முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்புள்ளவரே! #1

நேரில் பேச தைரியம் இல்லை எனக்கு, அதனால் தான் இந்தக் கடிதம். தயவு செய்து வாசியுங்கள், என் உண்மை உணர்வரிய வாசியுங்கள்! இதை வாசித்து முடிக்கும் போது, என் ஏக்கம், ஏமாற்றம், என் அன்பு எல்லாம் உங்களுக்குப் புரியும்!


நீங்கள் என் எதிர் வீட்டில் தான் இருக்கிறீர்கள், ஆனாலும் என்னைப் பார்த்தால் சிரிப்பதில்லை! என்னிடம் பேசுவதில்லை!

எனக்கும் உங்களோடு பேச வேண்டும் என்று தான் ஆசை, ஆனால், அம்மா திட்டுவாரோ..? அப்பா திட்டுவாரோ? அத்தனை பயம் எனக்கு! :(

உங்கள் வீட்டுச் சுட்டிகளோடாவது விளையாடலாம் என்றால், அதுவும் கூடாதாம், சொல்லிவிட்டார்கள் வீட்டில்!

நீங்களும் நாங்களும், இந்தியா பாகிஸ்தான் போல எப்படி ஆனோம்? என்று ஆனோம்? இன்னும் புரியவில்லை!

காரணம் கேட்டால், "பேசாதே என்றால் பேசாதே", இது தான் அம்மாவின் பதில்!

சண்டை கூட போடவில்லையே? பிறகு ஏனாம்?

முன்பெல்லாம் நாம் பேசிக்கொண்டு தானே இருந்தோம்? உங்கள் வீட்டு வாசப்படியில் உட்கார்ந்து, நீங்களும் நானும், தெருவின் சுட்டிப் பிள்ளைகளும் ஒன்றாக விளையாடினோமே? அந்த நாட்கள் எத்தனை இனிமையானவை?

ஒன்றாக அமர்ந்து, நாம் எல்லோரும், நிலாச்சோறு சாப்பிட்டோமே? அந்த நாட்கள் எத்தனை பசுமையானவை?

கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவேன் நான், தெருச் சிறுவர்களோடு, நீங்கள் உட்கார்ந்து  ரசிப்பீர்கள்! அதெல்லாம் நினைவுகளில் மட்டும் தான் இன்று!

நீங்கள் வீட்டில் இருந்து வெளி வரும்போதெல்லாம் முறைக்கிறீர்கள்! கதவை "படார்" என்று முகத்தில் அடித்தார் போலச் சாத்துகிறீர்கள்! ஏன்???

அத்தனை வெறுப்பா? எனக்கு என்றும் உங்களைப் பிடிக்காமல் இருந்ததே இல்லை! ஆனால், ஏன்? நீங்கள் மட்டும் பிடிக்காதது போலவே நடக்கிறீர்கள்?

ஒருவேளை, நான் முதலில் வந்து பேச வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

இதோ, அதற்காகத் தான் இந்தக் கடிதம். உங்கள் மீது எனக்கு வெறுப்பு துளியும் இல்லை என்பதைச் சொல்வதற்கே இந்தக் கடிதம்!

மீண்டும் அந்தப் பசுமையான, இனிமையான நாட்கள் வேண்டும் என்பதற்காகவே இந்தக் கடிதம்!

இப்போதாவது புரிகிறதா அக்கா? என் அம்மாவுக்குக் கூடத் தெரியாது, உங்களுக்கு நான் இந்தக் கடிதம் எழுதுவது.

எதிர் எதிர் வீட்டில் இருந்து கொண்டு பேசாமல் இருந்தால் நன்றாகவா இருக்கும்? தயவு செய்து, என் உள்ளம் இப்போதேனும் புரிந்திருந்தால், பேச வேண்டாம், ஒரு புன்னகை, என்னைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு புன்னகை போதும் அக்கா! உங்கள் வீட்டுக் குட்டிப் பையன்களையும் சிரிக்கச் சொல்லுங்கள் கொஞ்சம் என்னைப் பார்த்து.

என்னமா முறைக்கிறார்கள் தெரியுமா? ஐந்து வயதில், இத்தனை கோபமா அவனுகளுக்கு என் மீது? சொல்லுங்கள் அக்கா அவர்களையும் புன்னகைக்கச் சொல்லுங்கள்!


