பொத்தல்களும் கிழிசல்களும் ,
நிறைந்த பொந்து வீட்டின்.,
கூரை போல ,
பகலில் சூரியனோடு,
சுட்டெரிக்கிறது வறுமை!!!
வைரமும் பவளமும்,
மின்னும் பெரிய வீட்டின்.,
அழகு காவணப்பத்தி போல.,
இரவில் நிலவோடு,
குளிர்கிறது வளமை!!!
-------------------
பொருள் புரிய :
காவணப்பத்தி-- ஆடம்பரமான மாளிகையின் கூரை.
கருத்துகள்
கருத்துரையிடுக