முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தொடர்கதை --> காதலி காதலி!#1

[இது எனது இரண்டாவது தொடர்கதை முயற்சி. எனது முதல் "சிக்ன(க)ல் " தொடர்கதைக்கு அழித்த ஊக்கத்திற்கு நன்றி.]                                              ------------------------------ நெடுநேரமாக அவளது காதோரம் அந்தப் பாடல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது! மிகவும் பிடித்த பாடல், தனிமையில் நேரத்தைப் போக்க அவள் திருப்பித் திருப்பி கேட்கும் பாடல்! இன்றும் தனிமையைக் கொல்ல இரவு ஒரு மணிக்கும் சலிக்காமல் கேட்டுக் கொண்டிருந்தாள். அப்படியே தூங்கிப் போனாள். தினமும் கனவுகள் வந்து அவளை வதைத்திடும், ஆனால், அன்று சற்று நிம்மதியாகவே தூக்கம் அமைந்தது. காலையில் வழக்கம் போல ஐந்து மணிக்கு அலாரம் அடித்து எழுந்தாள். வாசல் தெளித்து பால் வாங்கி அடுப்பில் வைத்துவிட்டு, குழந்தையை எழுப்பச் சென்றாள். "முரளி, முரளி.. school -க்கு நேரமாச்சு எந்திரி", ஒரு உழுக்கு உழுக்கி விட்டு, அடுப்பில் வைத்த பாலை இறக்க ஓடினாள்! சற்று விழித்தும் விழிக்காமலும் ஜன்னல் வெளியே பார்த்து, நேரம் ஆகவில்லை என்று நினைத்துக் கொண்டு, மீண்டும் போர்த்திப் படுத்தான் முரளி. முரளி, ரேணுகாவின் 12 வ

புரியலையா?

உண்மைக்கும் பொய்க்கும் நடுவே, வானுக்கும் மண்ணுக்கும் ஊடே, இரவுக்கும் பகலுக்கும் மத்தியில், இதமாய் நான் தீட்டிய ஓவியம்! உனது தூரிகை களவாடி, உன்னையே தீட்டிக் காட்டினேன்! உன்னுள் இருக்கும், என் மீதான காதலை உயிரோவியமாய் தீட்டிக் காட்டினேன்! ஊரில் ஓவியர்கள் தீட்டிய உயிரற்ற ஓவியமெல்லாம், உற்று நோக்கி ரசித்தாயே.. உன்னையே எண்ணி ஏங்கும், இப்பேதையின் உயிரோவியம், காதலோவியம்.. கண்ணில் விழவில்லையா? காதல் எழவில்லையா? தினம் தினம் ஏங்கி ஏங்கி தீட்டும் என் கவிதைக் காவியம், புரியவில்லையா?

பள்ளிகளும் ஆசிரியர்களும்!

நம்மில் பலருக்கும் பள்ளியில் பல சுவாரசியமான அனுபவங்கள் இருக்கும். பல நல்ல பழக்கங்கள், சில தீய பழக்கங்கள் என அனைத்தையும் கற்றுக் கொடுத்திருக்கும் நமது பள்ளிக் கூடங்கள். பள்ளிகளில் பல வகை உண்டு. பள்ளிகளில் வகையா? ஆம்! ஒவ்வொரு பள்ளியையும் அதன் குறிக்கோள்( motto ) அடிப்படையில் வகைப்படுத்தலாம். 1) சில பள்ளிகள், பணத்திற்காக மட்டுமே செயல்படுவதுண்டு. 2) சில பள்ளிகள், மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களாக மாணவர்களை மாற்றுவதில் சிறந்தவை! 3) சில பள்ளிகள், மதிப்பெண்கள் அதிகம் பெறுவதைக் காட்டிலும், ஒழுக்கமும், நாட்டுப் பற்றும் நிறைந்த மாணவர்களை உருவாக்கும் பணியே சிறந்தது என்னும் கொள்கை உடையன! இது போல ஆசிரியர்களையும் கூட வகைப்படுத்தலாம்! முதலடி எடுத்து வைப்போம்! 1 ) இயந்திரத்தனமாய் பாடங்களை நடத்துவோர் (ஒப்பிப்போர்) 2 ) எந்நேரமும் பாடம் தவிர்த்து நக்கல் நையாண்டி என்று தேவையற்ற பேச்சுகளில் நாட்டம் உள்ளோர். 3 ) ஒழுக்கம், நாட்டுப் பற்று, சமுதாய அக்கறை முதலியவற்றை பாடத்தோடு சேர்த்து புகட்டுவோர்! பெரும்பாலான நேரங்களில், பெற்றோர்கள் தேர்வு செய்யும் பள்ளிகள், இரண்டாம் வகையைச்

