முந்தைய பாகங்கள்:
ஓவம்மா! #1 | #2 | #3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10
அவனுக்கு என்னால தான் இப்படி ஆகிடுச்சுன்னு எப்பவும் எனக்கு வருத்தம். தெனமும் ஆஸ்பத்திரில போய் அவனக் கூட இருந்து பாத்துக்கிட்டேன்.
அவனுக்கு கால் போயடுச்சேன்னு கூட வருத்தம் இல்ல, நான் தெனமும் கூட இருக்கேன்னு சந்தோஷம். ஆனாலும் அப்பப்போ அழுவான், "ஏன் ஓவு.. என்ன இவ்ளோ நல்லாப் பாத்துக்கிறியே, நெசமாவே என்னப் புடிக்குமா? ஆனா, இனி உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் எப்படிப் பாத்துக்க முடியும்... நீ தான் என்னப் பாத்துக்கணும்... "
அவன் அழறப்போ எல்லாம், எனக்கு என்ன சொல்லனே தெரியாது, "அதெல்லாம் ஒண்ணும்ல உனக்கு சரியாப் போகும்...", இப்படி நான் சொன்னாலும் அவனுக்கு என்ன தெரியாதா, போன கால் திருப்பி வராதுன்னு.
எங்க வீட்ல எல்லாரும் சொல்லுவாங்க, அந்த நொண்டிப் பயலவா கட்டிக்கப் போற? நல்லா இருந்தா நாங்களே கட்டி வச்சிருப்போம், இப்போ போய் எப்டி...?
"பேசாம அந்தப் பணக்கார மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கோ. நல்லா இருக்கும். வீட்லயே தண்ணி வசதி எல்லாம் இருக்காம்.
நீ இம்புட்டு நாளா கட்ட அடுக்கி காஞ்சது போதாதா? இனியும் இந்த நொண்டியக் கட்டிக்கிட்டு அழுகப் போறியா வாழ்க்க முழுசா?"
எங்க வீட்ல இப்டி பேசப் பேச எனக்கு என்ன செய்யனே தெரியல, ஆனாலும், இன்னிக்கு இந்தக் கடிநாய் இப்டி கெடக்கான்னா அதுக்கு எம்மேல வச்சிருந்த பிரியம் தான காரணம்? இந்த நெனப்பே என்ன கொடஞ்சது.
அவன் மேல விருப்பம் எப்பவும் இருந்ததில்ல, ஆனா, அவன் நெலமைக்கு நான் தான காரணம்?
ஒரு வழியா, அவன் ஆஸ்பத்திரில இருந்து வீட்டுக்கு வந்துட்டான். நடக்க ஒரு கம்பு இல்லாம முடியாது. அவனோட அம்மா ரொம்பப் பாவம், வயசான காலத்துல அவனுக்கு எல்லா வேலையும் பாத்துகிட்டு கெடந்துச்சு. அவன் வீட்டுக்கு வந்தப்றம் நான் அந்தப் பக்கமே போகல, ஏன்னும் தெரியல.
ஒரு நாள் அவன் வீட்டுக்குப் போனேன், ஏதோ, அவன பாத்துட்டு வரலாமேன்னு போனேன். உக்காந்திருந்தான், விட்டத்த வெறிச்சுப் பாத்துக்கிட்டு, பாக்கவே பாவமா இருந்தது.
"சேகரு..", நான் கூப்டது கூட கேக்கல அவன் காதுல, இன்னும் பலமாக் கூப்டேன், "சேகரு...", இப்போ திடுக்குனு திரும்புனான் என் பக்கம்.
"என்ன ஓவு.. இந்தப் பக்கம்? அதிசயமா?", அந்தக் கொரல்ல கோவம் இல்ல, பாசம், ஏக்கம் நெறயக் கெடந்தது.

"இல்ல, சும்மா தான்..", என்ன சொல்லன்னு தெரியாமச் சொன்னேன்.
"சரி வா, எப்டி இருக்க? அம்மா கிட்ட ஏதும் வாங்க வந்தியா? வெளிய போயிருக்கு அம்மா..", ஆளே மாறி இருந்தான், இவ்ளோ மெதுவா இது வரைக்கும் அவன் பேசுனதே கெடயாது! கால் போனதுல, இவன் கிட்ட இருந்த மொறட்டுத் தனமும் சேந்து போயிடுச்சா? எனக்கு அவன இப்டி பாக்க ரொம்பப் பாவமா இருந்தது. முந்தி எவ்வளவு ஆத்தரம் வருமோ, இப்போ அவ்ளோ பாவமா இருந்தது. அந்த ஆத்தரம் கூட கொஞ்சம் பொய்யானதா தான் இருந்துச்சு, ஆனா இந்த அனுதாபம்? உண்மையாவே ரொம்பப் பாவமா இருந்தது.
" இல்ல, நான் உன்னப் பாக்கத் தான் வந்தேன்..."
