முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓவம்மா #5 (தொடர்கதை)

ஓவம்மா! #1 | #2 | #3 | 4

அழுதுட்டே இருந்தவ அப்படியே தூங்கிப் போயிட்டேன், காலைல அஞ்சு மணி இருக்கும், அந்தக் கோயிலுக்குப் பூச செய்ற ஐயர் வந்து தான் என்ன எழுப்புனாரு. ஒரே குளிர், பனி, அது எழுந்தப்றம் தான் எனக்கு உணர்ந்துச்சு.

"நீ யாரு மா? இங்க இப்டி வந்து படுத்திருக்க?", அந்த ஐயர் கேக்க, என்ன சொல்றதுன்னு தெரியாம முழிச்சேன்!

சாலை!
அவரு, "போ போ, இங்க எல்லாம் தூங்கக் கூடாது வீட்டுக்குப் போ" னு சொல்லிட்டாரு.

எந்திச்சி நடந்தேன், எங்க போறதுன்னு யோசிச்சிட்டே நடந்தேன். ரொம்பக் குளிரா இருந்தது. இந்நேரம் எங்கக்கா வீட்டுக்கு வந்திருக்கும், ஆனா வீட்டுக்கு என்னால போக முடியாது.

பசிக்க ஆரம்பிச்சுடுச்சு, என்ன செய்யனு தெரியல, இந்நேரம் வேலைக்குப் போயிருந்தா சாப்டிருப்பேன், பசில நடக்க முடியல, நடந்துக்கிட்டே இருந்தேன் ஆனா நிக்காமா, எங்க எங்கயாச்சும் நின்னா, யாராவது, "யாரு மா நீ"னு கேள்வி கேப்பாங்கலே னு நெனப்பு, அந்த நெனப்பு தான் என்னத் தொரத்தி நடக்க வச்சது!

ஒரு கட்டத்துல நான் மதியம் நெருங்க நெருங்க, சக்தி எல்லாம் எழந்து, மயங்கி விழுந்திருந்தேன்.

முழிச்சுப் பாத்தப்போ, எங்க அத்த வீட்ல இருந்தேன். அவங்க என் அத்தைனு அவங்க சொல்லி தான் எனக்கே தெரியும், அதுக்கு முன்னாடி அவங்கள நான் பாத்ததே இல்ல.

ஆனா அவங்களுக்கு என்னத் தெரியும்னு சொன்னாங்க. சரி னு அவங்க வீட்லயே இருந்தேன். எங்க அக்கா வீட்ல நடந்ததெல்லாம் அவங்க கிட்ட சொன்னேன், மாமா தப்பா நடந்ததையும், தயங்கித் தயங்கிச் சொன்னேன்.

அத்த என்ன பத்ரமாப் பாத்துப்பேன்னு சொன்னாங்க. அங்க இருந்தும் கட்ட அடுக்க வேலைக்குப் போனேன்.

அத்த படிக்கச் சொன்னாங்க, ஆனா எனக்கு தான் படிக்கப் பிடிக்கலயே! அன்னைக்கு மட்டும் நான் படிச்சிருந்தா, இன்னிக்குக் கண்டிப்பா ரொம்ப நல்லா இருந்திருப்பேன். ஆனா என்ன செய்ய, படிக்கலையே!

அக்கா என்னத் தேடி எங்கயும் அலையால, அவ்வளவு பாசம், ஒரு சொம கொறஞ்சதுனு நெனச்சா போல. ஆனா, இப்போ அத்த வீட்ல, பெரிய பணம் கெடயாது, ஆனா, பாசம் இருந்தது நெறைய! நான் வேல பாத்தாலும், அந்தச்
செரமம் எனக்குத் தெரிஞ்சதே இல்ல.

எங்க வீட்டுப் பக்கத்துல ஒருத்தன் இருந்தான். அவன் பேரு, "கடி நாய்" , அது அவனுக்கு என் சோடுப் பொண்ணுங்க எல்லாரும் சேந்து வச்சப் பட்டப் பேரு.
அவனோட உண்மையான பேரு சேகர்! ஆனா, அவன ஒரு நாள் கூட நாங்க யாரும் சேகர் னு கூப்டதே இல்ல!

அவனுக்கு கோவம் ரொம்ப வரும், அதனால தான் எல்லாருமா சேந்து அப்படி ஒரு பேர வச்சோம்!

அவனையும் என்னையும் செத்து வச்சு, பிள்ளைங்க எல்லாம் கேலி செய்யும்க.
ஆனா, எனக்கென்னவோ, அவனப் பிடிக்கும்னும் இல்ல, பிடிக்காதுனும் இல்ல!

-----------------

ஓவம்மா கதை தொடரும்!
தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துவிட்டுச் செல்லுங்கள்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

கடிதம்!

அன்புள்ளவனே! இது உன் அருமைத் தோழி, அழகுத் (கொஞ்சம் ஓவரா இருக்கோ?) தோழி, கண்மணி எழுதும் கடிதம். ” என்னடா இது தெனமும் தான் பேசறமே எதுக்கு இந்த லெட்டெர் ” , இப்படித் தான் நீ யோசிக்கக்கூடும்! ஆனால், எல்லாவற்றிற்கும் ஒரு வரைமுறையும் அழகும் உள்ளதே! அதற்குத் தான் இந்தக் கடிதம். அதுவும் எழுத்து வழக்கில் ஒரு அழகுத் தமிழ்க் கடிதம்! கடிதம் எழுதுவதே பழைய முறையாக மாறி இருக்கலாம்! அதுவும் தமிழில் கடிதம், இன்று மிகவும் அரிது (அரிதுனா அர்த்தம் தெரியுமா உனக்கு? அப்டினா “ rare” னு அர்த்தம்) ” உனக்குத் தமிழ் அதிகம் வாசிக்க வராது ”, என்று எனக்குத் தெரியும், உன் உயிர்த் தோழி அல்லவா நான்? எனக்குத் தெரியாமல் என்ன இருக்கிறது உன்னிடம்? ஒன்றும் இல்லை என்று தான் நேற்று வரை நினைத்திருந்த்தேன், ஆனால் இன்று ” ஒன்று உள்ளது ” , என்று தோன்றுகிறது! என்ன? என்னவென்று சொல்கிறேன், கேள்! (பொறுமையா இரு, எப்பவும் போல, லொட லொடனு எதாவது சொல்லிட்டு தான் மேட்டருக்கு வருவேன்) இந்தக் கடிதம் நம்மைப் பற்றியது! ஆம். இது உனக்கும் எனக்கும் மட்டும் சொந்தமானது! அதுவும் எனக்குப் பிடித்த தமிழில், எனக்குப் பிடித்த உ...