நினைவுகள்!

என் ஐந்து வயது குட்டி குட்டி கோழிகள், நினைவுகள் - என் செல்லப் பிராணிகளும், காய்கறித் தோட்டமும்! காலைச் சுற்றும் நாய்க்குட்டிகள், வீட்டைச் சுற்றி, விழைந்து கிடக்கும், வாழையும், பூசணியும்! என் வீட்டுக் கோழி இட்ட, முட்டை உடைத்து குஞ்சுகள், முதலில் உலகை மெதுவாய்ப் பார்த்த நேரம், பேரப்பிள்ளைகளைப் பார்த்து, பூரித்துப் போகும், பாட்டி தாத்தா போல, கையில் அள்ளி, கொஞ்சிக் கொஞ்சி, பூரித்துப் போனேனே! பள்ளி செல்லும் சாலையில், என் வண்டி பின்னே, பாசமாய் ஓடி வரும், என் குட்டி நாய்களுக்கு, செல்லப் பிள்ளைக்கு, டாட்டா சொல்லும் அம்மா போல, டாட்டா சொல்லிப் போனேனே! எனக்கு 18 வயது! கோழிகளும் நாய்க் குட்டிகளும், வாழையும் பூசணியும், இன்று சுவர்களாகிப் போயினவே... நாகரிக வளர்ச்சியால், பசுமையும் குளுமையும், பகல் கனவு ஆகவே, இன்றும் நினைவுகளில் மட்டும், என் வீட்டுச் செல்லப் பிராணிகளும், காய்கறித் தோட்டமும்!

தீண்டும் நாள் வரும்!

துயரம் நீங்கிப் போகும் அன்பே, தூரம் செல்லாதே! காதல் இன்னும் கூடும் கண்ணே, அருகில் நெருங்காதே! வாடைக் காற்றில் ஈரம் குறையும், நெருப்பை மூட்டாதே! வயது வந்த பெண்ணின் இதயம், கசக்கிப் பிழியாதே! கையின் ரேகை, அது அழிந்து போகும்! இதழின் சாயம், அது கரைந்து போகும்! மூச்சின் வேகம், தொடர்ந்து ஏறும், மெதுவாய் காய்ச்சல், மேனியில் கூடும்! என்னைத் தீண்டாதே, இன்று என்னைத் தீண்டாதே! தீண்டும் நாள் வரும், இன்று என்னைத் தீண்டாதே.. இன்று போய் அன்று வா என் அன்பே!

உசுரக் குடிச்சுப் போனியே...!

உசுரக் குடிச்சுப் போனியே, என், உசுரக் குடிச்சுப் போனியே...! எதமா பதமா மழையில நனைஞ்சு, பனியில பூவா நான் நின்ன போது, உசுரக் குடிச்சுப் போனியே.. என், உசுரக்குடிச்சுப் போனியே...! நெத்தியில விழுந்த மழைத் துளி, அது, நெஞ்சுக்குழி தேடி ஒடுச்சே...! கண்ணுக்குள்ள விழுந்த உன் முகம், அது, கனவுல நெனவுல கபடி ஆடுதே.. நெஞ்சுக்குள்ள சடுகுடு சத்தம் போடுதே..! (உசுர குடிச்சுப் போனியே..) ஒருதரம் பாத்துட்டு போயிட்ட, ஒருமாசமா எண்ணி எண்ணி ஏங்குனேன்...! கூட்டுக்குள்ள ஒளிஞ்ச நத்தையா, என், நெனைப்பெல்லாம் மனசுல மறைக்கப் பாத்தனே, அது எட்டி எட்டி பாத்துதான் ஊர கூட்டுதே...! (உசுர குடிச்சுப் போனியே..)

