முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

முகப்புத்தகப் பதிவுகளை வலைப்பூவில் பொதிப்பது (Embed) எப்படி?

"அவரு ரொம்ப நல்லா எழுதுவாரு, ஆனா, இப்போ எல்லாம் அவரு ப்ளாக்-ல எழுதுறதே இல்ல.. எல்லாம் முகப்புத்தகத்துல தான். இதனால நெறைய பேருக்கு அவர் எழுதுறது சில நேரம் போய்ச் சேரமாட்டிக்குது..", இப்படி நன்றாக எழுதும் ஒருவரைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தோம், நானும் நண்பர் ஒருவரும். உண்மை, கட்டுரைகள் கதைகள், இப்படி எழுதுவது குறைந்து, சிறு சிறு வாசகங்களாக, நக்கல் பேசும் வரிகளாக மாறிவிட்டன இப்போது எழுத்துக்கள் எல்லாம். "சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது", என்பது சிறப்புதான் என்றாலும், விரிவாக ஒன்றை எழுதுவதும் திறமை தானே? சரி, நாம் கதைக்கு வருவோம், ஒருவர் நன்றாக முகநூலில் எழுதுகிறார், அது உங்களுக்குப் பிடித்து இருக்கிறது, உங்கள் வலைப்பூவில் அதைப் போட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். இப்படி நான் நினைத்தால், "copy - paste" செய்து, ஒரு இணைப்புக் கொடுத்து இருப்பேன். ஆனால், இதற்கு மாற்றாக ஒரு வழி உள்ளது. நேரடியாக அந்த நபர் முகநூலில் எழுதியதை நீங்கள் அப்படியே உங்கள் வலைப்பூவில் போடலாம். எப்படி? அந்த நபர் எழுதி இருக்கும் பதிவை உங்கள் வலைப்பூவில் சேர்க்க, கீழ் வருமாறு செய்யல...

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?...

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

இது ஒரு சிக்கன் கதை!

சிக்கன்! அசைவ விரும்பிகள் எல்லோருக்குமே பிடித்த, மிக மிகப் பிடித்த ஒன்றாக இருக்கும் இந்தச் சிக்கன்!? எப்போதும் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு மீன் சமைக்கும் வாசம், அற்புதமாகவும், சைவம் சாப்பிடுபவர்களுக்கு அது “அய்யோ... என்ன கருமம்!”, என்பது போலவும் இருக்கும்! இதில் நான் முதல் வகை, அசைவம் சாப்பிடும் வகை! என் நண்பர்கள் உறவினர்களிடம் கேட்டால் தெரியும், எனக்கு எவ்வளவு பிடிக்கும் அசைவ உணவு என்பது! எனக்கு ஒரு அத்தை இருக்கிறார், அவர் வீட்டிற்குச் சிறுவயதில் சென்ற போது, ஒரு முறை, ஒரு அரைக் கிலோ மீனை ஒரே ஆளாகச் சாப்பிட்டேனாம்! ”புரட்டாசி மாதம், அசைவம் சாப்பிடக் கூடாது, வெள்ளி, செவ்வாய் பிறகு சனி, அசைவம் சாப்பிடக் கூடாது”, இப்படி என் அம்மா போடும் விதிகள் எல்லாம், அப்பா... எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது! அதென்னவொ, அசைவ உணவின் ருசி அத்தனை அருமை! (இதைத் தான் பசிக்கு உண்ணாமல் ருசிக்கு உண்பது என்பார்களோ???) என் அப்பா அசைவம் சாப்பிடமாட்டார் அதிகம், நானும் அம்மாவும் தான், வற்புறுத்தி சாப்பிட வைப்போம். அவர் உடனே சொல்வார், “ஊன் வளர்க்க ஊன் உண்ணக் கூடாது”, என்றெல்லாம். என்னையு...

ஓட ஓட ஓட தூரம் கொறையல!

கொஞ்சம் மூச்சுத் திணறல், இழுத்து சுவாசித்தேன் ஒரு முறை, மற்றொரு முறை, கொஞ்சம் லேசாக இருந்தது மனசுக்கு. எதையும் நினைக்கக் கூடாது, வேண்டாம், நினைக்கவே கூடாது! இப்படி நான் நினைக்க நினைக்க அந்த நினைப்பு அதிகமாகிக் கொண்டே போனது தான் மிச்சம்! என்ன அது? அது இங்கே அவசியமற்ற ஒரு விசயம். சொல்ல அவசியமில்லை. எதோ ஒரு மனக்குறை, உங்களுக்கு நேற்று இருந்ததே? இல்லை போன வாரம் இருந்ததே? இல்லை, இப்போது இருக்கிறதே? அதே போல ஒரு மனக்குறை. யாரிடமாவது சொல்லலாம் என்றால், ”இது ஒன்றும் அவ்வளவு பெரிய மனக்குறை எல்லாம் இல்லை”, என்று குரல் கொடுக்கிறது இந்த அறிவு. எப்போதும் இந்தப் போராட்டம், “இப்படி ஆகிடுச்சே, இது நாம நெனச்ச மாதிரி நடந்து இருக்கலாமே, ச, இப்படி ஆகிடுச்சே??” மனசு அடித்துக் கொள்வதும்.  அது அப்படித் தான் நடக்கும் என்று ஏற்கனவே அறிவு கணித்து வைத்திருந்த ஒன்று தான் இது என்பதால், “இது நான் ஏற்கனவே எதிர்பார்த்தது தானே?”, என்று அறிவு அலட்டிக் கொள்ளாமல் இருப்பதும், வாடிக்கையாகிவிட்டது. மனசே இல்லமால் இருந்தால் என்ன? அதென்ன மனசு? அறிவு? ரெண்டுக்கும் என்ன தான் வித்தியாசம்...

பட்டணம் போனேனா....

அது ஒரு பெரிய ”கடை”, கடை என்று சொல்வது பொருத்தமாக இருக்காது தான், ஆனால் பாருங்களேன், “மால்” என்பதற்குத் தமிழில் எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை எனக்கு! அதனால், கடை என்றே வைத்துக் கொள்வோம். வெளியில் இருந்து பார்த்தாலே ஒரு பாதி நாள் பார்க்கலாம் போல, அவ்வளவு பெரி....ய கடை! வெளியே வந்து நின்றது ஒரு பெரிய கார், உள்ளே இருவர் மட்டும் தான் இருந்தார்கள். ஓட்டுனரையும் சேர்த்தால், மூன்று பேர்! “கார பார்க்கிங்ல விட்டுடுங்க”, சொல்லியவாரே இறங்கினான் அவன். வயது ஒரு முப்பதிற்கு உள் தான் இருக்கும். இறங்கியவன், கையைப் பிடித்து உடன் வந்த தன் வயதான அம்மாவை இறக்கிவிட்டான். இருவரும் கை பிடித்தவாறு அந்தப் பெரிய கடையினுள் நுழைய நடந்தார்கள். அந்த அம்மா இது தான் முதல் முறை பட்டணம் வந்திருப்பார் போலும், ஒவ்வொரு ”இன்ச்சை”யும் சற்று வியப்பாகவே பார்த்துக் கொண்டு இருந்தார். ”இது என்ன, அது என்ன..”, என்று தன் மகனிடம் குழந்தையைப் போலவே கேட்டுக் கொண்டு இருந்தார். அவனும், “அதுவாமா, அது வந்து...” என்று சிறுவயதில் தன் அம்மா தனக்குச் சொல்லித் தந்ததைப் போலவே மிகவும் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டு இ...

பழசும் புதுசும்!

எப்போதுமே பழைய பொருட்களுக்கு ஒரு மவுசு உண்டு! அப்படித்தானே? பழைய நாணயங்களை சிலர் விரும்பிச் சேகரிப்பார்கள், சிலர் பழைய கலைப் பொருட்களாக வாங்கிக் குவிப்பார்கள், இன்னும் சிலருக்கு பழைய மாடல் இரு சக்கர வாகனங்கள் வாங்கும் பழக்கம் கூட இருக்கும்! இந்த வரிசையில் சேரும் இன்னும் ஒரு விஷயம் பழைய பாடல்கள். ”பழைய பாடல்கள் போல வருமா இப்போது இருக்கும் பாடல்கள் எல்லாம்”, என்று நிறைய பேர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். பழைய பாடல்களா புதியனவா என்று சண்டை போடுபவர்கள் கூட உண்டு! ஆனால், எனக்கு புதிய பாடல்கள் பிடிக்குமா? பழைய பாடல்களா? இப்படி நான் யோசித்துக் கொண்டு இருந்தேன் நேற்று இரவு படுத்துக் கொண்டே. எனக்கு புதிய பாடல்கள் மீது, “அட, ச, என்ன இது, இப்படி ஒரு பாட்டா!”, என்று ஒரு போதும் தோன்றியதில்லை. சில பாடல்கள் அவ்வளவாக விரும்பிக் கேட்காவிட்டாலும், வெறுத்ததில்லை ஒரு போதும். அதே போல, பழைய பாடல்கள், அதிலும் அப்படித் தான், சில பாடல்கள் விரும்பிக் கேட்டாலும், சிலவற்றை விரும்பிக் கேட்காதபோதும், வெறுப்பதில்லை! பெரும்பாலும், பழைய பாடல் என்றதும், என் நினைவுக்கு வருவது, “காதலிக்கக நேரமில்லை, காதலிப்பார்...