முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அப்பாக்குட்டிக்குப் பிறந்த நாள்!

அப்பாக்குட்டியும் நானும்!
என்னுடைய பதிவுகளை தொடர்ந்து வாசிப்பவர்களுக்குப் புரிந்திருக்கும், இது எதைப் பற்றிய பதிவு என்று. ஆம், இன்று அப்பாக் குட்டியின் பிறந்த நாள். அப்பாக் குட்டி? அது யார்? தெரியாதா உங்களுக்கு? அட, அது என்னுடைய அப்பா!

சிறுவயதில் என்னை அவர் அப்படித் தான் அழைப்பார். இப்போது நான் பெரியவள் ஆனதும் அப்படி அழைப்பதில்லை! :( அதனால் என்ன? இப்போது நான் அவரை பதிலுக்கு அப்பாக் குட்டி என்று அழைக்கிறேனே!

இன்று என் அப்பாக் குட்டிக்கு பிறந்தநாள், அதே போல, என்னுடைய இரண்டு வகுப்புத் தோழிகளுக்கும் பிறந்த நாள்! :) ஒரு மிட்டாய் கிடைத்தாலே ஆனந்தம், இதில் இன்று "கண்ணா, இன்னொரு லட்டு தின்ன ஆசையா?", என்பது போல, நிறைய மிட்டாய் கிடைக்கப் போகிறது! :)

மேலும் இன்று என் கல்லூரியில் ஆண்டு விழா வேறு! கேட்கவா வேண்டும், அப்பா அம்மா தம்பி எல்லோரும் வருகிறார்கள், ஒரே ஆனந்தம் தான் இன்று!

இத்தனை நாட்களாக, புத்தகம், சோறு, உறக்கம், இது மட்டுமே செய்து கொண்டிருந்த எனக்கு மாற்றாக, கொஞ்சம் கலை நிகழ்ச்சி, அற்புதமான ஆண்டு விழா உணவு, அப்பா, அம்மா, தம்பியோடு சேர்ந்து இருப்பது என்று நல்ல நல்ல நிகழ்வெல்லாம் நடக்க இருக்கிறது :)

எப்போதும் வேலை செய்து கொண்டு, எப்போதும் படித்துக் கொண்டு இருந்தாலும், வாழ்க்கை சலித்துவிடும் தான் போலும்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பாக்குட்டி!
இன்று போல் என்றும் நானும் அப்பாகுட்டியும், அம்மாவும், தம்பியும், பிறகு என் தோழிகள், நீங்கள், எல்லோரும் ஆனந்தமாக இருக்க வேண்டும். இப்படி நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள்?

என்றோ ஒரு நாளிதழில் படித்தது இப்போது எனக்கு நினைவிற்கு வருகிறது, ஒரே போல எப்போதும் கடினமாக உழைப்பவர்களை விட, அவ்வப்போது விடுமுறை, கொண்டாட்டம் என்று இருக்க வேண்டுமாம். அப்படி இருப்பவர்களால் தான் மேலும் சிறப்பாக வேலை செய்ய இயலுமாம். எப்போதும் வேலை செய்து கொண்டே இருந்தால், சிறப்பாக இருக்காதாம் நாம் செய்யும் வேலை.

அதனால், இன்று ஆனந்தமாக இருக்கும் நாள் :) உங்களுக்கும் தான்!

கருத்துகள்

  1. தங்களின் தந்தைக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. உங்களின் அப்பாகுட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    //அவ்வப்போது விடுமுறை, கொண்டாட்டம் என்று இருக்க வேண்டுமாம். அப்படி இருப்பவர்களால் தான் மேலும் சிறப்பாக வேலை செய்ய இயலுமாம்.// மிக சரி. ரிலாக்ஸ் இல்லாத வாழ்க்கை சக்கரத்தின் பல் என்று வேண்டுமானாலும் தேய்ந்து போகலாம்

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா4/16/2013 1:41 AM

    கண்மணி என பொதுவாக பிள்ளைகளை கொஞ்சுவது வழக்கம். உன்ன மட்டும் கோபத்துல
    திட்டுனாலும் கொஞ்சிடே திட்டிரமாற இருக்கும்னு நினைக்கறேன் அப்பாக்கு :)
    அவர் இந்த பதிவை படிப்பார் என்ற நம்பிக்கையில் அவருக்கு எனது வாழ்த்துக்கள் நேரடியாக :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம் அப்படித் தான் இருக்கும் கொஞ்சுவது போல. ஆனால் என்னை அப்பா திட்டுவதே இல்லை! :) நான் சமத்துப் பிள்ளை! :D நன்றி...

      நீக்கு
    2. பெயரில்லா4/17/2013 6:43 AM

      சமத்து பிள்ளையா.. அப்பாவ கேட்டா தெரியும், சமத்தா வாலா-னு :D

      நீக்கு
    3. :D கேளுங்க கேளுங்க! உண்மைல நான் சமத்து தான்.

      நீக்கு
  4. belated to him. then, you got fellowship . right. congrats do wel the research.

    பதிலளிநீக்கு
  5. உங்கள் அப்பாக்குட்டியின் பிறந்தநாளைக்கு ரொம்ப லேட்டாக வந்திருக்கிறேன். எனது வாழ்த்துக்களை சொல்லுங்கள். நீங்களும் உங்கள் அப்பாக்குட்டியும் இதேபோல என்றும் இருக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) நன்றி மா. தங்களது வாழ்த்துக்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி! :) :)

      நீக்கு
  6. என் பிறந்தநாளை மறக்காமல் இருப்பனு நினைக்கிறன்.உன் அப்பாக்குட்டி பிறந்தநாள் அன்று என்பதால:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெப்படி மறப்பேன் கவி :) உனக்கும் என் அப்பா நினைவு வரும் தானே, உன் பிறந்த நாள் அப்போ?

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

கோணம்மா சம்முக வடிவு!

சமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும். சென்ற முறை அமெரிக்கா சென்ற போதும் சரி (என்ன ஜப்பானுல கூப்டாக, அமெரிக்காவுல கூப்டாக... moment :P) இப்போது இங்கு வந்த போதும் சரி. என் அம்மா அப்பா சொன்ன அறிவுரைகள் சில: 1) நல்ல பிள்ளையா இருக்கணும். 2) போறது படிக்கறதுக்கு, படிச்சோமா வந்தோமானு இருக்குணும். 3) தெனமும் skype ல பேசிரணும். 4) ஜாக்கிரதையா இருக்கணும், அந்த ஊரு பிள்ளைங்கள மாதிரி குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது! இன்னும் பல அறிவுரைகள் இருந்தாலும், பெரும்பாலும் முக்கியமான அறிவுரைகள் இவை தான். என்னம்மா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்குப் போனாலே சொல்வார், “என்ன நீ, கட்டப்பை (அதயே, styleஆ சொன்னா, big shopper :P) எல்லாம் கொண்டுட்டு வர்ற, நல்லா சென்னைல இருந்து வந்தா, நல்ல பை கொண்டு வர வேண்டாமா? ஊர்ல இருந்த மாதிரியே தான் இருக்க, ஒரு மாற்றமும் இல்ல!” என்பது போன்ற வசனங்களை. Ginger, Guy, Kanmani :D Lab Friends “கட்டப்பையும் பை தான, அதுல என்ன இருக்கு? ஆமா...