முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

October, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தாகம் தீரட்டும்

நேரில் பார்க்கும் போதெலாம்.,
வெட்கம் வீசிச் செல்லும் .,
அழகே.,

விடிய விடிய உன்
புகைப்படம்
பார்த்தேன்..

அழகாய் சிரித்த முகம்.,
அன்பாய் சரிந்த புன்னகை.,
அதிலும் வெட்கம் ஏனோ?
புகைப்படம் தானே?
பூவே அதிலும் வெட்கமென்ன?

நிமிர்ந்து பாரடி நாளையாவது., என்
நீண்ட நாட்கள் தாகம்.,
நாளையேனும் உன் வெட்கத்
தூரலில் தீரட்டும்...

உண்மைப் பொய்கள்

பேசாமல் இருப்பினும்,
பாவம் என் மனம்,
அழுததேனோ?

பிழை
யாருடையது எனினும்,
ரணம் இருவருக்குமல்லோ?

நட்பின் சீண்டல்கள்.,
நிலவைப் போல்,

தேயும் வளரும்.,
தினம் ஒரு வண்ணம்.,
காட்டும்..

தோழா ஒரு நாளும்.,
தொலையாது...

பிறை போல் என்றும்.,
தேய்ந்தும் வளர்ந்தும்.,
தொலையா நட்பின் .,
சீண்டல்கள்.,
உண்மைப் பொய்களடா...

கவிதையாய்...

சில நினைவுகள்,
சிலிர்க்கும் நிஜங்கள்.,
சில சில்மிஷங்கள்,
சின்ன ஆசைகள்,
சீரிய சிந்தனைகள்.,
சிதறும் எண்ணங்கள்...

இருட்டின் மறுபக்கம்,
இளமையின் இன்பங்கள்.,
இனிய இம்சைகள்.,

நட்பின் வாசம்.,
நேசத்தின் புனிதம்.,
நெஞ்சத்தின் குமுறல்.,
நீயும் இதில் அடக்கம்....

உணர்வுப் பரிமாற்றம்.,
உன்னத சங்கமம்.,
கலந்திடுவோம்.,
கள்ளமில்லாமல்.,
கவிதையாய்...

பெண் பாவம் :

இமை ஓரம் நீர் துளி.,
இது என்ன உயிர் வலி..
பிரிவென்னும் ரணமடி..
பெண்ணே..
பெண் பாவம் நீயடி...

பொய் பேசும் விழியடி.,
புண்ணானது நானடி...

நீ வந்த ஒரு நொடி..
நிழல் கூட நிஜமடி...

நீ சென்ற மறு நொடி..
நான் ஆனேன் நிழலடி

நிழல் கூட மறையும் முன்.,
நீ வந்து சேரடி..
பெண்ணே, என்னிடம்,
நீ வந்து சேரடி...

தோழமைக் கரங்கள் :-

பூக்கள் பூக்கும் சோலை.,
பளிங்கு போல சாலை.,

பிஞ்சுகளுக்கெல்லாம் கல்வி.,
பெரியோருக்கெலாம் அன்பு.,

பாகு பாடற்ற அரசு.,
பண்பான தலைவர்கள்.,

சுய மரியாதை இழக்கா மக்கள்.,
சுயமாய் சிந்திக்க அறிவு.,

ஈரம் நிறைந்த இதயம்.,
இமாலய அறிவியல் உயர்வு.,

கனவல்ல இவை நமக்கு.,
கடல் அளவு உழைப்போம்.,
கை கோர்ப்போம்...

வா தோழா.,
தோழமை கைகள் .,
துவளாமல் உழைப்போம்.,
துருவங்கள் திரும்பட்டும் .,
தோழா நம் உழைப்பைக் கண்டு...

உன்னதம் , உயர்வு, உழைப்பு :

உடலை பாலமாகி.,
உயிரை நேசமாகி.,
உதவும் பண்பு.,
உள்ளவரை.,
உன்னதம் கொள்ளும்.,
உறுதி பெரும்.,
நம் தேசம்..

இந்த உறுதியும் நேசமும்.,
இந்த மண்ணின் மைந்தர்.,
அனைவரும் பெற்றிடும் நாள் எதுவோ.,
அன்றே உயர்ந்த தேசமாய்.,
உயர்வோம் நாம் பாரினிலே!

புத்தாடை நனைய....

வீடெல்லாம் தீபம் ஏற்றி.,
விழி மூடாமல் காத்திருந்தேன்.,

புத்தாடை கட்டி.,
புன்னகையோடு காத்திருந்தேன்,

கார் வானம் திறந்து.,
கண்ணீர் போல வந்தாய்.,

இனிமையாய்..
இன்பம் சேர்க்க .,
என் புத்தாடை நனைக்க.,
தீபம் அணைக்க.,

புயலாய் வந்தாய்,
பண்டிகை அன்றும்.,
என்னை பிரியா உறவு.,
நீ மட்டும் தான் மழை...

வானின் பிழை மேகமோ???

பிழைகளை புரிய..
பிரிந்து செல்...

