புதன், ஏப்ரல் 11, 2012

அதுவும் அவனும்!

சாரை சாரையாய்,
சர சரவென,
சாலையோரம்,
செல்லும் வாகனங்கள்.

ஒருபுறம் ,
சாலையோர குப்பைத் தொட்டியில்,
சாய்ந்து நின்ற
நான்கு பசுக்கள்.
தாய்ப் பசுவின் அரவணைப்பில்,
சுகமாய் சினுங்கிடும்
செல்லக் கன்றுகள்!!!

மறுபுறம்,
வானமே கூரையின் பொத்தல்களை
விரிசல் இன்றி அடைத்திடும்,
கூரைக் குடிசை!
கன்றுகள் கைவிட்டதால்,
தனியாய் வாழும்,
முதிர்ந்த பழமாய்,
தாய்ப் பசு!


2 கருத்துகள்: