முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

September, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அத்தனைக்கும் ஆசைப்படு!

ஆயிரம் கனவுகள் இருந்தபோதும்,
ஒருசில மட்டுமே நனவாகும்!
கோடிகள் அதிலே இருந்துவிட்டால்,
ஆயிரம் நனவாகும் வாய்ப்பு தரும்!
நினைவு தெரிந்த நாள் முதலாய்,
ஆசை நிறைய, நிறைய உண்டு.
களிமண் பொம்மை உடைய வேண்டாம்,
காகிதக் கப்பல் கிழிய வேண்டாம்.

பாலின் நிறம் வெண்மை வேண்டாம்,
புல்லின் நிறம் பசுமை வேண்டாம்.
"இப்படி ஆசை இருந்த போது,
எப்படியம்மா நிறைவேறும்?
அது எப்படியம்மா நிறைவேறும்?"

இப்படி சொன்ன சிலருக்காக,
நல்லன சில நான் ஆசைப்பட்டேன்!
நம் நாட்டவர் கண்ணீர் கலைந்திடவும்,
சோகங்கள் எல்லாம் அழிந்திடவும்.

இதற்கும் இல்லை என்று சொன்னால்,
பேதை எங்கே சென்றிடுவேன்,
"அத்தனைக்கும் ஆசைப்படு"
சொன்னது யார்?
சொல்லுங்கள் அவரிடம்,
ஆசையே சாபம் என்று!