) :) 

சரி பேசுங்க பேசுங்க!

கருத்துகள்

  1. இதையெல்லாம் படிச்சுட்டு தப்பா நடக்கிறவன், தப்பா நடக்க நினைக்கிறவன் திருந்துவானானா, நிச்சயம் மாட்டான்.. கொஞ்சம் கேர்ஃபுல்லா தப்பு பண்ணுவான் :P
    ஒரு பொண்ணா, ஆண்கள் எப்படி பழகினால் உங்களுக்கு சங்கடம் இல்லாமல் comfortable ஆக இருக்கும் என சொல்லியிருக்கிறீர்கள்.. ஆனால் இன்றைய ஆண்கள் ரொம்ப ரொம்ப smart.. எப்படி எளிதாக காய் நகர்த்த வேண்டும் என நன்றாக தெரிந்தவர்கள்.. மேலே Christopher சொன்னது போல், அமுக்குனியாக இருப்பவன் எல்லாம் யோக்கியனும் இல்ல, லொட லொடனு வாயடிக்கிறவன் எல்லாம் கெட்டவனும் இல்ல...
    நான் முன்பொரு முறை சொன்னது இது - கௌதம் மேனன் படத்தில் வரும் வில்லன் மாதிரி இருப்பவனை கூட நம்பிவிடலாம், ஆனால், விக்ரமன் படத்தில் வரும் ஹீரோ மாதிரி இருப்பவனை நம்பவே கூடாது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) Christopher FB ல தானே சொன்னான்? :) நான் எப்படிப் பேசுனா சங்கடமா இருக்காதுனு தான் சொல்லி இருக்கேன், இப்படி எல்லாம் பேசுனா பொன்னுங்க நல்லவன்னு நம்பிடுவாங்கனு சொல்ல வரல, எரிச்சல் வராதுனு சொல்றேன், அவ்வளவு தான் இப்படி எல்லாம் செஞ்சா impress ஆவாங்கனு நான் சொல்ல வரல! :)

      நீக்கு
    2. நல்ல பதிவு...
      எதுக்கும் பதிவோட ஆரம்பத்திலேயே பெண்களுடன் எரிச்சன் ஏற்படுத்தாமல் பழகுவது தொடர்பான பதிவுனு போட்டுருங்க...
      ஏதோ எப்படி கரெக்ட் பன்றதுனு சொல்லி தராங்க போலனு நினைச்சுக்குவாங்க....
      எனக்கு கூட எரிச்சலடையற மாதிரி பேசறவங்க பத்தி ஒரு பதிவு போடனும்னு தோணுது...

      நீக்கு
    3. சரி அப்படி நெனச்சாவது படிச்சு கொஞ்சம் சரியா நடப்பாங்க இல்ல? இல்லனா படிக்காமலே போயிடுவாங்க!
      ம்ம், எழுதுங்க, படிக்க ஆர்வமா காத்திருக்கிறோம்! :)

      நீக்கு
    4. பெண்களின் மன நிலை புரிந்து பேச முழுமையாக தெரிந்து கொண்டோம் நன்றி இதே போல் பெண்களுக்கும் !!!

      நீக்கு
  2. நல்ல யோசனைகள்... மௌனம் சிறந்த மொழி...! இருந்தாலும் பேசுவதற்கு முன் :

    (1) உண்மையா ? (2) பேசலாமா ? (3) தேவையா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெளனம் ஆ?? இது புதுசா இருக்கே?? பேசாம இருக்கனும்னு சொல்ல வரிங்களோ?? ஆமா, கொஞ்சம் யோசிச்சுப் பேசுறதும் நல்லதே!

      நீக்கு
  3. நல்ல கட்டுரை. ஆண்கள் படிக்க வேண்டியது அவசியம். பின்பற்ற வேண்டியது அவசியம்

    பதிலளிநீக்கு
  4. நல்ல கருத்துக்கள் , நம்ம பசங்க கண்டிப்பா படிக்கணும்...

    பதிலளிநீக்கு
  5. //நம்ம ஊர்ல எல்லாம் ஒரு பொண்ணு, "அப்பா... இந்தப் பையன்..."னு சொல்லிட்டா.. அடி தூள், அப்பறம் பையன் பாவம் இல்ல?), அந்தப் பெண்ணுக்கும் "அய்ய..", என்பது போன்ற உணர்வெல்லாம் வராது!// :)
    நல்ல கட்டுரை ,பொன்னுங்க மனசு ரொம்ப ஆழம் என்று ஒரு கருத்து உண்டு ! ஆனால் ரொம்ப யோசிச்சுப் பார்த்தா அப்படி எல்லாம் இல்லை என்ற முடிவுக்கு என்னால் வந்துவிட முடிகிறது ! அதே நேரம் பெண் மனமும்,ஆண் மனமும் வேறு வேறு தளத்தில் இயங்குவன என்பதையும் மறுக்க முடியாது ! ஆணும் பெண்ணும் வேறு வேறு கிரகவாசிகள் என்ற சொற்றொடருடன் men are from mars ,women are from venus என்றொரு புத்தகம் உண்டு. :)
    வாய்ப்பு கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்
    Thanks for sharing ur ideas கண்மணி,

    பதிலளிநீக்கு
  6. //ஒரு பெண் பேசினாலே அதைக் காதல் என்றெல்லாம் நினைக்கக் கூடாது! //
    நிறைய திரைப்படங்களில் ஹீரோக்கள் முதல் பேச்சை காதல் என்று நினைக்கிறார்கள்,அது க்ளைமேக்ஸிற்குள் உண்மையாகியும் விடுகிறது, இதையெல்லாம் பார்த்துவிட்டு பின் நினைக்காமல் எப்படி இருப்பார்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் சரி தான். ஆனா அப்படிக் கெடையாதே!

      நீக்கு
  7. நீங்கள் சொன்ன கருத்துக்களை சிரமேற்கொண்டு படித்து விட்டேன். அதன்படியே நடந்து கொள்கிறேன் ! ஆனால் பெண்களின் சூழல் வாய்க்காத ஆண்களின் உலகத்தில் வாழும் என் போன்றவர்கள் முன்பின் தெரியாத ஒரு பெண்ணிடம் எப்படிப் பேசுவது ? இதற்கும் ஒரு பதிவு போட்டால் புண்ணியமாகப் போகும் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த சுழல்ல இருந்தாலும், இப்படிப் பேசினால் நல்லது. நன்றி!

      நீக்கு
  8. அப்ப இனிமே மௌனவிரதம்தான். கண் ஜாடை, கை ஜாடை. அது வேணுமுன்னா அது, இது வேணுமுன்னா இது. சரி வருமா பாருங்க!

    பதிலளிநீக்கு
  9. unmaiyil nalla pathivu... payanaaga ullathu.... nandri.... kanmani avarkale....

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா8/10/2014 4:49 AM

    idhukku dhan nan pesuradhe illa

    பதிலளிநீக்கு
  11. மௌநம் சரியா! தவரா??

    பதிலளிநீக்கு
  12. இதுக்குதான் நான் நானுன்டு என் வேலை உண்டு என்று இருக்கிறேன்..ஆனால் பேச விரும்பினால் தாங்கள் கூறிய படியே செயல்படுவேன்...தாங்கள் கூறியதனால் அல்ல............எனக்குத்தெரியும்......நன்றி....உங்கள் கருத்திற்கு....

    பதிலளிநீக்கு
  13. மிகவும் சிறப்பு

    பதிலளிநீக்கு
  14. வருங்கால மனைவிய தவிர மீதி அனைவரையும் சகோதரியா நினைத்தாலே போதுமானது..... எல்லாருக்கும் நலம் உண்டாகும்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?...

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்...