முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

1 லட்சம் வெல்ல வேண்டுமா???

உங்களுக்கு ஒரு லட்சம் பரிசு வெல்ல வேண்டுமா? அப்போ இது உங்களுக்கான பதிவு தான். வாசியுங்கள் தொடர்ந்து.

ஒரு லட்சம் வெல்ல நீங்கள் செய்ய வேண்டியவை :


  1. உங்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும் 
  2. தமிழில் தன்னம்பிக்கை தொழில் சார்ந்த கட்டுரைகள் எழுதத் தெரிய வேண்டும்.
  3. மூன்று தொழிர்களத்தில் நீங்கள் இணைய வேண்டும்!
  4. தொழிர்களத்தில் தங்களது பதிவுகளை இட வேண்டும்.
  5. பிறகு, தொழிற் களம் நடத்தும் பதிவர் சந்திப்பில் பங்கு பெற வேண்டும்.
நீங்கள் எழுதும் பதிவு, சிறப்பானதாக இருப்பின், உங்களைத் தேர்வு செய்து ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருவார்கள்!

என்ன தயாராகி விட்டீர்களா? ஒரு நிமிடம். இதை உங்களது நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். :) நீங்களும் பங்கு பெறுங்கள் :)

thozhil kalam

"தொழிற்களம்" - இவர்கள் தமிழில் எழுதுபவர்களை ஊக்குவிப்பதற்காக இந்தத் தளத்தில் தமிழ் பதிவர்களைத் தேர்ந்தெடுத்து பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் எழுத வாய்ப்புத் தருகிறார்கள்.

தமிழை வளர்க்க இவர்கள் செய்யும் முயற்சியில் நீங்களும் பங்கு பெறுங்களேன்???

சரி,  வருகிற 26 ஆம் தேதி சென்னையில் சந்திக்கலாம் :) :) 





கருத்துகள்

  1. என்னால் பதிவர் திருவிழாவிற்கு வர முடிய வில்லை என்ற வருத்தம் தான். உங்கள் அனைவரையும் நேரலையில் கண்டது மகிழ்ச்சி, உங்கள் புகைப்படம் கண்டேன், வாழ்த்துக்கள் , என் தளத்திற்கும் கொஞ்சம் வாங்களேன்
    நான் பதிவுலகிற்கு ஒன்ற மாத குழந்தை.
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம் வருகிறேன் உங்கள் தளத்திற்கும். மிக்க நன்றி.

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

கோணம்மா சம்முக வடிவு!

சமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும். சென்ற முறை அமெரிக்கா சென்ற போதும் சரி (என்ன ஜப்பானுல கூப்டாக, அமெரிக்காவுல கூப்டாக... moment :P) இப்போது இங்கு வந்த போதும் சரி. என் அம்மா அப்பா சொன்ன அறிவுரைகள் சில: 1) நல்ல பிள்ளையா இருக்கணும். 2) போறது படிக்கறதுக்கு, படிச்சோமா வந்தோமானு இருக்குணும். 3) தெனமும் skype ல பேசிரணும். 4) ஜாக்கிரதையா இருக்கணும், அந்த ஊரு பிள்ளைங்கள மாதிரி குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது! இன்னும் பல அறிவுரைகள் இருந்தாலும், பெரும்பாலும் முக்கியமான அறிவுரைகள் இவை தான். என்னம்மா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்குப் போனாலே சொல்வார், “என்ன நீ, கட்டப்பை (அதயே, styleஆ சொன்னா, big shopper :P) எல்லாம் கொண்டுட்டு வர்ற, நல்லா சென்னைல இருந்து வந்தா, நல்ல பை கொண்டு வர வேண்டாமா? ஊர்ல இருந்த மாதிரியே தான் இருக்க, ஒரு மாற்றமும் இல்ல!” என்பது போன்ற வசனங்களை. Ginger, Guy, Kanmani :D Lab Friends “கட்டப்பையும் பை தான, அதுல என்ன இருக்கு? ஆமா...