முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்று காலை, அதிகாலை!


என் குரலில் இந்தப் பதிவைக் கேட்க,


படிக்க வேண்டும் என்றால் மட்டும் தான்,
படுக்கையை விட்டு அதிகாலை எழுவேன்,
பத்து மணி தான் இல்லை என்றால்!

இரவெல்லாம் படித்தால் தான்,
இன்பமாக இருக்கிறது,
காலையில் கொஞ்சம் தூக்கம்,
கண்கள் கேட்கிறது!

இன்று பரிட்சையும் இல்லை,
படிக்கவும் இல்லை - ஆனால்,
பனி விழும் அதிகாலையிலேயே,
படுக்கையை விட்டு எழுந்தாயிற்று!

குளிர் நீரிலே குளித்தாயிற்று - அம்மாவோடு,
கோயில் கோயிலாய் சென்றாயிற்று,
"கோயிலுக்குச் சென்றால் தான் உண்டா?"
கேள்விகளை எல்லாம் ஓரம் கட்டியாயிற்று.




"அன்பின் இடத்தே இறைவன்",
என் நம்பிக்கை அது - பிறகு,
ஏன் கோயிலுக்குச் சென்றேன்,
எதற்காக மண்டியிட்டேன்?

"மார்கழி ஒன்னு,
கோயிலுக்குப் போனா நல்லது!",
அம்மாவின் அன்பான ஆசைக்காக!
என் கொள்கைக்காக!



"அன்பின் இடத்தே இறைவன்"
தெய்வத்தோடு சென்று,
கற்களை வணங்கி நின்றேனே,
காலையிலேயே -அதிகாலையிலேயே!

----------------------------------

காலையில் காலாற நடந்தால் நல்லது என்பார்கள், அம்மா வேறுமாதிரி சொல்கிறார் அதையே, இருப்பினும் நல்லது தானே சொல்கிறார்!

கருத்துகள்

  1. அம்மாவின் அறிவுரையை, பகுத்தறிவு பேச்சால் மீறாமல் நடந்தமை நல்ல பகுத்தறிவு. வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களின் பயணம்.

    பதிலளிநீக்கு
  2. மார்கழிக்கு அழகான வரவேற்பு கவிதை கண்மணி!

    பதிலளிநீக்கு
  3. "அன்பின் இடத்தே இறைவன்"
    தெய்வத்தோடு சென்று,
    கற்களை வணங்கி நின்றேனே,

    அருமையான வரிகள்
    ஒலி இணைப்பும் தேன் குரலும் மிக நன்று.

    http://abiatchennai.blogspot.in/2012/12/blog-post.html

    பதிலளிநீக்கு
  4. //தெய்வத்தோடு சென்று,
    கற்களை வணங்கி நின்றேனே,//அருமையான வரிகள்...
    அம்மா மீது நீங்கள் வைத்திருக்கும் மதிப்பு தெரிகிறது இந்த வரிகளில்

    குரல் அருமை.இனிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி :) அம்மாவை நேசிக்காத, மதிக்காதவர்கள் இருப்பார்களா என்ன?

      நீக்கு
  5. நன்றாக சிந்தனை செய்கின்றீர்கள், உள் அர்த்தம் பொதிந்த வகையிலே கவி எழுதுவது சிலருக்கே வரும். உங்களிடம் அந்த திறமை ஒளிந்து கிடக்கிறது. மெருகேற்றவும்.
    ஒலி வடிவில் கேட்டது புதுமை. சொல் ஏற்ற இ(ற)ரக்கம் கவனிக்கவும். உங்கள் ஊரில் ஹலோ பண்பலை 106.5 கேட்குமானால், இரவில் டைரி என்ற நிகழ்ச்சியை கேட்டு பாருங்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  6. மிக்க நன்றி :) ம்ம் இனி கவனிக்கிறேன் ஒலி பதிவு செய்கையில்.

    வானொலி கேட்க இயலுமா என்று தெரியவில்லை, முயல்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. //விடியா இரவின் இருட்டில், நிலவிற்கு நான் வைத்த முத்தங்கள்!// அழகு ...

    பதிலளிநீக்கு
  8. //விடியா இரவின் இருட்டில், நிலவிற்கு நான் வைத்த முத்தங்கள்!// அழகு ...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

கோணம்மா சம்முக வடிவு!

சமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும். சென்ற முறை அமெரிக்கா சென்ற போதும் சரி (என்ன ஜப்பானுல கூப்டாக, அமெரிக்காவுல கூப்டாக... moment :P) இப்போது இங்கு வந்த போதும் சரி. என் அம்மா அப்பா சொன்ன அறிவுரைகள் சில: 1) நல்ல பிள்ளையா இருக்கணும். 2) போறது படிக்கறதுக்கு, படிச்சோமா வந்தோமானு இருக்குணும். 3) தெனமும் skype ல பேசிரணும். 4) ஜாக்கிரதையா இருக்கணும், அந்த ஊரு பிள்ளைங்கள மாதிரி குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது! இன்னும் பல அறிவுரைகள் இருந்தாலும், பெரும்பாலும் முக்கியமான அறிவுரைகள் இவை தான். என்னம்மா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்குப் போனாலே சொல்வார், “என்ன நீ, கட்டப்பை (அதயே, styleஆ சொன்னா, big shopper :P) எல்லாம் கொண்டுட்டு வர்ற, நல்லா சென்னைல இருந்து வந்தா, நல்ல பை கொண்டு வர வேண்டாமா? ஊர்ல இருந்த மாதிரியே தான் இருக்க, ஒரு மாற்றமும் இல்ல!” என்பது போன்ற வசனங்களை. Ginger, Guy, Kanmani :D Lab Friends “கட்டப்பையும் பை தான, அதுல என்ன இருக்கு? ஆமா...