முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இது ஒரு சிக்கன் கதை!

சிக்கன்! அசைவ விரும்பிகள் எல்லோருக்குமே பிடித்த, மிக மிகப் பிடித்த ஒன்றாக இருக்கும் இந்தச் சிக்கன்!? எப்போதும் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு மீன் சமைக்கும் வாசம், அற்புதமாகவும், சைவம் சாப்பிடுபவர்களுக்கு அது “அய்யோ... என்ன கருமம்!”, என்பது போலவும் இருக்கும்! இதில் நான் முதல் வகை, அசைவம் சாப்பிடும் வகை! என் நண்பர்கள் உறவினர்களிடம் கேட்டால் தெரியும், எனக்கு எவ்வளவு பிடிக்கும் அசைவ உணவு என்பது! எனக்கு ஒரு அத்தை இருக்கிறார், அவர் வீட்டிற்குச் சிறுவயதில் சென்ற போது, ஒரு முறை, ஒரு அரைக் கிலோ மீனை ஒரே ஆளாகச் சாப்பிட்டேனாம்! ”புரட்டாசி மாதம், அசைவம் சாப்பிடக் கூடாது, வெள்ளி, செவ்வாய் பிறகு சனி, அசைவம் சாப்பிடக் கூடாது”, இப்படி என் அம்மா போடும் விதிகள் எல்லாம், அப்பா... எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது! அதென்னவொ, அசைவ உணவின் ருசி அத்தனை அருமை! (இதைத் தான் பசிக்கு உண்ணாமல் ருசிக்கு உண்பது என்பார்களோ???) என் அப்பா அசைவம் சாப்பிடமாட்டார் அதிகம், நானும் அம்மாவும் தான், வற்புறுத்தி சாப்பிட வைப்போம். அவர் உடனே சொல்வார், “ஊன் வளர்க்க ஊன் உண்ணக் கூடாது”, என்றெல்லாம். என்னையு

ஓட ஓட ஓட தூரம் கொறையல!

கொஞ்சம் மூச்சுத் திணறல், இழுத்து சுவாசித்தேன் ஒரு முறை, மற்றொரு முறை, கொஞ்சம் லேசாக இருந்தது மனசுக்கு. எதையும் நினைக்கக் கூடாது, வேண்டாம், நினைக்கவே கூடாது! இப்படி நான் நினைக்க நினைக்க அந்த நினைப்பு அதிகமாகிக் கொண்டே போனது தான் மிச்சம்! என்ன அது? அது இங்கே அவசியமற்ற ஒரு விசயம். சொல்ல அவசியமில்லை. எதோ ஒரு மனக்குறை, உங்களுக்கு நேற்று இருந்ததே? இல்லை போன வாரம் இருந்ததே? இல்லை, இப்போது இருக்கிறதே? அதே போல ஒரு மனக்குறை. யாரிடமாவது சொல்லலாம் என்றால், ”இது ஒன்றும் அவ்வளவு பெரிய மனக்குறை எல்லாம் இல்லை”, என்று குரல் கொடுக்கிறது இந்த அறிவு. எப்போதும் இந்தப் போராட்டம், “இப்படி ஆகிடுச்சே, இது நாம நெனச்ச மாதிரி நடந்து இருக்கலாமே, ச, இப்படி ஆகிடுச்சே??” மனசு அடித்துக் கொள்வதும்.  அது அப்படித் தான் நடக்கும் என்று ஏற்கனவே அறிவு கணித்து வைத்திருந்த ஒன்று தான் இது என்பதால், “இது நான் ஏற்கனவே எதிர்பார்த்தது தானே?”, என்று அறிவு அலட்டிக் கொள்ளாமல் இருப்பதும், வாடிக்கையாகிவிட்டது. மனசே இல்லமால் இருந்தால் என்ன? அதென்ன மனசு? அறிவு? ரெண்டுக்கும் என்ன தான் வித்தியாசம்?