முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

September, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நானும் அன்னையே..

உன் பனிக்கட்டி பார்வையில்,
நனைவதை காட்டிலும் வேறு,
நேசம் தேவை இல்லை.,

உன் இமை உள்ளே,
நான் தெரிய,
வேறு பிம்பம் தேவை இல்லை.,

இதழ் உள்ளே இனிக்கும்,
நீ இமை திறந்து பார்த்தாலே..

உலகம் மறந்து நீ தூங்க,
உன் உறக்கம் ரசிக்க,
உறங்காமல் உறைந்திருப்பேன்..

உண்மை சொல்லவா...
உன்னை இதயம் சுமப்பதால்,
உணர்கிறேன் தாய்மையை..!!!