முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

December, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் காதல் காலியானதே! நன்றி - 2012!

கவிதை எழுதுவதற்காகவே இந்தக் "கண்மணி அன்போடு" துவக்கிய நான், சில பத்திகள் எழுதவும் கற்றுக் கொண்டேன்.

எழுதிய கவிதை எல்லாம், கவிதை என்று சொல்லும்படி இருக்காது, உரைநடையில் கொஞ்சம் எதுகை மோனை சேர்த்த, உடைத்துப் போட்ட வாக்கியங்கள் என்று சொல்லலாம்.
முதலில் நான் நினைத்ததுண்டு, காதல் கவிதைகள், கதைகள் மட்டும் தான் எழுத முடியும் என்று. யோசித்து யோசித்து படங்களில் பார்த்ததெல்லாம், தெருவில் பார்த்ததெல்லாம், கற்பனையில் எட்டியதை எல்லாம், பிறகு எனக்குத் தோன்றியதெல்லாம் (வயதுப் பெண் ஆயிற்றே) சேர்த்து எழுதிப் பார்த்தேன் காதலோடு கவிதைகளும் கதைகளும், ஒரு கட்டத்துக்கு மேல் இதற்கு மேலும் என்னடா எழுதுவது என்றாகிப் போனது! காதல் காலியாகிப் போனது! நீங்கள் முதலில் இருந்து என் வலைப்பூவைப் பார்த்தால் புரியும், ஒரு கட்டத்துக்கு மேல் என் காதல் வற்றிப் போனதை!
சிறுபிள்ளை பாருங்கள், தெரியவில்லை எனக்கு காதலையும்  தாண்டி எழுத கோடி இருக்கிறதென்று, அந்தக் கோடியில் சிறு துளியை, காட்டிக் கொடுத்த இந்த ஆண்டிற்கு நன்றி!
இப்போது படிக்கிறோம், தொழில்நுட்பக் கல்வி (உயிரியல் தொழில்நுட்பம்) நான்கு ஆண்டு முடிந்த பிறகு, என்ன …

தமிழ் உங்கள் தாய் மொழியா? உறவாட வாருங்கள்!

தமிழுக்கும் சமூக ஒற்றுமைக்கும் மாற்றத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஒரு விழா நடக்க இருக்கிறது!

இதில் கலந்து கொள்ள, நீங்கள் பெரிய எழுத்தாளராக, தொழிலதிபராக, சமூக சேவகராக, பணம் படைத்தவராக, இப்படி எதுவும் தேவை இல்லை.

தமிழ் புரியுமா? தமிழ் தெரியுமா? தமிழரா? அது போதும்!

சமூக மாற்றம் ஒன்று கொண்டு வர விரும்புகிறீர்களா? உறுதியாக நீங்கள் கலந்து கொள்ள வேண்டிய விழா இது!

"  ஒன்றுபட்ட ஒரு நல்ல சமூகத்தை அமைக்க  நீங்கள் விரும்புவீர்களேயானால், உங்கள் பார்வையை மாணவர்களின் பக்கம் திருப்புங்கள். உங்கள் கரங்களை கொடுத்து அவர்களை வலுப்படுத்துங்கள் என்ற சிந்தனையை உலகிற்கு வெளிப்படுத்துவதே ஆகும்."
இது தான் இந்த விழாவின் முக்கிய நோக்கமாக இருக்கிறது!
இதில் தொழிற்களம், தமீழ் மீட்சி இயக்கம்  போன்ற இன்னும் பல அமைப்புகள் ஊடகங்களாக செயல்படுகின்றன.

நிகழ்ச்சி அமைப்பு : 

நாள்      :  டிசம்பர் 30, 2012 ஞாயிற்று கிழமை 
நேரம்   :   மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை 
இடம்   :   திருப்பூர் குமார் நகர், 
                 ஶ்ரீ கருப்பராயன் சுவாமி கோவில் திருமண மண்டபம்,                  திருப்பூர்.
இந்த விழாவில் "தாய…

அப்பாக்குட்டிக்கு!

