முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் உங்கள் தாய் மொழியா? உறவாட வாருங்கள்!


தமிழுக்கும் சமூக ஒற்றுமைக்கும் மாற்றத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஒரு விழா நடக்க இருக்கிறது!

இதில் கலந்து கொள்ள, நீங்கள் பெரிய எழுத்தாளராக, தொழிலதிபராக, சமூக சேவகராக, பணம் படைத்தவராக, இப்படி எதுவும் தேவை இல்லை.

தமிழ் புரியுமா? தமிழ் தெரியுமா? தமிழரா? அது போதும்!

சமூக மாற்றம் ஒன்று கொண்டு வர விரும்புகிறீர்களா? உறுதியாக நீங்கள் கலந்து கொள்ள வேண்டிய விழா இது!

"  ஒன்றுபட்ட ஒரு நல்ல சமூகத்தை அமைக்க  நீங்கள் விரும்புவீர்களேயானால், உங்கள் பார்வையை மாணவர்களின் பக்கம் திருப்புங்கள். உங்கள் கரங்களை கொடுத்து அவர்களை வலுப்படுத்துங்கள் என்ற சிந்தனையை உலகிற்கு வெளிப்படுத்துவதே ஆகும்."

இது தான் இந்த விழாவின் முக்கிய நோக்கமாக இருக்கிறது!

இதில் தொழிற்களம், தமீழ் மீட்சி இயக்கம்  போன்ற இன்னும் பல அமைப்புகள் ஊடகங்களாக செயல்படுகின்றன.

  நிகழ்ச்சி அமைப்பு : 

நாள்      :  டிசம்பர் 30, 2012 ஞாயிற்று கிழமை 
நேரம்   :   மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை 
இடம்   :   திருப்பூர் குமார் நகர், 
                 ஶ்ரீ கருப்பராயன் சுவாமி கோவில் திருமண மண்டபம்,
                 திருப்பூர்.

இந்த விழாவில் "தாய்த் தமிழ்" பள்ளி மாணவர்களுக்கு முக்கியமாக பங்களிக்க வாய்ப்புக் கொடுத்து, அவர்களுக்கு பரிசும் வழங்க இருக்கிறோம்.

அதென்ன? தாய்த் தமிழ்ப் பள்ளி? இந்தப் பள்ளிக்கு என்ன சிறப்பு என்கிறீர்களா?


இதோ, "இங்கே" நீங்கள் தாய்த் தமிழ்ப் பள்ளியைப் பற்றி நீங்கள் படிக்கலாம்.

இந்த விழாவில், 


தன் கரங்களால் தாய்த் தமிழ்ப் பள்ளி மாணவ செல்வங்களை பாராட்டி சிறப்புரையாற்றுகிறார்.

நீங்களும் எங்களோடு இணையுங்கள்! மேலும் விபரங்களுக்கு, "இந்த" வலைப்பூவில் இருக்கும், விழாநோக்கம் குறித்த பக்கத்தைப் பாருங்கள், மேலும், இங்கே அழைப்பிதழ் (மேலே இருக்கிறது), அதில் இருக்கும் அலைபேசி எண்களை அழையுங்கள்!

சரி, உங்களை திருப்பூரில் முப்பதாம் தேதி சந்திக்கிறேன்!


=======================================================================

உங்கள்,

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

கோணம்மா சம்முக வடிவு!

சமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும். சென்ற முறை அமெரிக்கா சென்ற போதும் சரி (என்ன ஜப்பானுல கூப்டாக, அமெரிக்காவுல கூப்டாக... moment :P) இப்போது இங்கு வந்த போதும் சரி. என் அம்மா அப்பா சொன்ன அறிவுரைகள் சில: 1) நல்ல பிள்ளையா இருக்கணும். 2) போறது படிக்கறதுக்கு, படிச்சோமா வந்தோமானு இருக்குணும். 3) தெனமும் skype ல பேசிரணும். 4) ஜாக்கிரதையா இருக்கணும், அந்த ஊரு பிள்ளைங்கள மாதிரி குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது! இன்னும் பல அறிவுரைகள் இருந்தாலும், பெரும்பாலும் முக்கியமான அறிவுரைகள் இவை தான். என்னம்மா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்குப் போனாலே சொல்வார், “என்ன நீ, கட்டப்பை (அதயே, styleஆ சொன்னா, big shopper :P) எல்லாம் கொண்டுட்டு வர்ற, நல்லா சென்னைல இருந்து வந்தா, நல்ல பை கொண்டு வர வேண்டாமா? ஊர்ல இருந்த மாதிரியே தான் இருக்க, ஒரு மாற்றமும் இல்ல!” என்பது போன்ற வசனங்களை. Ginger, Guy, Kanmani :D Lab Friends “கட்டப்பையும் பை தான, அதுல என்ன இருக்கு? ஆமா...