கிறுக்கல்கள்!

இராமேஸ்வரத்தில் ஒரு கோவிலின் சுவரில் குருட்டுக் காதல் செய்யும் கூட்டத்திற்காக!! நூதனமாய் நடக்கும், நட்பிற்காக! "காதலிற்கு கண்கள் இல்லை" கூற்றை நான் நம்பத்தான் இல்லை! "ருபாய் நோட்டு, கோயில் சுவர்கள், பேருந்தின் ஜன்னல் ஓரம்! பார்க்கும் இடமெல்லாம், காதலியின் பெயரையும் உன் பெயரையும் கிறுக்கும் காதலுக்கு கண்கள் இல்லை தான்! நின் கண்கள் புண்கள் என உணர்ந்திடு!! "கிறுக்குவது பெருமையோ??" சிறப்பாக நிற்கும் , சரித்திரக் குறியீடுகளை, கிறுக்கிக் கிறுக்கியே, சீரழிக்கும் உன்னை, சரித்திரத்தில் இடம் பெறுவாய் என சரீரத்தை உருக்கி, குருதியை பிரித்து, பெற்றெடுத்த உன் அன்னை, வெட்கி வருந்துவதை உணர்ந்திடு!! கிறுக்குவது சரித்திரமோ?? நம் நாட்டை, நாடி வரும், நூற்றுக்கணக்கான வெளிநாட்டோர் நம்மை தூற்றுவது விருப்பமோ? நின் குருட்டுக் காதலாலும், கிருக்கல்களாலும், நன்மை தான் இல்லை, தீமை குறைத்திடேன்? உன்னால் நாடே நாணுது, உச்சியில் உரைக்கட்டும், உனது பிழை உணர்ந்திடு! கிறுக்குவது இன்பமோ? காதலர்கள் மாடுமல்ல

அதுவும் அவனும்!

சாரை சாரையாய், சர சரவென, சாலையோரம், செல்லும் வாகனங்கள். ஒருபுறம் , சாலையோர குப்பைத் தொட்டியில், சாய்ந்து நின்ற நான்கு பசுக்கள். தாய்ப் பசுவின் அரவணைப்பில், சுகமாய் சினுங்கிடும் செல்லக் கன்றுகள்!!! மறுபுறம், வானமே கூரையின் பொத்தல்களை விரிசல் இன்றி அடைத்திடும், கூரைக் குடிசை! கன்றுகள் கைவிட்டதால், தனியாய் வாழும், முதிர்ந்த பழமாய், தாய்ப் பசு!

வா அன்பே!!!!

மரணத்தின் வாசற் கதவை, இழுத்து மூடிவிட்டேன், வா அன்பே, பிரிவே இன்றி நேசம் செய்வோம்! உலகையே தூங்கச் செய்து, தனியாக நிற்கிறேன், வா அன்பே, மீண்டும் ஒரு முறை பேசிப் பார்ப்போம், பிரிவே இன்றி, பாசம் குறையாமல், வா அன்பே, தினமும் தினமும் தித்தித்திடுவோம்! கடவுளின் எழுத்தாணியை, களவாடி வந்துவிட்டேன், வா அன்பே, நம் காதல் கதையை நாமே தீட்டுவோம்!

கடந்திடுமே!

உடலின் அங்கங்கள் யாவையும், உருக்கும் அளவு சோகமா? உன் உயிரே உன்னை, அழிக்கும் நேரமா? உதிரம் உதிர்ந்து, உலகம் இருளும் வேளையில், உண்மை சொல்கிறேன், உனக்காக உறைந்திருப்பேன், உறங்காமல் விழித்திருப்பேன்... என் கண்ணீரைக் கொண்டு, உன் கனவுகளின் சோகங்கள் கூட, கழுவி எடுப்பேன், கிட்ட வா... எட்டிப் போகாதே... இப்படிக்கு நீருக்காக ஏங்கி நிற்கும், வாடாமல் வாடிடும் வாச மலர்!