முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பட்டணம் போனேனா....

அது ஒரு பெரிய ”கடை”, கடை என்று சொல்வது பொருத்தமாக இருக்காது தான், ஆனால் பாருங்களேன், “மால்” என்பதற்குத் தமிழில் எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை எனக்கு! அதனால், கடை என்றே வைத்துக் கொள்வோம். வெளியில் இருந்து பார்த்தாலே ஒரு பாதி நாள் பார்க்கலாம் போல, அவ்வளவு பெரி....ய கடை! வெளியே வந்து நின்றது ஒரு பெரிய கார், உள்ளே இருவர் மட்டும் தான் இருந்தார்கள். ஓட்டுனரையும் சேர்த்தால், மூன்று பேர்! “கார பார்க்கிங்ல விட்டுடுங்க”, சொல்லியவாரே இறங்கினான் அவன். வயது ஒரு முப்பதிற்கு உள் தான் இருக்கும். இறங்கியவன், கையைப் பிடித்து உடன் வந்த தன் வயதான அம்மாவை இறக்கிவிட்டான். இருவரும் கை பிடித்தவாறு அந்தப் பெரிய கடையினுள் நுழைய நடந்தார்கள். அந்த அம்மா இது தான் முதல் முறை பட்டணம் வந்திருப்பார் போலும், ஒவ்வொரு ”இன்ச்சை”யும் சற்று வியப்பாகவே பார்த்துக் கொண்டு இருந்தார். ”இது என்ன, அது என்ன..”, என்று தன் மகனிடம் குழந்தையைப் போலவே கேட்டுக் கொண்டு இருந்தார். அவனும், “அதுவாமா, அது வந்து...” என்று சிறுவயதில் தன் அம்மா தனக்குச் சொல்லித் தந்ததைப் போலவே மிகவும் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டு இ

பழசும் புதுசும்!

எப்போதுமே பழைய பொருட்களுக்கு ஒரு மவுசு உண்டு! அப்படித்தானே? பழைய நாணயங்களை சிலர் விரும்பிச் சேகரிப்பார்கள், சிலர் பழைய கலைப் பொருட்களாக வாங்கிக் குவிப்பார்கள், இன்னும் சிலருக்கு பழைய மாடல் இரு சக்கர வாகனங்கள் வாங்கும் பழக்கம் கூட இருக்கும்! இந்த வரிசையில் சேரும் இன்னும் ஒரு விஷயம் பழைய பாடல்கள். ”பழைய பாடல்கள் போல வருமா இப்போது இருக்கும் பாடல்கள் எல்லாம்”, என்று நிறைய பேர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். பழைய பாடல்களா புதியனவா என்று சண்டை போடுபவர்கள் கூட உண்டு! ஆனால், எனக்கு புதிய பாடல்கள் பிடிக்குமா? பழைய பாடல்களா? இப்படி நான் யோசித்துக் கொண்டு இருந்தேன் நேற்று இரவு படுத்துக் கொண்டே. எனக்கு புதிய பாடல்கள் மீது, “அட, ச, என்ன இது, இப்படி ஒரு பாட்டா!”, என்று ஒரு போதும் தோன்றியதில்லை. சில பாடல்கள் அவ்வளவாக விரும்பிக் கேட்காவிட்டாலும், வெறுத்ததில்லை ஒரு போதும். அதே போல, பழைய பாடல்கள், அதிலும் அப்படித் தான், சில பாடல்கள் விரும்பிக் கேட்டாலும், சிலவற்றை விரும்பிக் கேட்காதபோதும், வெறுப்பதில்லை! பெரும்பாலும், பழைய பாடல் என்றதும், என் நினைவுக்கு வருவது, “காதலிக்கக நேரமில்லை, காதலிப்பார்

அவர்களும் இவர்களும்!

அவர்களுக்கு சொல்லத் தெரிந்து இருந்தது, இது தான் "வேண்டும்" என்று, ஆனால், பாவம், "வேண்டியதற்கும், விருப்பமானதற்கும்" வித்தியாசம் தெரிந்திருக்கவில்லை அவர்களுக்கு! விரும்பியதைத் தானே "வேண்டும்" என்று நினைப்போம் என்கிறீர்களா? அப்படி அவசியம் இல்லை என்கிறார்கள் அவர்கள்! விரும்பியது உறுதியாகக் கிடைக்கும் என்று ஒரு நிச்சயம் இல்லாத போது, வீணாக முயன்று தோற்பதை விட, உறுதியாகக் கிடைக்கும் என்பதையே தேர்ந்தெடுக்க வேண்டுமாம். அது தான் அவர்களுக்கு "வேண்டியது", விரும்பியது உறுதியாகக் கிடைக்காது எனும் போது, அவர்கள் அடைய நினைக்கும் "வேண்டியது"! "முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்" என்பதெல்லாம் சொல்லி, இவர்கள் வாதாடினாலும், புண்ணியம் இல்லை!  விரும்பியதை விட்டு வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள்! இவர்களுக்கு  ஒன்றும் எதிர்ப்போ, மறுப்போ இல்லை! தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்! ஆனால், ஆசையோடும், நம்பிக்கையோடும், முடியும் என்று நினைத்து ஒரு புத்துணர்வோடு முன்னேறும் இவர்களை ஏன் தடுக்கிறீர்கள்? தனக்கு விருப்பமான வாழ்வை நோக்கி ஓடிக

