ஞாயிறு, ஏப்ரல் 28, 2013

யார் சொன்னது? (அழகின் ரகசியம்)

Beauty

வேறு யாராகவும் நான் இருக்கமாட்டேன்!

நொறுங்கிப் போகச் செய்தாய்,
நன்றாக இல்லை என்றாய்,
ஆனால், யார் நீ கணிப்பதற்கு,
நீயே குறைகளோடு இருக்கையில்?
உன்னிடம் நிறைய இருக்கிறது,
நீ மாற்றிக் கொள்ள வேண்டியது!
ஆனால், நான் என வருகையில்,
வேறு யாராகவும் நான் இருக்கமாட்டேன்!

நான் அழகு தேவதை அல்ல,
ஆனால் நான் அழகி தான்!

உனக்கு உரிமை உண்டு,
அழகான வாழ்க்கை வாழ!

யார் சொன்னது?
யார் சொன்னது, நீ முழுமை இல்லை என்று?
யார் சொன்னது, நீ லாயக்கில்லை என்று?
யார் சொன்னது, நீ மட்டும் தான்
காயப்படுத்துகிறாய் என்று?
நம்பிடு என்னை, அழகின் விலை அதுவே,
யார் சொன்னது நீ ஒயிலாக இல்லை என்று?
யார் சொன்னது நீ அழகாக இல்லை என்று?
யார் சொன்னது?

இது சற்று வேடிக்கை தான்,
வேறு எதுவும் வேடிக்கையாக இல்லை,
நீ மட்டும் வேடிக்கையோ?
நீ புரியவை உன்னை அவர்களுக்கு!
அவர்கள் உண்மையை மறைப்பார்கள்,
அது வெளிச்சத்தைக் காணாத,
ஒரு கலை போன்றது!
உன்னை விண்மீன்களுக்கு
கீழே வைத்து,
வானத்தைத் தொட,
விடவேமாட்டார்கள்!


நான் அழகு தேவதை அல்ல,
ஆனால் நான் அழகி தான்!


உனக்கு உரிமை உண்டு,
அழகான வாழ்க்கை வாழ!


யார் சொன்னது?
யார் சொன்னது, நீ முழுமை இல்லை என்று?
யார் சொன்னது, நீ லாயக்கில்லை என்று?
யார் சொன்னது, நீ மட்டும் தான்
காயப்படுத்துகிறாய் என்று?
நம்பிடு என்னை, அழகின் விலை அதுவே,
யார் சொன்னது நீ ஒயிலாக இல்லை என்று?
யார் சொன்னது நீ அழகாக இல்லை என்று?
யார் சொன்னது?

யார் சொன்னது,
உனக்குத் திறமை இல்லை என்று?
யார் சொன்னது, உனக்கு மேன்மை இல்லையென்று?
யார் சொன்னது, நீ திரையில் மின்ன முடியாதென்று?
நான் சொல்வதைக் கேள்!
நான் சொல்வதைக் கேள்!
யார் சொன்னது, நீ தேறமாட்டாய் என்று?
யார் சொன்னது, நீ உன்னதம் இல்லையென்று?
யார் சொன்னது? யார் சொன்னது?
சொல்லாயோ என்னிடம்?
ஆம், யார் சொன்னது?

யார் சொன்னது?
நீ அழகில்லை என்று யார் சொன்னது?

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

இது who says என்னும் ஒரு ஆங்கிலப் பாடலின் மொழி பெயர்ப்பு. சரியாக இருக்கிறதா என்று தெரியவில்லை. அந்தப் பாடல் போல அதே இசையில் பாட இயலாது, ஆனால், அதே அர்த்தம் வருமாறு எழுதி இருக்கிறேன்.

எனக்கு மிகவும் பிடித்தது இந்தப் பாடலைக் கேட்ட உடன். எல்லோரும் குறை தான் சொல்வார்கள், நீ அழகில்லை என்பார்கள், ஆனால், உண்மையில் புற அழகை விட, அக அழகே உயர்ந்தது - என்பது போன்ற பொருள் வருவதாக எனக்குப் புரிந்தது இந்தப் பாடலில். சரியாகப் புரிந்து கொண்டேனா என்று தெரியவில்ல்லை.

யார் என்ன சொன்னாலும், நாம் நமக்குப் பிடித்ததை, சிறப்பாகச் செய்து வந்தால்,
நம்மீது நாம் நம்பிக்கை வைத்து, ஊக்குவித்து, நம்மை நாமே தட்டிக் கொடுத்து வாழ்ந்து வந்தால், வெற்றி நிச்சயம்!

உலகின் பார்வைக்கு அழகாகத் தோன்ற, அழகு தேவதையாய் இருக்க அவசியம் இல்லை, நமக்கு நாம் அழகியாக, அழகான செயல்கள் செய்பவராய் இருந்தால் போதும், சரி தானே?

அப்படித் தானே உங்கள் அம்மாவும், என் அம்மாவும் அழகாக இருக்கிறார்கள்?

10 கருத்துகள்:

 1. /// நாம் நமக்கு பிடித்ததை... ///

  ரசித்து மொழி பெயர்ப்பு செய்து உள்ளீர்கள்...

  சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. நல்ல கருத்துக்கள்.. நம்மின் முதல் காதலன், முதல் ரசிகன் நாமாகத்தான் இருக்க வேண்டும்.. தன்னம்பிக்கைக்கு அச்சாரம் இந்த சுய ரசிப்புத்தன்மை தான்.. வாசிக்கும் போதே நல்ல ஊக்கம் கொடுக்கும் பாடல்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம், நன்றாக இருந்தது கேட்கும் போது, அதனால் தான் மொழி பெயர்த்தேன். நன்றி.

   நீக்கு
 3. இந்த பதிவில் நீங்கள் போட்டிருக்கும் ஹெலென் கெல்லரின் வாசகத்தை பார்க்கும் போது, கீட்ஸ் “Ode on an Greecian Urn" என்னும் பாடலில் சொல்லிய "Heard melodies are sweet, Unheard melodies are sweeter" என்று சொன்னது தான் ஞாபகம் வருகிறது.. மேம்போக்காக பார்த்தால் சாதரணமாக இருக்கும் இது, கொஞ்சம் யோசித்துப்பார்த்தல் மிக மிக ஆழமான கருத்தாக இருக்கிறது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், சாதாரணமாக தெரியும் பல விஷயங்கள், உற்று நோக்கினால் மிகவும் சிறப்பானவை என்பது புரியும்.

   நீக்கு
 4. கவிதை அற்புதம் !! அழகான வரிகள். மொழிபெயர்ப்பும் உறுத்தவில்லை !!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி. இந்தக் கவிதை முழுவதுமே மொழிபெயர்ப்பு தான்.
   நன்றி :)

   நீக்கு
 5. நல்லா இருக்கு கண்மணி. ஆனால் ஆங்கில பாடல்களை அப்படியே வார்த்தை மாறாமல் மொழிபெயர்க்க வேணுமா என்ன. கருத்து அந்த பாடல் உடையதாய் இருந்தாலும் நம் பாணியில் எழுதலாம்ல. ஒருமுறை அதை முயற்சி செய்து பாரேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம்ம் சரி முயற்சி செய்து பார்கிறேன் :) நன்றி!

   நீக்கு
 6. பெயரில்லா7/24/2014 2:37 முற்பகல்

  Selena gomez who says thane
  super translation

  பதிலளிநீக்கு