வியாழன், டிசம்பர் 22, 2011

தொடர்கதை ---> பாகம் 5 ---> சிக்ன(க)ல்
(பாகம் நான்கு படிக்கவில்லையா? இந்த link உபயோகப்படுத்துங்க
தொடர்கதை ---> பாகம் 4 ---> சிக்ன(க)ல்படிச்சிட்டு, இங்க வாங்க .)


அன்று இரவு ஒன்பதரை மணி இருக்கும்.,


கிருஷ்ணாவும் சுவாதியும் வழக்கம் போல் சிறிது நேரம் text செய்து பேசிக் கொண்டு இருந்தார்கள்.


" நான் உன்ன short-ஆ கிருஷ்-ணு கூப்டவா கிருஷ்ணா? "


"இதெல்லாமா permission வாங்கிட்டு கூப்டுவ ? கூப்டு உனக்கு புடிச்ச மாத்ரி no probs "  type செய்து அனுப்பிய போது , கிருஷ் என்று சுவாதி வைத்த செல்லப் பெயர் " பாரத ரத்னா விருது " பெற்ற இன்பம் தந்திருந்தது கிருஷ்ணாவிற்கு.


"தூக்கம் வருது கிருஷ் , நாளிக்கு exam இருக்கு படிக்கணும் இன்னும் கொஞ்சம் morning எந்திச்சு தான்., good night..." 


"ஏ சுவாதி நாளிக்கு என் birthday, உனக்கு treat குடுக்கலாம்னு நெனைக்கிறேன் . evening நம்ம first meet பண்ண சிக்னல் கிட்ட இருக்ற Friend connect pizza hut- கு வரியா?? " 


"ம்ம்ம்ம்... ok. கிருஷ்ணா, நான் friend ஒருத்திய கூட கூட்டிட்டு வருவேன் பரவாலியா? "


" ஓகே பரவால " 


" நீ வரேன்னு சொன்னியே பிகு பண்ணாம அதுவே போதும் ... " மனதில் நினைத்தான் கிருஷ்ணா..


" ம்ம் நாளிக்கு உனக்கும் exam இருக்குல?? birthday-னு குஷில படிக்காம போய்டாத படிச்சிட்டு போ நல்லா.. ok good night..." எப்பொழுதும் பத்து மணிக்கு மேல் text செய்வதை தவிர்ப்பாள் சுவாதி., அதேபோல் அன்றும் சரியாக பத்து மணிக்கு உறங்கச் சென்றாள்.


"ok good night சுவாதி" , கிருஷ்ணாவும் மனம் இன்றி முடித்தான்.


மறுநாள் சுவாதியை சந்திக்கப் போகிறோம் என்ற குஷி கிருஷ்ணாவிற்கு., தூக்கம் இன்றி இரவு நெடுநேரம் என்ன பேசுவது , எப்படிப் பேசுவது., காதல் சொல்வது .. என்று ஒத்திகை பார்த்தான்.


பின்பு கட்டிலில் படுத்து கனவு கண்டவாறே எப்படியோ உறங்கிப் போனான்.


காலையில் எழுந்ததும் முதல் text சுவாதியின் happy birthday text ஆகத் தான் இருந்தது.


"all the best" சொல்லிக் கொண்டார்கள் இருவரும் பரிட்சைக்கு.
                 
                                                         ----------------------------


கல்லூரி முடிந்து கிருஷ்ணா வந்து காத்திருந்தான் சுவாதிக்காக friend connect pizza hut-ல்


சுவாதி தூரத்தில் பேருந்தில் இருந்து இறங்கி வருவதைப் பார்த்து ஓடிச் சென்றான்..


" sorry கிருஷ்ணா college-ல class முடிய கொஞ்சம் late ஆய்டுச்சு 
sorry and wish you a very happy birthday " என்று ஒரு பரிசுப் பொட்டலத்தைக் கொடுத்தால் சுவாதி.


" .ம்ம் இத இப்பவே பிரிக்கக் குடாது... வீட்டுக்கு போய்.. பிரிச்சுப் பாரு.."
புதிர் போட்டால் சுவாதி.
" அவளும் , காதல் சொல்ல பரிசு கொண்டு வந்திருப்பாளோ?? " கிருஷ்ணாவின் மனம் எட்டி குதித்தது

" ம்ம் சரி " என்று உள்ளே அழைத்துச் சென்றான் கிருஷ்ணா..


தன் தோழியை அறிமுகம் செய்து வைத்தாள் சுவாதி. பின்பு சிறிது உரையாடி pizza கொறித்து விட்டு , விடை பெற முயன்றாள்,  அரை மணி நேரத்தில் , நேரம் ஆகிறது என்று.


" ஏ இரு சுவாதி, ஒரு five minutes..please.. நான் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்..." கிருஷ்ணா சொல்ல,


தோழியை busstop செல்லச் சொல்லிவிட்டு , " என்ன கிருஷ்ணா??! "
தயங்கி சற்று பயத்தோடு கேட்டாள் சுவாதி..


சொல்ல முற்பட்டு , அவள் கண்களைப் பார்த்தான் கிருஷ்ணா..


ஊரில் உள்ள மின் விளக்குகள் எல்லாம் ஒன்றாய் எரிவது போல்., மின்னின சுவாதியின் கண்கள்...


அதன் பிரகாசத்தில் கிருஷ்ணாவின் கண்கள் கூசின..


சற்று தயங்கினான்... பதறினான் ..


                                                                     ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥


காதல் சொன்னானா கிருஷ்ணா???


சுவாதி என்ன பரிசு வைத்திருந்தாள்???


காத்திருங்கள் நாளை இரவு வரை !!

2 கருத்துகள்: