முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அப்பா - அம்மா - மகளின் பார்வையில் #4

புதிதாக வாசிபவர்களுக்கு, இது ஒரு தொடர் பதிவு ஆதலால், கீழே இருக்கும் இணைப்பைப் பயன்படுத்தி முந்தைய பதிவுகளை படித்துவிட்டு, இங்கே வாருங்கள்! முந்தைய பதிவுகள்: அப்பா - அம்மா - மகளின் பார்வையில்! #1   #2   #3 இதுவரை நாம் பத்து முத்துகளை பார்த்துவிட்டோம், இப்போது தொடர்ந்து அடுத்து கொஞ்சம் முத்துக்களை நம் மாலையில் கோர்க்கலாம், வாங்க! முத்து பதினொன்று: அவன் எப்போது வருவான் என்று காத்திருந்து, வந்ததும் வராததுமாக உங்கள் உறுத்தல் மூட்டைகளை அவன் முன் அவிழ்த்துக் கொட்டாதீர்கள்! இது, அப்பா அம்மாவிற்குச் சொல்வது போல இருக்கிறது. சரி இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்று பார்க்கலாம். அம்மா தனக்கு இருக்கும் வருத்தங்களை, இன்பங்களை, அப்பாவிடம் தானே பகிர்ந்து கொள்ள முடியும்? உண்மை தான் அப்பாவிடம் தான் சொல்ல முடியும். ஆனால், இங்கே வாதம், அப்பா வீட்டிற்கு வந்தவுடன் சொல்லக் கூடாது என்பது தான்.  எந்த அம்மாவும், அப்பா வந்தவுடன் ஏதாவது அழுது பொலம்பி அவரை எரிச்சல் படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, வேண்டும் என்று செய்வதில்லை. என் வீட்டில் கூட இந்த பிரச்சனை அடிக்கடி நடக்க

அப்பாவுக்குத் தெரியாதா? # 1

daddy's girl “ அப்பாவுக்கு எல்லாமே தெரியும் , அப்பா தான் உலகத்திலேயே பெரிய ஆள். அப்பாவுக்கு நாம் மட்டும் தான் செல்லமாக இருக்க வேண்டும். வேறு யாரும் ஊடே வரக்கூடாது …” இப்படி எல்லாம் தான் நினைத்துக் கொண்டு இருந்தேன் சிறுவயதில். பிறகு என்ன ஆனதோ , ஏது ஆனதோ தெரியவில்லை. கொஞ்சம் பெரியவள் ஆனதும் , ஒரு பனிரெண்டு , பதினான்கு வயது இருக்கும் போதெல்லாம் அப்பா மீது ஏனோ கோவம் கொஞ்சம். பள்ளியில் ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததெல்லாம் சரி என்று நம்ப முடிந்த எனக்கு , அப்பாவின் கருத்தை எல்லாம் ஒப்புக்கொள்ள முடியவில்லை. “ அப்பாவுக்கு கொஞ்சம் தெரியல , நமக்கு கூட தெரியுது அதெல்லாம்... ” இப்படி யோசிக்கத் தொடங்கி இருந்தேன். ஆனால் என்ன தான் நினைத்திருந்தாலும் , நடந்திருந்தாலும் , இப்போது நினைத்துப் பார்க்கையில் "அப்பாவுக்கு எல்லாம் சரியா தெரிஞ்சிருக்கே" , என்றே தோன்றுகிறது. அது எப்படி? அப்பாவுக்கு எல்லாம் எப்படித் தெரிகிறது? சொல்கிறேன் கேளுங்கள்! சிறுவயதில் இருந்தே , எல்லா விஷயத்திலும் நான் அப்பாவின் பெண் தான் , அதாவது என்ன ஆனாலும் சரி , அப்பா என்ன சொல்கிறாரோ அது தான்

ஒன்று மட்டும் சொல்கிறேன்!

அருகே வரவும் ஆசை இல்லை, விலகி நிற்கவும் தோன்றவில்லை! ஆனால், ஒன்று மட்டும் சொல்கிறேன், காலை வானில் வெளிச்சம் இல்லை! நான் உன்னை நேசிக்கிறேனடி! விட்டுக் கொடுக்க வருத்தமில்லை, வாரி அணைக்க வாய்ப்பு இல்லை, ஆனால், ஒன்று மட்டும் சொல்கிறேன், நான் உன்னை நேசிக்கிறேனடி! மாலை பொழுதில் ஈரம் இல்லை, காலை வானில் வெளிச்சம் இல்லை, ஆனால், ஒன்று மட்டும் சொல்கிறேன், நான் உன்னை நேசிக்கிறேனடி! உந்தன் வாழ்க்கையில் நானும் முல்லை, எனக்கு நீ மட்டுமே முதல் பிள்ளை, நான் அறிவேனடி, நீயும் என்னை நேசிக்கிறாய் என்று!

நான் கோழை தான்!

புலி என்னை யாரும் எதிர்பார்க்க வேண்டாம்! அதோ, அங்கே போராடுகிறீர்களே, நீங்கள் யாரும் என்னை அழைக்க வேண்டாம்! "எழுவோம், போராடுவோம்...", என்றெல்லாம், என்னை உங்களோடு சேர்க்க முயல வேண்டாம்! கல்யாணம் செய்து வைப்பேனென்று, ஒரு தங்கையும், "பள்ளிக் கட்டணம் கட்டுவான் அண்ணன்" இப்படி நினைத்தபடி ஒரு தம்பியும், மருந்து வாங்க காசு வேண்டும், இருந்தும் கேட்டால், "எங்கே பையன் சிரமப்படுவானோ" - வருந்தும் தாய் தந்தையும் உண்டு! வீதியில் இறங்க விருப்பமுண்டு, உங்களோடு இணைந்து கொள்ள வேகமுண்டு, ஆனால் மன்னியுங்கள் என்னை, சுயநலக்காரன் நான்! இரண்டு நாள் காய்ச்சல் இப்படிச் சொல்லி விடுப்புப் போட, இயலாது என் அலுவலகத்தில், மீறிப் போட்டால், வேலை இருக்காது இன்றில் இருந்து! வீரமாய் வந்து, புலிகளுக்கு கை கொடுக்க,  இதோ என் உடம்பில் வீரமுண்டு, ஆனால், மன்னியுங்கள் என்னை, கோழை தான் நான்! என் தலையில் அடிக்கும் வரையில், என் தங்கையை யாரும் தீண்டும் வரை, என் தாய் தந்தை பாதிக்கப்படும்  வரை, என் தம்பி தாக்கப்படும் வரை, மன்னியுங்கள் என்னை, கோழை தான் நான்! என்னை

நடை பயண நினைவுகள்!

I pray to be only yours என் உயிரினுள்ளே இருக்கும் ஒரு பாடல் -அது தான் நான் மீண்டும் மீண்டும் எழுத நினைக்கும் ஒரு பாடல்! நீ எனக்காக மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டே இருக்க, நீண்டு கொண்டே போகும் குளிரில், நான் கண் விழித்துக்கிடக்கிறேன். வானம் பார்த்து, கைகளை உயர்த்தி, நான் வேண்டிக்கொள்கிறேன், உனதாக மட்டுமே,  நான் இருக்க வேண்டுமென்று, நான் வேண்டிக்கொள்கிறேன், உனதாக மட்டுமே, நான் இருக்க வேண்டுமென்று! இதோ இப்போது எனக்குத் தெரியும், நீ மட்டுமே என் நம்பிக்கை என்று! பாடு எனக்காக விண்மீன்களைப் பற்றிய அந்தப் பாடலை -உன்னுடைய நாட்டியமாடும், விடாது சிரிக்கும் உலகத்தைப் பற்றிய அந்தப் பாடலை! எனது கனவுகள் தூரமானவை - இப்படி எனக்குத் தோன்றும்போது, பாடு எனக்காக நீ வைத்திருக்கும், நல்ல திட்டங்களை! வானம் பார்த்து,   A walk to remember - There's a song கைகளை உயர்த்தி, நான் வேண்டிக்கொள்கிறேன், உனதாக மட்டுமே,  நான் இருக்க வேண்டுமென்று, நான் வேண்டிக்கொள்கிறேன், உனதாக மட்டுமே, நான் இருக்க வேண்டுமென்று! இதோ இப்போது எனக்குத் தெரி

சனிப் பிரதோஷம் - கோவிலுக்குப் போகலாமா?

இந்தப் பதிவை நீங்கள் படிக்கும் முன், " கடவுளும் கண்மணியும்!"   இந்தப் பதிவை படித்துவிடுங்கள், அப்போது தான் உங்களுக்கு எனக்கும் கடவுளுக்கும் இருக்கும் புரிதல் புரியும்! :) சரி, சனி பிரதோஷம், கோவிலுக்குப் போகலாமா? அதுவும் குறிப்பாக சிவன் கோவிலுக்குப் போகலாமா? இந்தக் கேள்விக்கு எனது பதில் என்ன என்பதே இந்தப் பதிவு. "என்னம்மா? சனி பிரதோஷம், ரொம்ப சிறப்பு சிவன் கோவிலுக்குப் போறது, போகலாமான்னு கேள்வி கேக்குற நீ?", இப்படி நினைக்கிறீர்களா? கடவுள் பக்தி நிறைய உங்களுக்கு உண்டா? அப்போ, இந்தப் பதிவை தயவு செய்து படிக்காதீர்கள், நீங்கள் அதற்கும் மீறி படித்தீர்களேயானால், என்னைத் திட்டுவீர்கள், இல்லை வருத்தப்படுவீர்கள், இல்லை, "இந்தப் பொண்ணு மோசம்!" என்று சொல்வீர்கள்! இதில் ஏதாவது ஒன்று நடக்கும். அதற்கும் மீறி படித்தால் படியுங்கள், நான் பொறுப்பில்லை பிறகு, படித்துவிட்டு என்னைத் திட்டாதீர்கள்! நான் பாவம்! :( சிவன் சரி, சனி பிரதோஷம், கோவிலுக்குச் சென்றால் என்ன சிறப்பு? நிறைய புண்ணியமாம்! விரதம் இருந்து சென்றால், நினைத்ததெல்லாம் நடக்குமாம், என் அத்தை  சொல்லிக்கொண்ட