இப்படி நான் முதலில் பேசக் கற்றுக் கொண்டது தொட்டு நிறைய சொல்லித் தந்திருக்கிறார் என் அப்பா எனக்கு. "அப்பாக் குட்டி..", இப்படித் தான் என்னை அழைப்பார், சிறுவயதில். எனக்கும் அபாவுக்கும் அப்படி ஒரு பிணைப்பு. எல்லோர் வீட்டிலும் இருக்கத்தானே செய்யும். இது ஒன்றும் புதிதல்ல.
இன்று எனக்கும் என் அப்பாவுக்கும், உள்ளே அதே அன்பு இருப்பினும், நான் வளர்ந்து விட்ட காரணத்தால், என்னை "குட்டி, செல்லம்.., அப்பாக் குட்டி..", என்றெல்லாம் இன்று அவர் அழைப்பதில்லை! :(
ஏன்.. என் பெயர் சொல்லிக் கூட அழைப்பதில்லை.. இல்லை, என்னை அழைப்பதே இல்லை என்று சொல்லலாம்... காரணம் என்ன?
"நான் வளர்ந்துவிட்டேன்.., பெரியவளாகிவிட்டேன்.."
ஆனால், என்னுடன் பேசாமல் எல்லாம் இருக்கமாட்டார். பேசுவார். அப்பாவோடு பேசுவதென்றால் அத்தனை ஆனந்தம்!
சரி, விஷயத்திற்கு வருவோம். இன்று நான் பெரியவளாகிவிட்டேன், கல்லூரிக்குச் செல்கிறேன். என்னைப் பார்த்து உள்ளே என் தந்தைக்கு அத்தனை ஆனந்தம். ஆனால், வெளியே காட்டிக் கொள்ளமாட்டார்!
நான் வலைப்பூ எழுதுவது அவருக்குத் தெரியும், ஆனால், என் வலைப்பூவை அவை வாசிக்கிறாரா என்று கூட எனக்குத் தெரியாது. ஆனால், என்னைப் பார்த்து அப்பாவிற்கும் ஆசை வந்துவிட்டது!
ஆம், என்னிடம் வந்து, "எனக்கும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கணும்..", இப்படிச் சொன்னார்.
:) :) :) எனக்கு அத்தனை ஆனந்தம். சரி என்று அப்பாவுக்கு எப்படி வலைப்பூ தொடங்க வேண்டும் என்று சொன்னேன்.
பாவம், அப்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அருகே உட்கார வைத்து, எல்லாம் சொல்லிக்கொடுத்தேன், இதோ இன்று ஒரு பதிவு போட்டிருக்கிறார். முகப்புத்தகம், மின்னஞ்சல்... இப்படி எல்லாம் சொல்லிக்கொடுத்தேன், ஒரு முறை சொன்னால் அப்பாவுக்கு புரியாது, இரு முறை சொல்ல வேண்டும்...
"ச, போங்கப்பா.. ஒரே மக்கா இருக்கீங்க...", இப்படி விளையாட்டாய் கோபித்துக் கொண்டும், திட்டிக் கொண்டும் சொல்லிக் கொடுத்தேன் :)
இப்படி எனக்கு "அ ஆ.." சொல்லிகொடுத்த ஆளையே இன்று அதட்டி ஆசான் ஆகிவிட்டேன் :P :P :D :)
நான் ரொம்ப கண்டிப்பான ஆசிரியை தெரியுமா.. :)
என்னுடைய தந்தை இன்று எழுதிய பதிவைக் கூட பலமாக கேலி செய்தேன் என்றால் பாருங்களேன்.. :)
இது போல், ஒரு நாள் பிள்ளைகளிடம் கற்றுக் கொள்வதில், எல்லாப் பெற்றோருக்கும் அத்தனை ஆனந்தமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். இதோ, என்னிடம் கற்றுக் கொண்டு என் தந்தை உள்ளுக்குள் அவ்வளவு சிரித்தாரே...
என் தந்தையின் பதிவு படிக்கலாம் இங்கே! (ரொம்ப மோசமான பதிவு இல்ல?) :) என்ன இருந்தாலும் நம்மள மாதிரி எழுத முடியுமா.. :) :)
Ha ha..same thing in my family... Dad and me..:) It happens in the families of most bloggers! Happy blogging family!
பதிலளிநீக்கு:) Happy blogging :)
நீக்குநல்ல பதிவு... தங்களின் எழுத்து நடை நன்றாக இருக்கிறது..
பதிலளிநீக்குரொம்ப நன்றி @ ஸ்கூல் பையன்.
நீக்குஇதோ செல்கிறேன்... தங்களின் தந்தை தளத்திற்கு...
பதிலளிநீக்குநன்றி....
இப்போத்தான் போய் பார்த்துட்டு வந்தேன்... நல்லாத்தான் துவக்கியிருக்காரு....என் பார்வையில் உங்களை விட அவர் நல்லா வருவார்ன்னு நினைக்கிறேன் ஹி ஹி ஹி!
பதிலளிநீக்குஎங்கப்பா நல்லா வந்தா எனக்கு தானே பெருமை :) :D
நீக்குபெருமைப்படுகிறேன், கூடவே பொறாமையும் படுகிறேன்...! நான் பதிவிடுவது எங்கள் வீட்டாருக்கு தெரியும் ஆனால் என் பதிவுகள் ஒன்றை கூட என் அப்பாவோ அம்மாவோ படித்தது இல்லை, எதோ நான் படி என்று சொல்லி கொடுக்கும் சில பதிவுகளை அவ்வப்போது என் தங்கை படிப்பாள்.நான் எழுதுவது என் தந்தையின் பெயரில் தான் (என் பெயர் விஜயன் இல்லை !)
பதிலளிநீக்குஅட, நீங்க வேற, எங்கப்பாவும் தினமும் எல்லாம் என் பதிவ படிக்க மாட்டாங்க, வேலை நெறைய இருக்குனு சொல்லிடுவாங்க, அதான் இப்போ அவங்களையும் பதிவு போட வச்சிட்டேன், இனி தினமும் என் பதிவ வாசிக்க முயற்சி செய்வாங்கன்னு நம்பறேன்.
நீக்குநன்றி, ஆமா.. உங்க உண்மையான பெயர் என்ன?