புதன், அக்டோபர் 23, 2013

அவர்களும் இவர்களும்!

அவர்களுக்கு சொல்லத் தெரிந்து இருந்தது, இது தான் "வேண்டும்" என்று, ஆனால், பாவம், "வேண்டியதற்கும், விருப்பமானதற்கும்" வித்தியாசம் தெரிந்திருக்கவில்லை அவர்களுக்கு!

விரும்பியதைத் தானே "வேண்டும்" என்று நினைப்போம் என்கிறீர்களா? அப்படி அவசியம் இல்லை என்கிறார்கள் அவர்கள்!

விரும்பியது உறுதியாகக் கிடைக்கும் என்று ஒரு நிச்சயம் இல்லாத போது, வீணாக முயன்று தோற்பதை விட, உறுதியாகக் கிடைக்கும் என்பதையே தேர்ந்தெடுக்க வேண்டுமாம். அது தான் அவர்களுக்கு "வேண்டியது", விரும்பியது உறுதியாகக் கிடைக்காது எனும் போது, அவர்கள் அடைய நினைக்கும் "வேண்டியது"!"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்" என்பதெல்லாம் சொல்லி, இவர்கள் வாதாடினாலும், புண்ணியம் இல்லை! 

விரும்பியதை விட்டு வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள்! இவர்களுக்கு  ஒன்றும் எதிர்ப்போ, மறுப்போ இல்லை! தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்!

ஆனால், ஆசையோடும், நம்பிக்கையோடும், முடியும் என்று நினைத்து ஒரு புத்துணர்வோடு முன்னேறும் இவர்களை ஏன் தடுக்கிறீர்கள்?

தனக்கு விருப்பமான வாழ்வை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் இவர்களை, முட்டாள்களாகப் பார்க்கிறீர்கள்?

எல்லோரும் செய்வதால், அந்தக் காரியம் ஒன்றும் உயர்ந்ததும் அல்ல, யாரும் செய்யாததால், இவர்கள் செய்யும் காரியம் மோசமானதும் அல்ல!

"அவர்கள்" செய்வது என்ன, தவறான செயலா? இல்லை இல்லை, அப்படி இல்லை. ஆனால், "இவர்கள்" செய்வதும் சரியானது தானே!

இருவர் சொல்வதும் சரியாக இருக்கும் போது, எதை ஏற்றுக் கொள்வது?

அவர்கள் சொல்வதையா? இவர்கள் சொல்வதையா? 

என்ன இது, இப்படி ஒரு சிக்கல்!

அவர்களுக்குச் சொல்கிறேன்! உங்களுக்கு "விரும்பியதை" விட்டு, வேறு தான் வேண்டுமா? விரும்பியது கிடைக்காமல் போக வாய்ப்பு இருக்கும் போது!?
சரி, முயல வேண்டாம்! எடுத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு வேண்டியதையே!

ஆனால், பாவம் இவர்களை விட்டுவிடுங்கள்! இவர்களின் விரும்பியதை வேண்டும் ஆசையை, பாவம் அழித்துவிடாதீர்கள்!

இவர்கள் விரும்பியது, சரியானது தானே? அதை ஒப்புக் கொள்கிறீர்கள் தானே? பிறகென்ன? விட்டுவிடுங்கள்! இவர்கள் முயலட்டும், முடிந்தால், அடையட்டுமே?

முடியவில்லையா? அதுவும் இவர்கள் பாடு, இவர்கள் வாழ்வு! பார்க்கட்டும், இவர்களுக்குப் பிடித்ததை பிடித்தது போல வாழ்ந்து பார்க்கட்டும்!

விட்டுவிடுங்கள்! இவர்கள் தோற்கட்டும், இல்லை வெல்லட்டும், எது நடந்தாலும், இரண்டில் எது நடந்தாலும், பொறுப்பு இவர்களது! விட்டுவிடுங்கள்!

அவர்கள் அவர்களுக்கு வேண்டியதை அடையட்டும், இவர்கள் விரும்பியதை அடையட்டும்.இவர்கள் அவர்களைக் குறை சொல்வதும், அவர்கள் இவர்களை குற்றம் சொல்வதும், வேண்டாமே!

அவர்களும் இவர்களும், அவரவரைத் தொந்தரவு செய்யாமல், நல்லதே செய்து, நல்லதே நடந்தால், நலமே!

நீங்கள் இதில் யார்? அவரா? இவரா? சொல்லிவிட்டுத் தான் போங்களேன்?

---------------------------------------------------------------------------------------------------

புரியுது, உங்க மனசுல என்ன நினைகிறீங்கன்னு புரியுது! என்னடா இந்தப் பொண்ணு சொல்ல வருது?  வெயில் அடிக்காம எங்க ஊர்ல மழை வந்ததுல, என்னவோ ஆகிடுச்சு போல! நீங்க போங்க, அடுத்த வேலையப் பாருங்க! 

6 கருத்துகள்:

 1. குழப்பம் அதிகமாக இருக்கும் போலிருக்கே...! ஹிஹி....

  பதிலளிநீக்கு
 2. Enna pozhuthu mudiya poguthey innum onnum nadakalayae nu parthen... dhang youu :P
  Neenga solrathum oru vagai la kurai solrathu nu eduthukalama ?
  unga kulla oru kutti Kamala hassan irukarunga, sathiyama :P

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :) நானும் என்னடா யாரும் ஒன்னுமே கருத்து சொல்லலயேனு பாத்தேன். சொல்லிட்டிங்க! குத்தமா? நானா? என்ன இப்படி சொல்லிட்டிங்க? இதுக்கு பேரு மனக்குமுறல், இல்ல, பொலம்பல், இல்ல சும்மா ஒரு கருத்துனு வச்சுக்கோங்க!

   கமல ஹாசம் ஆ? நானா? நன்றி நன்றி :)

   உங்களுக்குள்ள விமலா இருக்கப்போ, நமக்குல்ல கமல் இருக்கதுல, என்ன இருக்கு, தீபக் ஜி! :)

   நீக்கு
 3. ரொம்பவே குழப்பி விடறிங்களே!

  பதிலளிநீக்கு
 4. எல்லோரும் செய்வதால், அந்தக் காரியம் ஒன்றும் உயர்ந்ததும் அல்ல, யாரும் செய்யாததால், இவர்கள் செய்யும் காரியம் மோசமானதும் அல்ல! விட்டுவிடுங்கள்! இவர்கள் தோற்கட்டும், இல்லை வெல்லட்டும், எது நடந்தாலும், இரண்டில் எது நடந்தாலும், பொறுப்பு இவர்களது! விட்டுவிடுங்கள்!

  பதிலளிநீக்கு