முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

November, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இனிய இதழ்கள்

அழகான பூக்கள் ஆனந்த நாட்கள்
மீண்டும் மீண்டும் நினைத்தால்..
மலரும் இரண்டுமே.....

சிறு கதை

குளிர்ந்த காற்று.....


அந்தப் பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த அவளின் கண்களின் ஓரம் வெள்ளமாய் கண்ணீர் பெருகி வந்தது. நடந்ததை மீண்டும் நினைத்துப் பார்த்தாள்.
தான் அவசரப்பட்டுவிட்டோமோ என்று தோன்றியது. வீட்டை விட்டு வெளியேறியது தவறு என்று தோன்ற, அவள் தேம்பி அழ ஆரம்பித்தாள்.
இருப்பினும், தன் தந்தையின் மீது அவளுக்கு கோபம் அதிகமாகவே வந்தது.
குளிர்ந்த காற்று அவள் கோபம் தணிக்க முயன்றது. ஆனால் காற்றுக்கும் தோல்வியே!
நடந்ததை நினைத்து பார்த்தாள்......
"எவ்வளவு கம்மியா mark வாங்கியிருக்க? 1130! இந்த மார்க்குக்கு உனக்கு எவன்
medical seat தருவான்? .... என் கனவுல மண்ண போடுட்டியே." "அப்பா.. என்னால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணேன், இவ்வளவு தன்பா முடிஞ்சுது என்னால please... புரிஞ்சுக்கோங்கப்பா..."(இது பொண்ணு)
"என்னமோ போ! இனி உனக்கு படிக்க என்னால செலவு பண்ண முடியாது,
உன் மார்க்குக்கு எவன் ஓசில சீட் தரானோ , அந்த காலேஜ்ல போய் நீயா சேந்து படிச்சுக்கோ,இல்லன்னா  போ எங்கயாவது..!"
"அப்பா..... அப்படி..."
"நிறுத்து, நான் உனக்கு அப்பனில்ல"
"அப்பா..."