முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சின்ன சின்ன ஆசை! சிறகடிக்கும் ஆசை....!

எல்லோருக்கும் இருக்கும் ஆசை தான். அப்படிச் சொன்னால் சரியாக இருக்காது. எல்லோருக்கும் இருக்குமா இந்த ஆசை என்று தெரியவில்லை, ஆனால், நிச்சயமாக பெரும்பாலானோருக்கு இருக்கும் என்று நம்புகிறேன் (சரி, யாருக்கு இருக்குதோ இல்லையோ, எனக்கு இருக்குது, இருந்தது!). எவ்வளவு ஆசையோ, அவ்வளவு பயம்! ”என்னதான் ஆசை!” என்கிறீர்களா? இந்நேரம் தலைப்பை வைத்தே புரிந்து இருக்கும், இருந்தாலும் சொல்வது அடியேனின் கடமை! விமானத்தில் பறப்பது! ம்ம், எல்லோருக்குமே இருக்கும் ஆசை தானே! அடிக்கடி பறப்பவர்களுக்குப் பறந்தவர்களுக்கு இருக்காது, என்னைப் போல பறக்க வாய்ப்பே (சிலருக்குப் பணமும்) இருந்திராதவர்களுக்கு இருக்கும்! நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள், ”பணமா இல்ல, மதுரையில இருந்து சென்னைக்கு flightல போலாமே...?” என்று, ”வாஸ்தவம் தான், அப்பாகிட்ட கேட்டா கூட்டிட்டுப் போவாங்க தான், பணம் தருவாங்க தான்...” ஆனால், ட்ரெயின், பஸ் என்று 400 ரூபாய்க்குப் போகும் இடத்தில் பல ஆயிரம் கொடுத்துப் போக மனம் ஒருபோதும் வந்ததில்லை, ஒவ்வொரு பைசாவும் அப்பா சம்பாத்தியம் ஆயிற்றே! (மேலும், சாப்பாடு தவிர்த்து வேறு எதற்கும் அதிகம் செலவு செய்யப் பிடிக்...

ஓசில தோசை!

வணக்கம்! நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதுகிறேன்…. ”தமிழ்ல எழுதவே மறந்து போகுமோ!”, என்ற பயமும்; நேற்று இரவு தொடங்கி, இன்று காலை வரையில் நான் வாசித்த “அரியலூர் அடுக்கு தோசையும், இன்ன பிற…” என்கிற ரஞ்சனி அம்மாவின் மின்-புத்தகமும் தான், நான் இப்போது எதையோ என் கணினியில் கிறுக்க ஆரம்பித்திருக்கக் காரணம். Courtesy:   தோசை அம்மா தோசை! பல மாதங்களுக்கு முன்பே, சொல்லப் போனால், ”அரியலூர் அடுக்கு தோசையும், இன்ன பிற…” மின்–புத்தகம் வெளிவந்த அதே நாள், இரவு, டவுன்லோட் செய்துவிட்டேன். “இன்று வாசிப்போம், நாளை வாசிப்போம்”, என்று தள்ளிப்போட்டுத் தள்ளிப்போட்டு, ஒரு வழியாக, FINALLY! நேற்று தான் வாசிக்கத் தொடங்கினேன்! (புத்தகம் வாசிக்கக் கூட நேரமில்லாத அளவு “பிஸி” என்று நினைக்காதீர்கள், சில நாட்களாக, இல்லை, இல்லை, ஒரு வருடமாக, “Time Management” மறந்து, கொஞ்சம் சோம்பேரியாக, படம் பார்த்து, பாட்டுக் கேட்டு, ஆங்கில நாவல்கள் படித்து, சென்னை ஊரை சுற்றிப் பார்த்து, பொழுதைப் போக்கிக் கொண்டு இருந்துவிட்டேன். ”எழுத வேண்டும், எழுத வேண்டும்”, என்று நினைத்து நிறைய தலைப்புகளைக் குறித்து வைப்பேன் நாட்கு...