ரெட்டை ஜடை வயசு!

அப்போது ஒரு எட்டு அல்லது பத்து வயது இருந்ததாக நினைவு! இப்போதெல்லாம் இந்த வயதில் எல்லா பெண் பிள்ளைகளும் அழகாக ”பாப் கட்” வைத்துவிடுகிறார்கள். ஆனால், அப்போது எனக்கு நீளமான முடி! அழகாக ரெட்டை ஜடை - ”ரிப்பன்” (ஊதா கலர் இல்ல! ;) :) ) வைத்துப் பிண்ணி போட்டு விடுவார் என் அம்மா! ஆனால், அது எப்படியும் பள்ளியில் இருந்து சாயங்காலம் வீடு வருவதற்குள், பாதி பிரிந்துவிடும் பின்னல். “அம்மா, ஒழுங்கா ஜட போட்டு விடுங்கம்மா, ”தீபா” எல்லாம் ஜட போட்டு வர்றா, அவளுக்கு மட்டும் பிரியவே மாட்டேங்குது! என் ஜட மட்டும் பிரிஞ்சு போகுது”. இப்படி தினமும் காலையில் கிளம்பும் போது என் வீட்டின் பின் வாசலில் உட்கார்ந்து, அம்மாவிடம் ஒரு அதட்டல் போடுவேன்! அம்மா சொல்வார், “இரு ஒரு நாள் முடிய வெட்டி விடறேன்”, என்று! உடனே நான், “பொறாம உங்களுக்கு, இப்டி நீளமா முடி இல்லனு!”. அந்த ரெட்டை ஜடை என்றால் அத்தனை பிடிக்கும் எனக்கு! எல்லாருக்குமே பிடிக்கும் தானே நீளமான முடி என்றால்! ஆனால், என் அம்மாவுக்கோ, என் முடியை எப்படியாவது வெட்டிவிட வேண்டும்! என்னடா? எந்த அம்மாவுக்காவது நீளமாக இருக்கும் முடியை வெட்

நானும் நார்த் இந்தியனும் #4

இது ஒரு தொடர் பதிவு! முந்தைய பதிவை இங்கே படிக்கலாம் -  நானும் நார்த்  இந்தியனும்! #1  #2   #3 [ நீண்ட நாட்களாக எழுத நேரமே அமையவில்லை, கல்லூரி இறுதி ஆண்டு என்பதால், அதிகம் படிக்க வேண்டி இருந்துவிட்டது. இருந்தாலும் எழுதாமல் இருக்க மனமே இல்லை. சரி இன்றாவது எழுதிவிட வேண்டும் என்று உட்கார்ந்துவிட்டேன், இதோ ஆரம்பித்தும்விட்டேன்! முந்தைய பதிவுகள் எல்லாம் படித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன், இல்லை என்றால் மேல் உள்ள இணைப்பில் சென்று படித்துவிட்டுத் தொடருங்கள், அப்போது தான் புரியும் :) ] என்ன சொல்லிக் கொண்டு இருந்தேன் சென்ற பதிவில்.... ஆ, காதல் கல்யாணம் பற்றி எல்லாம் நாங்கள் பேசியதைச் சொல்லிக் கொண்டு இருந்தேன் அல்லவா? தொடரலாம். என் தோழியும் நானும் நிறைய பேசியதுண்டு, நான் சொன்னது போல, ஆராய்ச்சி குறித்து, கலாச்சாரம் குறித்து, குடும்பம் பற்றி இப்படி என்னெனவோ! அதில் அடக்கம், இந்தக் காதலும் கல்யாணமும், இதை இறுதியாகச் சொல்லி இந்தத் தொடர்பதிவை முடிக்கலாம் என்று நினைத்தேன்! ஆக, இது தான் இறுதி அத்யாயம். (இதுக்கு மேல இந்த மொக்கைய நீங்க படிக்க வேண்டியதில்ல, அய் ஜாலி! :) :) ) இங்கு நாங்