"என்னப் பாக்கவா? முன்ன எல்லாம் என்னப் பாத்தாலே புடிக்காது, இப்போ என்ன? என்னப் பாக்க?" விரக்தியா சிரிச்சுட்டே சொன்னத கேட்டப்போ, எனக்கு எம்மேல தான் ஏதோ பெரிய தப்பு இருக்கோணு தோனுச்சு.
"அதெல்லாம் இல்ல, நீ வெளிய ஆளே காணோமேன்னு வந்தேன்.ஏன் சேகரு, இப்டி உகாந்த்ருக்க? வெளியவே வாரதில்ல? வீட்டுக்குள்ளயே கெடக்கியே? வெளில வாரது தான?"
"வெளில வந்து? எல்லாரும் நொண்டிப் பயனு என் காது படவே பேசவா?", கொஞ்சம் கோபமாவே பேசுனான்.
"அப்டி எல்லாம் யாரும் பேச மாட்டாங்க, நீ வா.."
"சும்மா இரு ஓவு.." மறுபடியும் கொஞ்சம் பாசமா பேசுனான்.
எனக்கு என்ன பேசன்னு தெரியல, ஒரு ஓரமா எங்கயோ பாத்தாப்ல உக்காந்தேன். அவனும் எதும் பேசல கொஞ்ச நேரம்.
திடுக்குனு என்ன தோணுச்சோ, தெரியல, "ஓவு.. உனக்கு கல்யாணம் எப்போ...?", இப்படிக் கேட்டான்.
என்ன சொல்லுறதுன்னு தெரியல, அவனையே பாத்தேன்.
"சொல்லு, உன்ன தான், எப்போ கல்யாணம்?"
"இல்ல, தெரில, வீட்ல ஏதும் சொல்லல...", ஏதோ சொல்லி சமாளிச்சேன்.
"ஒ.. அந்த பெரிய எடத்து மாப்ள? அவரு திரும்ப வரலையா?"
"அவங்க கேட்டாங்களாம் வீட்ல, இப்போ ஏதும் சொல்றதுக்கில்லன்னு வீட்ல சொல்லிட்டாங்க.. அத்த"
"ஒ.. சீக்கிரமா கல்யாணத்தப் பண்ணச் சொல்லு ஓவு...", அவன் இப்படிச் சொல்லுவான்னு நான் ஏற்கனவே நெனச்சேன்..
"இல்ல, பாப்போம், உனக்கு இப்டி இருகையில.. எனக்கு எப்டி கல்யாணம்..."
"எனக்கு எப்பவும் இனி சாகுற வர இப்டி தான் இருக்கும், அதுக்குன்னு நீ கல்யாணம் பண்ணிக்காம வீட்லயே கெடப்பியா?"
"இல்ல.. என்னால தான உனக்கு இப்டி.."
"இல்ல, இது உன்னால என்ன, நான் ஒழுங்காப் பாத்து போய் இருக்கணும், ஒனக்கே தெரியும்ல, நான் வேகமா வண்டில போவேன்னு.. அதான்.. என் நேரம்... இதுக்கு நீ என்ன பண்ணுவ...? எனக்கு இப்டி ஆகாம இருந்திருந்தா, நீ அந்தப் பெரிய எடத்து மாப்ளைய தான கட்டிருப்ப? சொல்லு..? அவன தான உனக்குப் புடிச்சது? அது தான ஒ கனவு?"
அவன் பேசிட்டே போனான், எனக்கு என்ன பேசன்னே தெரியல. என்ன முடிவு செய்யணு புரியல.
"இல்ல, சேகரு.. நான் போயிட்டு வாறேன்...", வேகமா அங்க இருந்து கெளம்பினேன்.
"சரி ஓவு, போயிட்டு வா.. கடசியா சொல்றேன், நீ அவனையே கட்டிக்கோ.. எனக்கு ஒன்னும் இல்ல, வருத்தம் இல்ல...", இல்லன்னு சொன்னாலும், அவனுக்கு எவ்வளவு வருத்தம்னு எனக்குப் புரிஞ்சது.
யோசிச்கிட்டே இருந்தேன், தெனமும். என்ன செய்யணு எனக்கு ஒன்னும் புரியல.
------------------------------------------------------------------
நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தக் கதையைத் தொடர்கிறேன்.
ஏதோ, சிறு பிள்ளைத் தனமாய், எனக்கு தோன்றுவதை எல்லாம் எழுதுகிறேன்.
எப்படி இருந்தது, சொல்லி விட்டுச் செல்லுங்கள்.
ஓவம்மா தொடருவாள், அடுத்த பகுதியில்.

உங்களின் ஓவம்மா கதை தொடர வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஓவம்மாவிற்கு எனது ஜேவம்மா
பதிலளிநீக்கு:) ஜே ஜே... உனக்கு ஜே ஜே...!
நீக்குபாட்டு மாதிரி சொல்றிங்க.
ரொம்ப நன்றி... :)