முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்

ஆசான் ஆனேன்!

"அ ஆ இ ஈ...", இப்படி அழகாகச் சொல்லிக் கொண்டு இருந்தேன் நான், என் தந்தை சொல்லச் சொல்லக் கிளிப்பிள்ளை போல. பள்ளிக்குச் செல்லும் முன்பே அழகாக "ஒன்று இரண்டு மூன்று ..", நூறு வரை சொல்வேனாம். "க கா கி கீ...", "க ங ச ஞ....", எல்லாமே சொல்வேனாம். அதுவும் கொஞ்சிக் கொஞ்சி அழகாகச் சொல்வேனாம். :D இப்படி நான் முதலில் பேசக் கற்றுக் கொண்டது தொட்டு நிறைய சொல்லித் தந்திருக்கிறார் என் அப்பா எனக்கு. "அப்பாக் குட்டி..", இப்படித் தான் என்னை அழைப்பார், சிறுவயதில். எனக்கும் அபாவுக்கும் அப்படி ஒரு பிணைப்பு. எல்லோர் வீட்டிலும் இருக்கத்தானே செய்யும். இது ஒன்றும் புதிதல்ல. இன்று எனக்கும் என் அப்பாவுக்கும், உள்ளே அதே அன்பு இருப்பினும், நான் வளர்ந்து விட்ட காரணத்தால், என்னை "குட்டி, செல்லம்.., அப்பாக் குட்டி..", என்றெல்லாம் இன்று அவர் அழைப்பதில்லை! :( ஏன்.. என் பெயர் சொல்லிக் கூட அழைப்பதில்லை.. இல்லை, என்னை அழைப்பதே இல்லை என்று சொல்லலாம்... காரணம் என்ன? "நான் வளர்ந்துவிட்டேன்.., பெரியவளாகிவிட்டேன்.." ஆனால், என்னுடன் பேசாமல் எல்லாம் இர

பெண்மையற்ற பெண்!

கல்லூரியின் கடைசி நாள், தோழர்களை தோழிகளை பிரியப் போகிறோமே என்ற சோகத்தில் அனைவரும் இருக்க, நானோ பெரும் தவிப்பில், குழப்பத்தில் இருந்தேன். மரத்தடி, அந்த ஸ்டோன் பெஞ்சில் நானும் அவனும் அமர்ந்திருந்தோம், என் கைகளைப் பற்றி அழுதவாறு இருந்தான். கண்ணீர் என் கைகளை நனைத்துக் கொண்டிருந்தது. இதுவரை என் கைகளை அப்படி யாரும் பிடித்ததில்லை, மனம் விட்டு அழுததும் இல்லை, அவனும் என் கையை அன்று தான் முதன் முறையாகப் பிடித்திருந்தான். அந்தத் தொடுதல், அந்தப் பிடிப்பில், அன்பு, என் அம்மா என் மீது கொண்ட அன்பு போல பரிசுத்தமான அன்பு. அந்தக் கண்ணீரின் வெது வெதுப்பு, என்னுள் என்னவோ ஒரு உணர்வை உண்டு செய்து கொண்டிருந்தது. அவன் கையைத் தட்டி விடவும் முடியாமல், பிடித்துக் கொள்ளவும் முடியாமல், அப்படியே கீழ் குனிந்து அமர்ந்திருந்தேன். நிறுத்தாமல் அவன் கண்ணீரால் என் கைகளை நனைத்துக் கொண்டு இருந்தான். “ அழகாய் பூக்குதே, சுகமாய் தாக்குதே, அடடா காதலில் சொல்லாமல்... ”, என் அலைபேசி சிணுங்கி, அமைதியைக் கலைத்தது. என் கைகளை மெதுவாக விடுவித்தான். அலைபேசியை எடுத்தேன், அழைத்தது என் அம்மா. “ அம்மா.. .”

குறுஞ்செய்தி!

sms இரவும் பகலும், அவள் அவனுக்கும், அவன் அவளுக்கும், அனுப்பிடும் தூது! குரல் கேட்காமலே, காதல் பெருகிடும், அற்புதம் இங்கே! "குட் மோர்னிங்" தொடங்கி "குட் நைட்" வரை, ஓயாது "பீப்" ஒலி இங்கே! எல்லாம் இருந்தும், இரு வரிகளில் இறந்து கிடக்குது ஆங்கிலமும் தமிழும்! இவர்கள் காதல் வளர்ப்பதர்க்காய்!