இப்படியாக ஒரு பயணம்!

காலையில் இருந்தே ஒரே படபடப்பு, எந்த வேலையிலும் கவனமே செல்லவில்லை. மேலதிகாரி கொடுத்த வேலைகள் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டே இருந்தேன், ஆயிரம் பிழைகளோடு! இப்படி அரையும் குறையுமாக முடிப்பதற்கு, அப்படியே போட்டுவிட்டு உட்காரலாம். ஆனால் என்ன செய்ய, சும்மா உட்கார்ந்தால் பார்ப்பவர்கள் ஏதாவது நினைப்பார்களே! என்னவோ, “லொட்டு லொட்டு” என்று கணினியின் பொத்தான்கள் எல்லாவற்றையும் தட்டிக் கொண்டே இருந்தேன். மனம் மட்டும் அதே படபடப்பு நிலையில் லயித்துக் கிடந்தது! சாயங்காலம் ஆறு மணிக்கு விடுதி அறையில் இருக்க வேண்டும். அப்போதான் கிளம்பி, ஒன்பது மணிக்கு ரயிலைப் பிடிக்க முடியும். ஆறு மணிக்கு அறையில் இருக்க வேண்டுமேயானால், ஐந்து மணிக்கு ஆஃபீசில் இருந்து கிளம்ப வேண்டும்! அது கொஞ்சம் கடினம்! கொஞ்சம் இல்லை, ரொம்பவே! இது ஒரு காரணம் படபடப்புக்கு. இந்தப் பெரிய ஊருக்கு நான் இரண்டு வருடம் பழசு. சென்னை! பிழைப்புத் தேடி, எல்லோரையும் போல நானும் வந்தேன். மாதம் பதினைந்தாயிரம் சம்பளம்!!! முதலில் ஐயாயிரத்தில் தான் ஆரம்பித்தேன், பிறகு படிப்படியாகக் கூடி, இப்போது இந்தப் பெரிய தொகை! இது எனக்க...

பொருக்காச்சி!

காலையில் ஆறு மணி இருக்கும், நல்ல வெளிச்சம். வழக்கத்தை விட வெரசாகவே விடிந்து இருந்தது. கோடை என்பதால் போல! காலையில் வாசல் தெளித்து, கோலம் இட்டுக் கொண்டு இருந்தாள் கமலம். குட்டி மஞ்சு அந்நேரமே எழுந்து காப்பி போடத் தொடங்கி இருந்தாள் அவளது கிச்சன் செட் உதவியோடு, வீட்டு வாசலில்! அழகாக அடுக்கி வைத்து இருந்தாள் அவளது சொப்புகளை; சின்னச் சின்னக் கிண்ணம், கரண்டி, கப் அன் சாசர், காஸ் அடுப்பு, சிலிண்டர், குட்டிக் கூடை, மிக்ஸி, ஆட்டு உரல், அம்மி, சின்னது பெரியது என எல்லா அளவிலும் பல பாத்திரங்கள், தோசைக் கல், கரண்டி, இப்படி சகலமும் அவளிடம் இருந்தது! ஒவ்வொரு தடவை பொருக்காச்சிக்குப் (பொருட்காட்சி) போகும் போதும், அவள் குறைந்தது இரண்டு கிச்சன் செட்டாவது வாங்கிவிடுவாள், அப்படி கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இப்போது அவளிடம் மூன்று கூட்டுக் குடும்பத்துக்கு சமைக்கும் அளவிற்கு பாத்திரம் இருந்தது. எல்லாவற்றிலும் நான்கு ஐந்து இருக்கும், காஸ் அடுப்பு மட்டும் மூன்று இருந்தது! குட்டி சைஸில் அவளிடம் டேபிள் ஃபேன் கூட இரண்டு இருந்தது! மஞ்சு ”அம்மா அம்மா.. காப்பி இந்தாங்க... அப்பா.. உங்களுக்கு..., அவ்வா (பாட்டி) இ...

