நல்லது என்று தான் நினைத்தேன்,
உனக்கு,
நல்லது என்று தான் நினைத்தேன்!
கசக்கும் காய்ச்சல் மருந்து போல,
கடுக்கும் வாத்தியார் தண்டனை போல,
நல்லது என்று தான் நினைத்தேன்,
உனக்கு.
முன்னே சிரித்து,
என் பின்னே பழிக்கிறாயே?
தோழன் என்று சொல்லி,
துரோகம் செய்கிறாயே?
முடிந்தால் நேராக,
முகத்தில் உமிழ்ந்து விடு!
முன் சிரித்தும்,
பின் நடிப்பும் வேண்டாமே?
கண்களால் தான்,
காலமெல்லாம் அழுது வந்தேன்!
இன்று உன்னால்,
என் முதுகும் அழுகிறது!
முடிந்தால் உதிரம் வழிய,
என் நெஞ்சில் குத்திவிடு.
முதுகில் ரணமாக்காதே!
மன்றாடிக் கேட்கிறேன்!
உனக்கு,
நல்லது என்று தான் நினைத்தேன்!
கசக்கும் காய்ச்சல் மருந்து போல,
கடுக்கும் வாத்தியார் தண்டனை போல,
நல்லது என்று தான் நினைத்தேன்,
உனக்கு.
முன்னே சிரித்து,
என் பின்னே பழிக்கிறாயே?
தோழன் என்று சொல்லி,
துரோகம் செய்கிறாயே?
முடிந்தால் நேராக,
முகத்தில் உமிழ்ந்து விடு!
முன் சிரித்தும்,
பின் நடிப்பும் வேண்டாமே?
கண்களால் தான்,
காலமெல்லாம் அழுது வந்தேன்!
இன்று உன்னால்,
என் முதுகும் அழுகிறது!
முடிந்தால் உதிரம் வழிய,
என் நெஞ்சில் குத்திவிடு.
முதுகில் ரணமாக்காதே!
மன்றாடிக் கேட்கிறேன்!
முதுகும் அழுகிறது "செம ஃபீலிங்க்"
பதிலளிநீக்குஎன்ன கிண்டல் அடிக்கிறீங்களோ?
நீக்குஎனினும் நன்றி :)
முதுகில் குத்தாதே கோழையே என்று சொல்லாமல் சொல்வது போல் உள்ளது தங்கள் கவிதை!
பதிலளிநீக்கும்ம் அது தான், அதே தான். கருத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
நீக்குவா(ழ்)(ரம் ஒரு மு)த்துகள் சகோதாரி!!
பதிலளிநீக்குநன்றி :)
நீக்குஒருவரின் முதுகுக்குப்பின்னால்
பதிலளிநீக்குசெய்யக் கூடிய ஒரே காரியம்
தட்டிகொடுப்பதுதான் என ஒரு
அருமையான பொன்மொழியைப் படித்திருக்கிறேன்
ஆயினும் பெரும்பாலும் இப்போதெல்லாம்
துரோகங்கள்தான் அதிகம் அரங்கேறுகின்றன
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ஐயா.
நீக்கு//முடிந்தால் நேராக,
பதிலளிநீக்குமுகத்தில் உமிழ்ந்து விடு!
முன் சிரித்தும்,
பின் நடிப்பும் வேண்டாமே... loved this line :) sooper :)
நன்றி அண்ணா. ரொம்ப நாள் ஆச்சு உங்க கவிதை வாசிச்சு. வாசிக்க இதோ வரேன் உங்க வலைப்பூவிற்கு :)
பதிலளிநீக்குகவிதை முதுகில் குத்தும் கோழைகளை படம் பிடித்துக் காட்டுகிறது, கண்மணி!
பதிலளிநீக்கு//தோழன் என்று சொல்லி
துரோகம் செய்கிறாயே?'
என்ற வரிகளில் வலியை உணர முடிகிறது
நாளை தொடங்கும் வாரத்தில் உங்களை 'வலைச்சரம்' இணையத்தில் இந்தக் கவிதையுடன், பெருமையுடன் அறிமுகம் செய்கிறேன். தவறாமல் படிக்கவும்.
அன்புள்ள
ரஞ்ஜனி
உங்களது இந்தப் பதிவு பற்றி இன்றைய வலைச்சரத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குவருகை தருக, ப்ளீஸ்!
http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_10.html
நன்றி!
இன்னிக்கு தான் கல்லூரி விடுதில இருந்து வந்தேன். :( மன்னிக்கணும் அம்மா :(
நீக்குஎன் நெஞ்சில் குத்திவிடு.
பதிலளிநீக்குமுதுகில் ரணமாக்காதே!
கனக்கும் வரிகள் !1
நன்றி... கனமாகத் தான் இருக்கிறது பல நேரங்களில்!
நீக்குமுடிந்தால் உதிரம் வழிய,
பதிலளிநீக்குஎன் நெஞ்சில் குத்திவிடு.
முதுகில் ரணமாக்காதே!
மன்றாடிக் கேட்கிறேன்!
அன்பின் கண்மணி - அருமையான கவிதை - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
மிக்க நன்றி :)
நீக்கு