என்றும் உங்கள் அன்பை விரும்பும்,
இவள்,
கண்மணி அன்போடு!

கருத்துகள்

  1. தேவையான அவசியமான பதிவு.. இப்போது சிவகாசி போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் கூட காஸ்மோபாலிடன் நகரங்கள் போல வாழ்க்கை முறை எந்திரத்தனமாக மாறிவிட்டது.. வீட்டிற்கு மட்டும் அல்ல, மனிதர்கள் தங்கள் இதயத்திற்கும் காம்பவுண்ட் சுவர் கட்டிக்கொள்கின்றனர் என்பதை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள் கண்மணி :-)

    பதிலளிநீக்கு
  2. akkavukaa? aiyoyo :P

    pesirunga akka... valapora konja nalula ethuku pagaiya vera thooki sumanthukittu :)

    பதிலளிநீக்கு
  3. Its good but you gonna get black and blue from your mom...:P

    பதிலளிநீக்கு
  4. சில விஷயங்களில் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டுத் தான் ஆக வேண்டும் ! அவர்கள் கோணத்தில் இருந்து பார்த்தால் அது சரியாகவே இருக்கும் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம்! சில நேரங்களில் இல்லாமலும் போகலாம்! பெரியவர்கள் என்பதற்காக எல்லா நேரங்களிலும் அவர்கள் சொல்வது சரியாக இருக்கும் என்று சொல்ல இயலாதே?

      நீக்கு
  5. துவக்கம் முதல் இறுதிவரை அருமையான வார்த்தை பிரயோகம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி.. @ வரலாற்றுச் சுவடுகள்!

      நீக்கு
  6. தீபாவளிக்கு வாங்குன அந்த 120ய வாசலுக்கு நேர வைச்சு விட்டிருந்த அக்கா தன்னால பேசிருப்பாங்கல்லா?

    கற்பனை காவியம் அருமை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) அப்டியெல்லாம் செஞ்சா சண்டைக்கு தான் வருவாங்க :)

      நீக்கு
  7. அக்காவுக்கு கடிதம் கிடைத்ததா??...குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை!

    பதிலளிநீக்கு
  8. இது உங்களுக்கு உண்மை அனுபவமோ அல்லது கற்பனையோ எனக்கும் பலருக்கும் அக்கம்பக்கம் அல்லது நண்பர்கள் மூலம் ஏற்படும் ஊசியால் குத்தாமல் குத்தும் வலி.அருமை வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. உண்மை தான், இன்று நடப்பதை தான் எழுத முயற்சித்திருக்கிறேன்.

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

கோணம்மா சம்முக வடிவு!

சமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும். சென்ற முறை அமெரிக்கா சென்ற போதும் சரி (என்ன ஜப்பானுல கூப்டாக, அமெரிக்காவுல கூப்டாக... moment :P) இப்போது இங்கு வந்த போதும் சரி. என் அம்மா அப்பா சொன்ன அறிவுரைகள் சில: 1) நல்ல பிள்ளையா இருக்கணும். 2) போறது படிக்கறதுக்கு, படிச்சோமா வந்தோமானு இருக்குணும். 3) தெனமும் skype ல பேசிரணும். 4) ஜாக்கிரதையா இருக்கணும், அந்த ஊரு பிள்ளைங்கள மாதிரி குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது! இன்னும் பல அறிவுரைகள் இருந்தாலும், பெரும்பாலும் முக்கியமான அறிவுரைகள் இவை தான். என்னம்மா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்குப் போனாலே சொல்வார், “என்ன நீ, கட்டப்பை (அதயே, styleஆ சொன்னா, big shopper :P) எல்லாம் கொண்டுட்டு வர்ற, நல்லா சென்னைல இருந்து வந்தா, நல்ல பை கொண்டு வர வேண்டாமா? ஊர்ல இருந்த மாதிரியே தான் இருக்க, ஒரு மாற்றமும் இல்ல!” என்பது போன்ற வசனங்களை. Ginger, Guy, Kanmani :D Lab Friends “கட்டப்பையும் பை தான, அதுல என்ன இருக்கு? ஆமா...