ரசிகப் பெருமக்களே!

எல்லோரும் புத்தாண்டுக்கு, பொங்கலுக்கு என்று வரிசை வரிசையாக பதிவு எழுதிக் கொண்டு இருக்க, ஒரு பக்கம் சிலர் புதிதாக வந்த வீரம், வில்லா.. (வில்லாவா? ஜில்லாவோ?), விழா இப்படி எதேதோ படங்களுக்கு எல்லாம் சன் டி.விக்குப் போட்டியாக திரை விமர்சனம் போட்டுக் கொண்டு இருக்க, இன்னொரு பக்கம், நிறைய, பெரிய பெரிய இலக்கியவாதிகள் (??!!) எல்லாம், தங்கள் புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டிருக்க, அந்தப் புத்தகங்களுக்கு சிலர், ” இதென்னையா இவன் சின்னப் பய, இவன் எழுதுறதெல்லாம் புஸ்தகமா போட்டுக்கிட்டு! என்ன கருமமோ ” , (ஒருவேள பொறாமையா இருக்குமோ??) என்பது போல புத்தக விமர்சனம் எழுதிக் கொண்டிருக்க, (அப்போ, நான் எல்லாம், புத்தகம் போட்டு, பெரிய எழுத்தாளரா வரவே முடியாதா?? அய்யஹோ!), இத்தனைக்கும் மத்தியில், நான் மட்டும் ஒன்றுமே எழுதவில்லையே? நீண்ட நாட்களாக? ஆயிரக் கணக்கில் எனக்காக உலகமெங்கும் இருக்கும் ரசிகர்கள் எல்லாம், ” என்ன எழுதல? என்ன கண்மணி மேடம், எழுதல? ” , என்று கேட்கத் தொடங்கிவிடவே, (சரி, பொய் தான் என்ன செய்ய ஒரு விளம்பரம்) அவர்களை திருப்தி படுத்தும் பொருட்டு இந்தப் பதிவை அடியேன்(அடியாள்-னு வருமா பெண்பால்?) எழுதுகி...

முகப்புத்தகப் பதிவுகளை வலைப்பூவில் பொதிப்பது (Embed) எப்படி?

"அவரு ரொம்ப நல்லா எழுதுவாரு, ஆனா, இப்போ எல்லாம் அவரு ப்ளாக்-ல எழுதுறதே இல்ல.. எல்லாம் முகப்புத்தகத்துல தான். இதனால நெறைய பேருக்கு அவர் எழுதுறது சில நேரம் போய்ச் சேரமாட்டிக்குது..", இப்படி நன்றாக எழுதும் ஒருவரைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தோம், நானும் நண்பர் ஒருவரும். உண்மை, கட்டுரைகள் கதைகள், இப்படி எழுதுவது குறைந்து, சிறு சிறு வாசகங்களாக, நக்கல் பேசும் வரிகளாக மாறிவிட்டன இப்போது எழுத்துக்கள் எல்லாம். "சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது", என்பது சிறப்புதான் என்றாலும், விரிவாக ஒன்றை எழுதுவதும் திறமை தானே? சரி, நாம் கதைக்கு வருவோம், ஒருவர் நன்றாக முகநூலில் எழுதுகிறார், அது உங்களுக்குப் பிடித்து இருக்கிறது, உங்கள் வலைப்பூவில் அதைப் போட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். இப்படி நான் நினைத்தால், "copy - paste" செய்து, ஒரு இணைப்புக் கொடுத்து இருப்பேன். ஆனால், இதற்கு மாற்றாக ஒரு வழி உள்ளது. நேரடியாக அந்த நபர் முகநூலில் எழுதியதை நீங்கள் அப்படியே உங்கள் வலைப்பூவில் போடலாம். எப்படி? அந்த நபர் எழுதி இருக்கும் பதிவை உங்கள் வலைப்பூவில் சேர்க்க, கீழ் வருமாறு செய்யல...

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?...