அப்பாக்குட்டி,

சிறுவயதில் இருந்தே, "அம்மா" புடிக்குமா? "அப்பா" புடிக்குமா?, இந்தக் கேள்விக்கு, "நான் அப்பாக் குட்டி" என்றே பதில் சொல்லிப் பழகியவள் நான்.

"குட்டி, அப்பாக்குட்டி, செல்லம்", இப்படித் தான் அழைப்பீர்கள் என்னை நீங்கள்? நினைவிருக்கிறதா? ஆனால், இன்று, என்னை அழைப்பதையே நிறுத்திவிட்டதேனோ?

நீங்கள் என்னை அப்பாக்குட்டி என்று அழைப்பதை நிறுத்திய நாள் தொட்டு, உங்களை நான் அப்பாக் குட்டி என்று அழைத்துத் திரிகிறேன்.

இத்தனை வயது ஆன போதும், சிறுபிள்ளை போல மகிழ்கிறேன், உங்களை அப்படி அழைக்கும் போதெல்லாம்.

நான் என்ன பிழை செய்தேன்? இப்படி பேசாமல் இருக்க? ஒரு வழிப் பாதை போல, நான் மட்டும் உங்கள் முன்னே அமர்ந்து புலம்பிக் கொண்டிருக்கிறேன், தினமும்!

பதிலுக்கு ஒரு "ம்ம்" கொட்டக் கூட உங்களுக்கு விருப்பம் இல்லை!

அன்று ஒரு நாள் நினைவிருக்கிறதா? நான் நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, தட்டில் சட்னி வைத்தேன், "நீ ஒன்றும் வைக்க வேண்டாம்", என்று சொல்லி விட்டீர்கள்.

நான் பரிமாறும் வார்த்தைகள் தான் கேட்க விருப்பம் இல்லை, உணவு கூடவா?

மகள் கையா…

அப்பா - அம்மா - மகளின் பார்வையில்! #2

முந்தைய பதிவு :
அப்பா - அம்மா - மகளின் பார்வையில்! #1
"முத்துக்காளத்தியின் முத்துக்கள்" என்று என் அப்பா அந்தப் புத்தகத்தில் ( எந்தப் புத்தகம் என்று தெரிய நீங்கள் முந்தைய பதிவை படித்திருக்க வேண்டும்) எழுதி வைத்திருந்தார், மொத்தம் ஐம்பது முத்துக்கள் இருந்தன, இந்தப் பதிவில் முதல் ஐந்து  முத்துக்களையும், அதற்கு என் அம்மாவின் ஆசை, எனது ஆசை என்று பார்க்கலாம்.
முத்துக்கள் ஐந்து!
முத்து ஒன்று :கணவனை மனைவி நேசிக்க வேண்டும். அன்பால் அரவணைக்க வேண்டும். அவனுக்குத் தன்னையே "அர்ப்பணிக்க" வேண்டும். அப்பாவின் ஆசை நியாயமானது தான். மனைவி அன்பாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் நினைக்கத் தானே செய்வார்கள்! ஆனால், அம்மா பதிலுக்கு கொஞ்சம் அன்பை எதிர்பார்க்கத் தானே செய்வார்? அதை அப்பா தரவேண்டும்! அது அவரது கடமை தானே? (அன்பை கடமை என்று சொல்வது சரியாக இருக்காது, ஆயினும், இன்று பல இடங்களில் நிலை அப்படித் தான் இருக்கிறது!)
என் அம்மாவும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். இந்தப் புத்தகத்தில் போட்டிருந்த ஒரு வரியை வாசித்துக் காட்டி, அம்மா, மனைவி தான் கணவனுக்கு காலையில் காப்பி போட்டுத் தர வேண்டுமாம். கணவ…

இன்று காலை, அதிகாலை!

என் குரலில் இந்தப் பதிவைக் கேட்க,


படிக்க வேண்டும் என்றால் மட்டும் தான்,
படுக்கையை விட்டு அதிகாலை எழுவேன்,
பத்து மணி தான் இல்லை என்றால்!

