முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டாலர் நகரம்!

இன்று உலகில் எல்லோருக்கும் ஒரு புது மோகம் உருவாகி வருகிறது, என்ன அது? தங்களது சம்பளத்தை "டாலரில்" சொல்ல வேண்டும் என்பதே அது.

சரி டாலர் நகரம் என்றால் எது? அமேரிக்காவா? இப்படி தான் பெரும்பாலானோர் கேட்பார்கள். அருகில் இருப்பதன் அருமை எப்போதுமே தெரியாது என்பார்களே? அது உண்மையா? உண்மை தான்.

இங்கு தமிழகத்தில் ஏற்றுமதியில் பெரிதும் சிறந்து விளங்கும் திருப்பூரைத் தான் நான் டாலர் நகரம் என்று சொல்கிறேன்.

சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், நான் இங்கு திருப்பூரைப் பற்றி பேசப் போவதில்லை!

எனக்கு வாழ்வில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட, தமிழ் ஆர்வம் ஏற்படக் காரணம் என்ன என்றால், திருப்பூரில் நான் படித்த பள்ளியில் இருந்த எனது தமிழ் ஆசிரியர் என்பேன்.

அப்போ, இந்தப் பதிவு அந்த ஆசிரியர் பற்றியதா? இல்லை!

டாலர் நகரம்! இது, ஒரு புத்தகம்!

என்னை பெரிதும் ஊக்குவித்து வரும் ஒரு உயர்ந்த மனிதரின் புத்தகம்!

திருப்பூரில் இன்று நூறு கோடி வருவாய் ஈட்டும் ஒரு பெரும் நிறுவனத்தில் மேலாளராக இவர் இருக்கிறார். இந்த நிலையை அடைய அவர் சிந்திய வியர்வைத் துளிகள், அந்தத் துளிகளை அவர் சேமித்து வைத்து இருந்திருக்கிறார்!

ஆம், உண்மை, அந்த வியர்வை தன்னை, எழுத்தாக சேமித்து வைத்திருந்திருக்கிறார். அது தான் இந்தப் புத்தகம்.

திருப்பூரின் தொழில், வாழ்க்கை இப்படி திருப்பூரைப் பற்றி தெளிவாக அறிய நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தே தீர வேண்டும்.

இந்தப் புத்தக வெளியீட்டு விழா, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடக்க இருக்கிறது. அனைவரும் கலந்து கொள்ளுங்கள், கலந்து கொள்வதற்கு இயலவில்லையா?

புத்தகம் வாங்கிப் படியுங்கள். இரண்டையும் செய்தால் சிறப்பு!

நிகழ்ச்சி விபரங்கள்:

நாள்: 27/1/13  ஞாயிற்றுக் கிழமை
நேரம்: காலை 9.30 மணி  முதல் மதியம் 1.00 மணி வரை
இடம்: டி.ஆர்.ஜி. அரங்கம்,
585, பல்லடம் சாலை,
திருப்பூர்.

போக்குவரத்து குறித்த விபரங்களுக்கு நிகழ்காலம் சிவா அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்! அலைபேசி எண்: 97 900 36 233


என்ன கிளம்புகிறீர்களா? விழாவிற்கு? தங்களது பயணம் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்!






கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

கோணம்மா சம்முக வடிவு!

சமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும். சென்ற முறை அமெரிக்கா சென்ற போதும் சரி (என்ன ஜப்பானுல கூப்டாக, அமெரிக்காவுல கூப்டாக... moment :P) இப்போது இங்கு வந்த போதும் சரி. என் அம்மா அப்பா சொன்ன அறிவுரைகள் சில: 1) நல்ல பிள்ளையா இருக்கணும். 2) போறது படிக்கறதுக்கு, படிச்சோமா வந்தோமானு இருக்குணும். 3) தெனமும் skype ல பேசிரணும். 4) ஜாக்கிரதையா இருக்கணும், அந்த ஊரு பிள்ளைங்கள மாதிரி குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது! இன்னும் பல அறிவுரைகள் இருந்தாலும், பெரும்பாலும் முக்கியமான அறிவுரைகள் இவை தான். என்னம்மா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்குப் போனாலே சொல்வார், “என்ன நீ, கட்டப்பை (அதயே, styleஆ சொன்னா, big shopper :P) எல்லாம் கொண்டுட்டு வர்ற, நல்லா சென்னைல இருந்து வந்தா, நல்ல பை கொண்டு வர வேண்டாமா? ஊர்ல இருந்த மாதிரியே தான் இருக்க, ஒரு மாற்றமும் இல்ல!” என்பது போன்ற வசனங்களை. Ginger, Guy, Kanmani :D Lab Friends “கட்டப்பையும் பை தான, அதுல என்ன இருக்கு? ஆமா...