முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை ---> பாகம் 6 ---> சிக்ன(க)ல்






(பாகம் ஐந்து படிக்கவில்லையா? இந்த link உபயோகப்படுத்துங்க
தொடர்கதை ---> பாகம் 5 ---> சிக்ன(க)ல்படிச்சிட்டு, இங்க வாங்க .)


பதற்றத்தோடு அவளின் கண்களின் பிரகாசத்தில் கூசி நின்றான்..


சுவாதி , " என்ன கிருஷ்ணா? என்னவோ பேசணும்னு, எதுவும் சொல்லாம இருக்ற...??? "


"அது.. இல்ல, இல்ல... சுவாதி .. நீ தப்பா எடுத்துக்க கூடாது...??? " என்று வார்த்தைகளை தெருவோரம் சவ் மிட்டாய் விற்கும் வியாபாரி போல இழுத்து மென்று விழுங்கிக் கொண்டு இருந்தான்...


ஆணையும் இலக்கி., பதற்றம் தந்து., நாண வைக்கும் சக்தி , காதலுக்குத் தான் இருக்கிறது என்று முழுதாய் உணர்ந்து நின்றான்..


இழுத்ததிலேயே... லேசாகப் புரிந்தது போல் உணர்ந்தாள் சுவாதி..


"சொல்லு தப்பா எடுத்துக்க மாட்டேன்..? என்ன கிருஷ்ணா.. லேட் ஆகுது எனக்கு.." 


" இரு சுவாதி சொல்லிடறேன் ." கிருஷ்ணா பதறினான்.


நடுவே புகுந்தாள் busstop சென்றிருந்த சுவாதியின் தோழி..


" ஏ சுவாதி எங்க அப்பா phone பண்றாங்க, சீக்ரமா வீட்டுக்கு நான் போகணும்.. வா.. late ஆகுது எனக்கு.."


" சாரி கிருஷ்ணா... நான் கெளம்பனும்., நீ என்னனு text பண்ணறப்போ சொல்லு., bye.."


 " சுவாதி ... சுவாதி இரு.. என் gift வாங்கிட்டுப் போ... " கத்தியவாறே ஓடிச் சென்று அவன் வாங்கி வந்த பரிசுப் பொட்டலத்தை
அவளிடம் கொடுத்தான்...


அவளும் " ok கிருஷ்ணா bye " என்று அவசரமாகக் கிளம்பினாள்.


சுவாதி தூரத்தில் சென்று மறையும் வரை வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்றான் கிருஷ்ணா.


பார்ப்பதில் மட்டும் கூட., அத்தனை சுகம் கிடைக்கும் என்று அன்று தான் உணர்ந்திருந்தான் அவன் .


அவள் சென்று மறைந்ததும்.,அவள் தந்த பரிசைப் பிரிக்க நினைத்தான்..


ஆர்வம் கொப்பளிக்க அங்கேயே பிரித்து விட்டான்...


அவன் எதிர் பார்த்தது போல., கடிகாரமோ.,பொம்மையோ., show piece- ஒ இல்லாமல் புத்தகம் பரிசளித்து இருந்தாள் சுவாதி..


புத்தகத்தின் பெயரே விநோதமாக இருந்தது கிருஷ்ணாவிற்கு.,


" உஷார் உள்ளே பார் !!! " எழுதியது சோம வள்ளியப்பன். 


" Happy birhtday krish.,
 I know , you don't have the habit of reading., 
this book will be useful.,  
please do read , just for me - with love  shwathi. " என்று கையொப்பம் இட்டிருந்தாள் சுவாதி.


எழுதி இருந்த எல்லா வார்த்தைகளை விடவும் " love" என்ற வார்த்தை அவனை இமயம் சேர்த்திருந்தது அந்த நொடியில்., குதித்தான் சந்தோஷத்தில்


எல்லா விஷயத்திலும் சற்று வித்தியாசமாகத் தோன்றினாள் சுவாதி அந்நேரம் அவனுக்கு.


பூங்கொத்து., பொம்மை., show piece என்று கொடுக்கும் காலத்தில்., தன் மீது அக்கறையோடு , தன் நன்மைக்கு என்று புத்தகம் பரிசளித்த சுவாதி உயர்ந்து நின்றாள் ஒரு கணம்.


                                                         ----------------------------


சுவாதி பேருந்தில்.,


ஆர்வத்தோடு பிரித்தாள் கிருஷ்ணாவின் பரிசை..


ஊஞ்சலில் ஆடும் பெண்ணை ., தாலாட்டுகிறான் காதலன் முத்தமிட்டவாறே., கீழே " love" என்று எழுதி இருந்தது .


புரிந்தது சுவாதிக்கு பளீரென.


தோழியும் இதை கவனித்து விட., " பாத்து சுவாதி., கிருஷ்ணா gift என்னவோ சரியா படல.. ", என்றாள் .


" ம்ம் நான் பாத்துகறேன்.." , என்று முகத்தில் எந்த வித உணர்ச்சி வெளிப்பாடும் இன்றி இருந்த சுவாதியின் மனதை தோழியாலும் கணிக்க இயலவில்லை....


பெண்ணின் மனம் பெண்ணிற்கும் புரியவில்லை...


புரியாத பெரும் புதிராக இருந்தது.. சுவாதியின் மனம்..


--- காதலோ இது???


                                                   ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥






சுவாதி கிருஷ்ணாவிடம் எவ்வித உணர்ச்சியை வெளிப்படுத்தினாள் ???


படிக்க நாளை இரவு வரை காத்திருங்கள்...


கருத்துகள்

  1. கிருஷ்ணாவிட நீங்கதான் அந்த சவ்வு மிட்டாய் உவமைக்கு போருத்தமனவங்க..please write it quicly...

    பதிலளிநீக்கு
  2. பெண்ணின் மனம் பெண்ணிற்கும் புரியவில்லை....

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

கோணம்மா சம்முக வடிவு!

சமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும். சென்ற முறை அமெரிக்கா சென்ற போதும் சரி (என்ன ஜப்பானுல கூப்டாக, அமெரிக்காவுல கூப்டாக... moment :P) இப்போது இங்கு வந்த போதும் சரி. என் அம்மா அப்பா சொன்ன அறிவுரைகள் சில: 1) நல்ல பிள்ளையா இருக்கணும். 2) போறது படிக்கறதுக்கு, படிச்சோமா வந்தோமானு இருக்குணும். 3) தெனமும் skype ல பேசிரணும். 4) ஜாக்கிரதையா இருக்கணும், அந்த ஊரு பிள்ளைங்கள மாதிரி குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது! இன்னும் பல அறிவுரைகள் இருந்தாலும், பெரும்பாலும் முக்கியமான அறிவுரைகள் இவை தான். என்னம்மா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்குப் போனாலே சொல்வார், “என்ன நீ, கட்டப்பை (அதயே, styleஆ சொன்னா, big shopper :P) எல்லாம் கொண்டுட்டு வர்ற, நல்லா சென்னைல இருந்து வந்தா, நல்ல பை கொண்டு வர வேண்டாமா? ஊர்ல இருந்த மாதிரியே தான் இருக்க, ஒரு மாற்றமும் இல்ல!” என்பது போன்ற வசனங்களை. Ginger, Guy, Kanmani :D Lab Friends “கட்டப்பையும் பை தான, அதுல என்ன இருக்கு? ஆமா...