என் பிழைகள் சொல்லி.,
என் இதயம் கிழித்து.,
எறியாதே...

கார்மேகம் வானத்தின்.,
பிழை என்றால்...,,
மழை என்ன பாவமோ??!!!

மேகம் வானின்
பிழையாக இருப்பினும்...
அந்த பிழையே.,
அதன் அழகு...

பிழை இல்லா உயிர் தேடி.,
நீ நடத்தும்.,
தேடலில்...
தோல்வி நிச்சயம்...

தோற்றபின்.. என்னை.,
தேடி அலையாதே...
தோள் சாய்ந்திடு .,
இக்கணமே....

பிழை வேண்டும்...

சிறு சிறு பிழை கூட.,
சித்திரமாய் தோன்றும்..

வியர்வை வழிய.,
அம்மா தரும் காபி..
குளிக்காமல் தம்பி தரும் முத்தம்.,
கை கழுவாமல் ஊட்டி விடும் பாட்டி.,
அப்பாவின் அழுக்குச் சட்டையில்.,
அழுந்த முகம் புதைத்து .,
அயர்ந்து உறங்கிய காலம்.,
ஆயிரம் பொன் கொடுத்தாலும்.,
அந்த சொர்க்கம் கிட்டாது.,

ஏங்குகிறேன்....
பிழைகள் நிறைந்த .,
தேடல் தொடர்கிறது..

சாரல்..

"பேசாத போ "
" லூசு " அழகாய் நீ சொல்லும்,
வார்த்தைகள் கேட்கும் போதெலாம்..
நிதம் நனைகிறேன் இன்பச்
சாரலில்...

நினைவுகள் சுடும் நேரம் கூட...
நீ சொல்லும் பொய்கள் கேட்டு.,
மூழ்குகிறேன் ஆசைச் ,
சாரலில்.,

மீண்டும் ஒரு முறை சிரிக்காதே.,
மெய் மறந்தேன்.,
உன் பார்வைச்
சாரலில்...

ஆணும் பெண்ணும் :-

இருளில் வெளிச்சமாக பெண் இருப்பின்..
விளக்கின் திரியாக ஆண் வேண்டும்...

இரவில் நிலவாக பெண் இருப்பின்...
ரசிக்கும் இமையாக ஆண் வேண்டும்...

இன்று பூவாக பெண் இருப்பின்...
இனிக்கும் தேனாக ஆண் வேண்டும்...

இமைக்கும் கண்களாக பெண் இருப்பின்...
கருவிளியாக ஆண் வேண்டும்...

இனி இனிதே இணைவோம்,
நட்பின் நிழலில்...
இறுக்கம் இன்றி..
குறை கூறாமல்.,


ஆண்பால் பெண்பால், ஒன்றானது
நட்பால்..

ஊமைக் காதலன்...

இருண்ட அறையில்.,
சுருண்டு கிடந்தேன்.,
வலியின் விளிம்பில்.,துடித்துக் கிடந்தேன்.,

" அய்யோ போதும்",
வெந்து கிடந்தேன்.,
வாசலில் உன் சத்தம்,
" சி பிரம்மை" என்று
சாளரம் திறந்தேன்....

"நீ தான் அது...."
வேதனை துன்பம்,
வடிந்தோட...
வெளிச்சம் பாய்ந்து,
ஊடுருவ.,
" உருகினேன் உயிரே...
நீ எனக்கு மட்டும் என்று.."

நீயோ..
ஊருக்கே பொழிகிறாய் , என்
ஊமைக் காதலன்..
துளித் துளியாய்.,
மழைத் துளியே...

பஸ் ஸ்டாப் பதுமை - நிலாஷா பாரதி....

காலைல பதட்டமா,
பட படன்னு கெளம்பி,
பஸ் ஏற வந்தா,
நீ மட்டும் தான் சந்தோஷம் அங்க,
உன்ன பாக்கவே சீக்கிரம் வர தோணுது...

அன்னிக்கு ஒரு நாள் அழகா வந்து,
சிரிச்சு பாத்த என்ன,
அழகோ அழகு,
கொள்ள அழகு...

அடுத்த நாளு,
அம்சமா வந்து,
கோவமா மொகத்த திருப்பி உக்காந்த,
என்னனு உன்  பாட்டிட்ட கேட்டா..
"இடுப்புல தூக்கிட்டு வரலன்னு கோவமாம்
அம்மனிக்கு..

சிரிக்கிற ஒரு நாள்,
மொறைக்கிற ஒரு நாள்.,
ஐயோ...
குட்டி பொண்ணுனா அவ்ளோ அழகா...
நீ தான்  என் ஹீரோஇன் என் குட்டி தேவதையே...
பேர கேட்டா சொல்ல மாட்ட,
" நிலாஷா பாரதி L.K.G "c" "
நானா பாக்கணும் ஐ.டி கார்ட்ல,
அதுக்கும் மொரப்ப ஓர கண்ணால...
:) என் செல்ல குட்டி நிலாஷா.... :)