முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை ---> பாகம்-2 ---> சிக்ன(க)ல்!!!


( முதல் பாகம் படிக்கவில்லையா?இந்த " link " உபயோகப்படுத்துங்க.,
தொடர் கதை - பாகம் 1 - சிக்ன(க)ல் !!! படித்துவிட்டு , இங்க வாங்க!! )


திரும்பிய சுவாதியை பார்த்து ஒரு நொடி மலைத்து நின்றான் கிருஷ்ணா!
ஆனால் சட்டென்று சுதாரித்துக் கொண்டு., பேசத் தொடங்கினான்!!!


" ஹாய்.. உங்க பேர் என்னனு தெரிஞ்சுக்கலாமா??!!" 


"இல்ல., யார் நீங்க??!!!", திரு திருவென பயந்து போய் முழித்தால் சுவாதி.


" கூல்., பயப்டாதிங்க., உங்கள அன்னிக்கு சிக்னல்ல பாத்தேன் ; அழகா இருந்திங்க., ரொம்ப புடிச்சு போச்சு., அதான்... இன்னிக்கு பாத்ததும் பேர தெரிஞ்சுக்கலாம்னு கேக்றேன்., வேற ஒன்னுமில்ல., பயப்டாதிங்க., 
சொல்லுங்க உங்க பேர் என்ன??!" 
" ம்ம்ம்... அது.. என் பேரு... சுவாதி!! " , அதே பயத்தோடு தயங்கி தான்  சொன்னாள்.


" சரி., thanks ., இதுக்கு ஏன் இப்டி பயபட்றிங்க? அவ்ளோ தான்., thanks bye! " , அலட்டிகொள்ளாமல் அசால்டாய் சென்றான் கிருஷ்ணா!


நண்பர்கள், " டேய் நம்பர் கேக்காம ஏண்டா வந்த??! "


" ஏ பாவம்டா அவ., போய் பேர கேட்டதுக்கே பயந்துட்டா ரொம்ப.. இதுல நம்பர் கேட்ருந்தா அழுதிருப்பாடா.. !!" .,


நாட்கள் சென்றன.,


சுவாதி வீட்டில், வலை தளத்தை வலம் வந்து கொண்டிருந்தாள் .,  facebook -ல் friend request பார்த்துக் கொண்டிருக்க., நம் கிருஷ்ணா அனுப்பிய request- ஐ
பார்த்தாள், "இது அன்னிக்கு நம்ம கிட்ட பேர் கேட்ட பையனாச்சே.."  accept கொடுத்தாள்.


அடுத்த நாள்...


 online வந்ததும்., கிருஷ்ணாவும் அந்நேரம் online-ல் இருக்க., "hai " என்று ஆரம்பித்த பேச்சு... அப்பா அம்மா என்று.. அறிமுகம் வரை ஓடியது.. அறிமுகம் முடிந்து., இருவருக்குள்ளும் சிறு புரிதல் மலர்ந்தது..


நாட்கள் ஓட ஓட " புடித்தது புடிக்காதது" என எல்லாம் பரிமாறியாயிற்று இருவரும்...


சுவாதி கிருஷ்ணாவிடம் இருக்கும் " சிறு சிறு" தீய பழக்கங்கள் எல்லாம் தவறு என்று திருத்தத் தொடங்கினாள். அம்மா சொல்லி class cut  அடிப்பதை நிறுத்தாத கிருஷ்ணா., சுவாதி சொன்னதும் படிக்கத் தொடங்கினான். " சுவாதி சொல்லே வேதம் ஆயிற்று." சுவாதியும் நல்ல விஷயம் நிறைய சொல்லிக் கொடுக்கத் தொடங்கினாள் நம் கிருஷ்ணாவிற்கு.


வேறு வேறு கல்லூரி என்பதால் ., இருவரும் நேரில் பார்க்காமல் வலை தளத்திலேயே பேசி வந்தார்கள். ஆனால் காதல் என்று இருவரும் சொல்லிக் கொள்ளவில்லை.


                                                                  ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥


சொல்லிக் கொண்டார்களா? வாசிக்க வாங்க நாளைக்கு!!!


கருத்து சொல்லிச் செல்ல வேண்டுகிறேன் .நன்றி!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

கோணம்மா சம்முக வடிவு!

சமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும். சென்ற முறை அமெரிக்கா சென்ற போதும் சரி (என்ன ஜப்பானுல கூப்டாக, அமெரிக்காவுல கூப்டாக... moment :P) இப்போது இங்கு வந்த போதும் சரி. என் அம்மா அப்பா சொன்ன அறிவுரைகள் சில: 1) நல்ல பிள்ளையா இருக்கணும். 2) போறது படிக்கறதுக்கு, படிச்சோமா வந்தோமானு இருக்குணும். 3) தெனமும் skype ல பேசிரணும். 4) ஜாக்கிரதையா இருக்கணும், அந்த ஊரு பிள்ளைங்கள மாதிரி குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது! இன்னும் பல அறிவுரைகள் இருந்தாலும், பெரும்பாலும் முக்கியமான அறிவுரைகள் இவை தான். என்னம்மா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்குப் போனாலே சொல்வார், “என்ன நீ, கட்டப்பை (அதயே, styleஆ சொன்னா, big shopper :P) எல்லாம் கொண்டுட்டு வர்ற, நல்லா சென்னைல இருந்து வந்தா, நல்ல பை கொண்டு வர வேண்டாமா? ஊர்ல இருந்த மாதிரியே தான் இருக்க, ஒரு மாற்றமும் இல்ல!” என்பது போன்ற வசனங்களை. Ginger, Guy, Kanmani :D Lab Friends “கட்டப்பையும் பை தான, அதுல என்ன இருக்கு? ஆமா...