இரவெல்லாம் படித்தால் தான்,
இன்பமாக இருக்கிறது,
காலையில் கொஞ்சம் தூக்கம்,
கண்கள் கேட்கிறது!

இன்று பரிட்சையும் இல்லை,
படிக்கவும் இல்லை - ஆனால்,
பனி விழும் அதிகாலையிலேயே,
படுக்கையை விட்டு எழுந்தாயிற்று!

குளிர் நீரிலே குளித்தாயிற்று - அம்மாவோடு,
கோயில் கோயிலாய் சென்றாயிற்று,
"கோயிலுக்குச் சென்றால் தான் உண்டா?"
கேள்விகளை எல்லாம் ஓரம் கட்டியாயிற்று.
"அன்பின் இடத்தே இறைவன்",
என் நம்பிக்கை அது - பிறகு,
ஏன் கோயிலுக்குச் சென்றேன்,
எதற்காக மண்டியிட்டேன்?

"மார்கழி ஒன்னு,
கோயிலுக்குப் போனா நல்லது!",
அம்மாவின் அன்பான ஆசைக்காக!
என் கொள்கைக்காக!"அன்பின் இடத்தே இறைவன்"
தெய்வத்தோடு சென்று,
கற்களை வணங்கி நின்றேனே,
காலையிலேயே -அதிகாலையிலேயே!

----------------------------------
காலையில் காலாற நடந்தால் நல்லது என்பார்கள், அம்மா வேறுமாதிரி சொல்கிறார் அதையே, இருப்பினும் நல்லது தானே சொல்கிறார்!

அப்பா -அம்மா - மகளின் பார்வையில்! #1

இனி நான் எழுத இருக்கும் எல்லாப் பதிவுகளோடும் ஒரு ஒலி இணைப்பைத் தரப்போகிறேன். அந்த ஒலி இணைப்பில் நீங்கள் அந்தப் பதிவை, என் குரலில் கேட்கலாம். வாசிக்க உங்களுக்கு நேரம் இல்லை என்றால், இது மிகவும் உதவும் என்று நினைக்கிறேன். எனக்கும் வாசிப்பது நல்ல பயிற்சியாக இருக்கும்.

எங்கள் வீட்டில் இருக்கும் ஒரு அறையில் நிறைய புத்தகங்கள் இருக்கும், பொழுது போகவில்லை என்று சொல்லவே அவசியம் இல்லை, அத்தனை புத்தகங்களை என் அப்பா வாங்கி வைத்திருக்கிறார், உட்கார்ந்து படித்தால் படித்துக் கொண்டே இருக்கலாம்.

அந்த அறைக்குள் போன என் தம்பி, நேற்று புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு ஓடி வந்தான், என் அம்மாவிடம் அந்தப் புத்தகத்தைக் கொடுத்து, இந்தாங்க நல்லாப் படிங்க, என்று கொடுத்தான்.

அந்தப் புத்தகத்தின் விபரங்கள் கீழ்வருமாறு:

தலைப்பு:நல்ல மனைவியாக இருப்பது எப்படி?
ஆசிரியர்: மு.முத்துக்காளத்தி எம்.ஏ.
பதிப்பகம்: கண்ணம்மாள் பதிப்பகம்.
முதற்பதிப்பு: 1984
விலை: ஒன்பது ரூபாய் (வெறும் ஒன்பது ரூபாயா? என்று நினைத்துக் கொண்டேன் நான், முன்பெல்லாம் சம்பளமும் குறைவு, விலையும் குறைவு தானே, அதான் போலும் என்று நினைத்துக் கொண்டேன்)

என் அம்மா, ப…

பெண்கள் மட்டும் தான் சமைக்க வேண்டுமா?

உங்கள் வீட்டிலும், என் வீட்டிலும் அம்மா தான் சமைக்கிறார் இல்லையா? இருக்கலாம், சில வீடுகளில் ஆண்கள் சமைப்பதுண்டு. ஆனால், பெரும்பாலான வீடுகளில் பெண்கள் தான் சமைக்கிறார்கள்.
சிறுவயதில் இருந்தே, என் அம்மா சொல்வார், "பொம்பளப் பிள்ள, சமையல், வீட்டு வேலை எல்லாம் செய்யக் கத்துக்கணும்..."
இது அடிக்கடி என் அம்மா சொல்லும் "டயலாக்". அப்போது எனக்கு கேள்வி கேட்கத் தோன்றியதில்லை! "பெண்கள் தான் இதெல்லாம் செய்ய வேண்டுமா? ஆண்கள் செய்யக் கூடாதா?" என்று.
அந்த வயதில் என் அம்மா சொன்னாரே என்று, வீடு பெருக்குவது, தோசை சுடுவது, இப்படியாக சின்னச் சின்ன வேலைகள் எல்லாம் கற்கத் தொடங்கினேன். வீட்டில் மூன்று அறைகள் எனது தொகுதி.  பள்ளியில் சென்று பாடம் படித்துவிட்டு வீட்டிற்கு வந்ததும், தினமும் என் தொகுதியை நான் தான் பெருக்க வேண்டும். மற்ற இரண்டு அறைகளை அம்மா பெருக்கிக் கொள்வார்.
இப்படி எனக்கு விவரம் தெரிந்து, ஐந்தாம் வகுப்பில் இருந்து வீட்டு வேலை சொல்லித் தருகிறார்கள் எனக்கு. வீடு பெருக்குவதில் தொடங்கி, இன்று, பாத்திரம் துலக்குவது, துணி துவைப்பது, என்று வீட்டு வேலைகள் எல்லாமே ஓரளவு சொ…

மூக்குப் பொடி டப்பா - முருகன் தாத்தா!

"ஏலே பயலே... தாத்தாவுக்கு மூக்குபொடி டப்பாவைத் தேடிக் குடுலே!...", தன் கட்டிலில் துலாவியவாறே கத்தினார் முருகன் தாத்தா!

ஒல்லியான தேகம், சட்டை போடுவதை விட்டு பல நாட்கள் ஆகி இருந்தது. ஏதாவது விசேஷம் என்றால் மட்டும் தான் தாத்தா சட்டை போடுவார். இல்லை என்றால் ஒரு துண்டு தோளில், ஒரு "கைலி", இது தான் அவரது உடுப்பு.

ஓவம்மா#11 (தொடர்கதை)

முந்தைய பாகங்கள்:

ஓவம்மா! #1 | #2 | #3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10

அவனுக்கு என்னால தான் இப்படி ஆகிடுச்சுன்னு எப்பவும் எனக்கு வருத்தம். தெனமும் ஆஸ்பத்திரில போய் அவனக் கூட இருந்து பாத்துக்கிட்டேன்.

அவனுக்கு கால் போயடுச்சேன்னு கூட வருத்தம் இல்ல, நான் தெனமும் கூட இருக்கேன்னு சந்தோஷம். ஆனாலும் அப்பப்போ அழுவான், "ஏன் ஓவு.. என்ன இவ்ளோ நல்லாப் பாத்துக்கிறியே, நெசமாவே என்னப் புடிக்குமா? ஆனா, இனி உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் எப்படிப் பாத்துக்க முடியும்... நீ தான் என்னப்  பாத்துக்கணும்... "

அவன் அழறப்போ எல்லாம், எனக்கு என்ன சொல்லனே தெரியாது, "அதெல்லாம் ஒண்ணும்ல உனக்கு சரியாப் போகும்...", இப்படி நான் சொன்னாலும் அவனுக்கு என்ன தெரியாதா, போன கால் திருப்பி வராதுன்னு.

எங்க வீட்ல எல்லாரும் சொல்லுவாங்க, அந்த நொண்டிப் பயலவா கட்டிக்கப் போற? நல்லா இருந்தா நாங்களே கட்டி வச்சிருப்போம், இப்போ போய் எப்டி...?

"பேசாம அந்தப் பணக்கார மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கோ. நல்லா இருக்கும். வீட்லயே தண்ணி வசதி எல்லாம் இருக்காம்.
நீ இம்புட்டு நாளா கட்ட அடுக்கி காஞ்சது போதாதா? இனியும் இந்த நொண்டிய…