முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பொருக்காச்சி!

காலையில் ஆறு மணி இருக்கும், நல்ல வெளிச்சம். வழக்கத்தை விட வெரசாகவே விடிந்து இருந்தது. கோடை என்பதால் போல! காலையில் வாசல் தெளித்து, கோலம் இட்டுக் கொண்டு இருந்தாள் கமலம். குட்டி மஞ்சு அந்நேரமே எழுந்து காப்பி போடத் தொடங்கி இருந்தாள் அவளது கிச்சன் செட் உதவியோடு, வீட்டு வாசலில்! அழகாக அடுக்கி வைத்து இருந்தாள் அவளது சொப்புகளை; சின்னச் சின்னக் கிண்ணம், கரண்டி, கப் அன் சாசர், காஸ் அடுப்பு, சிலிண்டர், குட்டிக் கூடை, மிக்ஸி, ஆட்டு உரல், அம்மி, சின்னது பெரியது என எல்லா அளவிலும் பல பாத்திரங்கள், தோசைக் கல், கரண்டி, இப்படி சகலமும் அவளிடம் இருந்தது! ஒவ்வொரு தடவை பொருக்காச்சிக்குப் (பொருட்காட்சி) போகும் போதும், அவள் குறைந்தது இரண்டு கிச்சன் செட்டாவது வாங்கிவிடுவாள், அப்படி கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இப்போது அவளிடம் மூன்று கூட்டுக் குடும்பத்துக்கு சமைக்கும் அளவிற்கு பாத்திரம் இருந்தது. எல்லாவற்றிலும் நான்கு ஐந்து இருக்கும், காஸ் அடுப்பு மட்டும் மூன்று இருந்தது! குட்டி சைஸில் அவளிடம் டேபிள் ஃபேன் கூட இரண்டு இருந்தது! மஞ்சு ”அம்மா அம்மா.. காப்பி இந்தாங்க... அப்பா.. உங்களுக்கு..., அவ்வா (பாட்டி) இ