முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யார் சொன்னது? (அழகின் ரகசியம்)

Beauty வேறு யாராகவும் நான் இருக்கமாட்டேன்! நொறுங்கிப் போகச் செய்தாய், நன்றாக இல்லை என்றாய், ஆனால், யார் நீ கணிப்பதற்கு, நீயே குறைகளோடு இருக்கையில்? உன்னிடம் நிறைய இருக்கிறது, நீ மாற்றிக் கொள்ள வேண்டியது! ஆனால், நான் என வருகையில், வேறு யாராகவும் நான் இருக்கமாட்டேன்! நான் அழகு தேவதை அல்ல, ஆனால் நான் அழகி தான்! உனக்கு உரிமை உண்டு, அழகான வாழ்க்கை வாழ! யார் சொன்னது? யார் சொன்னது, நீ முழுமை இல்லை என்று? யார் சொன்னது, நீ லாயக்கில்லை என்று? யார் சொன்னது, நீ மட்டும் தான் காயப்படுத்துகிறாய் என்று? நம்பிடு என்னை, அழகின் விலை அதுவே, யார் சொன்னது நீ ஒயிலாக இல்லை என்று? யார் சொன்னது நீ அழகாக இல்லை என்று? யார் சொன்னது? இது சற்று வேடிக்கை தான், வேறு எதுவும் வேடிக்கையாக இல்லை, நீ மட்டும் வேடிக்கையோ? நீ புரியவை உன்னை அவர்களுக்கு! அவர்கள் உண்மையை மறைப்பார்கள், அது வெளிச்சத்தைக் காணாத, ஒரு கலை போன்றது! உன்னை விண்மீன்களுக்கு கீழே வைத்து, வானத்தைத் தொட, விடவேமாட்டார்கள்! நான் அழகு தேவதை அல்ல, ஆனால் நான் அழகி தான்! உனக்கு உரிமை உண்டு, அழகான வாழ்க்கை வாழ! ய

அப்பாக்குட்டிக்குப் பிறந்த நாள்!

அப்பாக்குட்டியும் நானும்! என்னுடைய பதிவுகளை தொடர்ந்து வாசிப்பவர்களுக்குப் புரிந்திருக்கும், இது எதைப் பற்றிய பதிவு என்று. ஆம், இன்று அப்பாக் குட்டியின் பிறந்த நாள். அப்பாக் குட்டி? அது யார்? தெரியாதா உங்களுக்கு? அட, அது என்னுடைய அப்பா! சிறுவயதில் என்னை அவர் அப்படித் தான் அழைப்பார். இப்போது நான் பெரியவள் ஆனதும் அப்படி அழைப்பதில்லை! :( அதனால் என்ன? இப்போது நான் அவரை பதிலுக்கு அப்பாக் குட்டி என்று அழைக்கிறேனே! இன்று என் அப்பாக் குட்டிக்கு பிறந்தநாள், அதே போல, என்னுடைய இரண்டு வகுப்புத் தோழிகளுக்கும் பிறந்த நாள்! :) ஒரு மிட்டாய் கிடைத்தாலே ஆனந்தம், இதில் இன்று "கண்ணா, இன்னொரு லட்டு தின்ன ஆசையா?", என்பது போல, நிறைய மிட்டாய் கிடைக்கப் போகிறது! :) மேலும் இன்று என் கல்லூரியில் ஆண்டு விழா வேறு! கேட்கவா வேண்டும், அப்பா அம்மா தம்பி எல்லோரும் வருகிறார்கள், ஒரே ஆனந்தம் தான் இன்று! இத்தனை நாட்களாக, புத்தகம், சோறு, உறக்கம், இது மட்டுமே செய்து கொண்டிருந்த எனக்கு மாற்றாக, கொஞ்சம் கலை நிகழ்ச்சி, அற்புதமான ஆண்டு விழா உணவு, அப்பா, அம்மா, தம்பியோடு சேர்ந்து இருப்பது என்று நல்ல நல்ல நிக

நேரமே இல்லையே!

யாராவது என்னைத் தேடினீர்களா? இல்லையா? :( ஆமாவா? :) சரி, தேடினீர்கள் என்றால் உங்களுக்கு ஏன் இந்த வாரம் எதுவும் எழுதவில்லை என்று ஒரு செய்தி. நிறைய படிக்க வேண்டி இருக்கிறது! இரண்டு வாரம் விடுமுறை விட்டார்கள் அல்லவா கல்லூரிக்கு, ஏன் என்று தான் உங்களுக்குத் தெரியுமே. இப்போது, எல்லாம் சேர்த்து நிறைய படிக்க வேண்டி உள்ளது. ஆக, இன்னும் ஒரு பத்து நாட்களுக்கு மேல், நான் பதிவு போட வர இயலாது. புரிகிறது, "நீ எல்லாம் எழுதலனு யாருமா கேட்டா", இப்படி நீங்கள் சொல்வது எனக்குக் இங்கே வரை கேட்கிறது. இருந்தாலும், எழுதுவது என்று வந்துவிட்டால், எழுதிவிடவேண்டும் தானே???!!! (தலை சுத்துதோ?) சரி, இதனால், கம்பெனி சொல்ல வருவது என்ன என்றால், இன்னும் சிறிது நாட்களுக்கு பதிவுகள் இட நேரம் இருக்காது என்று நினைக்கிறேன். அவ்வளவே. சரி போய் நீங்க பழைய பதிவ எல்லாம் சமத்தா படிங்க பாப்போம். :)